/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்று இனிதாக ... (21.12.2025) மதுரை
/
இன்று இனிதாக ... (21.12.2025) மதுரை
ADDED : டிச 21, 2025 05:09 AM
கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.
'ஓ' பிக் ஷூ வின் 107ம் ஆண்டு விழா: பதஞ்சலி மகரிஷி கோயில், கோச்சடை, மதுரை, வலம்புரி விநாயகர், அறுபடை ஆறுமுக வேலவனார் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, காலை 6:00 மணி முதல்.
பூராடம் நட்சத்திரத்திற்கான மார்கழி விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி,
ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை: ராஜ் நகர், சம்மட்டிபுரம், மதுரை, மண்டல பூஜை, காலை 10:30 மணி, அன்னதானம், ஏற்பாடு: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம்,காலை 11:00 மணி.
சிறப்பு பூஜை: முனியாண்டி கோயில், பொன்மேனி, மதுரை, கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5:00 மணி, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.
பக்தி சொற்பொழிவு கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா: நிகழ்த்துபவர் - சண்முக திருக்குமரன், மொட்டை விநாயகர் கோயில், கீழமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.
விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், ஆனந்த குடீர் பவுண்டேஷன், வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், சிம்மக்கல், மதுரை, மாலை 5:45 மணி.
45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை,தலைமை: ஜனரஞ்சனி, முன்னிலை: கீதா, கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி,காலை 7:30 மணி.
விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, ஐயப்பன் கோயில் எதிரில், சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசிவீதி, மதுரை, மாலை 5:00 மணி.
மனமும், புத்தியும்: நிகழ்த்துபவர் -- கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை,இரவு 7:00 மணி.
மறை தந்த மாமுனிவர்கள்: நிகழ்த்துபவர் -- கோவிந்தராஜ பட்டாச்சாரியார்,மதன கோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
மார்கழி சத்ஸங்கம், திருப்பள்ளி எழுச்சி, கீதை பாராயணம், பஜனை, புஷ்பாஞ்சலி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன்கோயில், மதுரை, காலை 6:00 மணி.
72 வது ஆண்டு பாவை விழா:திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன்கோயில், மதுரை, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவைப் பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.
சாரதா தேவி வாழ்க்கை வரலாறு: நிகழ்த்துபவர் -- சுவாமி தயாசாகரானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
லலிதா ஸகஸ்ரநாம பாராயணம், ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை: நிகழ்த்துபவர் -- சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 முதல் 10:15 மணி வரை, தாயுமானவர் சுவாமி பாடல்கள்: நிகழ்த்துபவர் -- சுவாமி சமானந்தர், இரவு 7:00 முதல் 8:00 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் -- முகுந்தராஜன் சுவாமிகள், கூடலழகர் கோயில், மதுரை, காலை 7:30 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் - - ஜகந்நாத ராமானுஜ தாசர், வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, காலை 6:30 மணி, மாலை 6:30 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் - - சுஜாதா, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி.
பொது வேங்கடரமண பாகவதரின் 245 வது ஜெயந்தி இசை விழா: கீதா நடனகோபால் நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, அரசுஇசைக்கல்லுாரி மாணவர்களின் இசை நிகழ்ச்சி:காலை 9:30 மணி, ஸமாஜ மூத்த உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா: தலைமை: ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரி ராஜ்குமார், காலை 10:30 மணி, கீதாபாரதி குழுவினரின் இசை நிகழ்ச்சி: மதியம் 12:00 மணி, ராணி லேடி மெய்யம்மை தமிழ் இசைக் கல்லுாரி மாணவர்களின் இசை நிகழ்ச்சி, மாலை 5:00 மணி, பாலு குழுவினரின் இசை நிகழ்ச்சி, இரவு 7:00 மணி, ஆஞ்சநேய உற்ஸவம், ஏற்பாடு: வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவத சேவா ஸமாஜம், இரவு 7:00 மணி.
245 வது ஜெயந்தி இசை விழா: சவுராஷ்டிரா சபை, 13, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, வேங்கடரமண பாகவதரின் வாக்கும், வாழ்வும் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் -- சண்முக திருக்குமரன், காலை 10:30 மணி, தலைமை: சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி, இசை நிகழ்ச்சிகள், காலை 11:30 முதல் இரவு 7:00 மணி வரை, ஆஞ்சநேயர் உற்ஸவம், ஏற்பாடு: மதுரை சவுராஷ்டிரா சபை, வேங்கடரமண பாகவதர் சேவை சங்கம்,இரவு 7:00 மணி.
51ம் ஆண்டு தமிழ் இசை விழா: கவுசிகி லாலாதிகா பட்நாயக்கின் ஒடிசி நடன நிகழ்ச்சி, ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.
முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்க கூட்டம்: ஸ்ரீராம் மகால், கோசாகுளம், மதுரை, தலைமை: தலைவர் ரகுநாதன், காலை 9:00 மணி.
டி.என்.பி.எஸ்.சி., அரசு தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள்: கோவிந்த தாஸ ஸேவா ஸமாஜம், 25, மஹால் 6 வது தெரு, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா ஸபா, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
திருக்குறள் பயிற்சி வகுப்புகள்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, பயிற்சி அளிப்பவர்: காந்தி கிராம பல்கலை உதவிப் பேராசிரியர் சிவா, தலைமை: தாளாளர் வரதராஜன், ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித் துறை, காலை 9:30 மணி முதல்.
இலவச ஹார்மோனியம், மிருதங்கம் பயிற்சி வகுப்பு: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை.
இலவச தியான பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலாளர் நந்தாராவ், காலை 7:00 மணி.
காந்திய சிந்தனை சான்றிதழ் வகுப்பு: ஆரோ லேப், வீரபாஞ்சான், தலைமை: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், ஏற்பாடு: காந்தி மியூசியம், காலை 9:30 மணி.
உலக தியான தின விழா: விஷ்வ சாந்தி பவன், 30, மீனாட்சி நகர், தபால் தந்தி நகர், மதுரை, ஏற்பாடு: பிரம்மா குமாரிகள், மாலை 6:00 மணி.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: எம்.பி.சி., ஹால், மாபாளையம், மதுரை, ஏற்பாடு: ஒயிஸ்மென் கிளப் மென் ஆப் மதுரை, காலை 11:00 மணி.
உலக தியான தினத்தை முன்னிட்டு தியானநிகழ்ச்சி: விஸ்வசாந்தி பவன், தபால்தந்தி நகர், மதுரை, ஏற்பாடு: பிரம்ம குமாரிகள் அமைப்பு, மாலை 6:00 மணி.
தி ரீஜென்ட் டெக்ஸ்டைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா: 135/2ஏ3சி, அவனியாபுரம் பைபாஸ் ரோடு, டி மார்ட் அருகில், மதுரை, காலை 9:30 மணி.
மருத்துவம் இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, மதுரை,காலை 8:00 முதல் இரவு 7:00மணி வரை.
இலவச கண் பரிசோதனை முகாம்: ராமக்கிருஷ்ண மடம்,ரிசர்வ் லைன், மதுரை, பங்கேற்பு: அரவிந்த் கண் மருத்துவமனை, காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
விளையாட்டு எலும்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வேல் மருத்துவமனை நடத்தும் 'மதுரை மாரத்தான் 2025' போட்டி: காந்தி மியூசியம், மதுரை, காலை 6:00 மணி.

