/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்று இனிதாக ... (.22.02.2026) மதுரை
/
இன்று இனிதாக ... (.22.02.2026) மதுரை
ADDED : பிப் 22, 2026 05:43 AM
கோயில்
மாசி மகம் தெப்பத்திருவிழா - 3ம் நாள்: கூடலழகர் கோயில், மதுரை, மாட வீதியில் தங்கச் சிவிகையில் ஏகாந்த சேவை, காலை 9:00 மணி, அனுமார் வாகனம், இரவு 7:00 மணி.
மாசி பெருந்திருவிழா - 2ம் நாள்: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, சுவாமி வீதியுலா, காலை 10:00 மணி.
கும்பாபிஷேகம்: தேவி கருமாரியம்மன் கோயில், மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு, மதுரை, கோபுரம், சுவாமிகளுக்கு புனிதநீர் ஊற்றுதல், காலை 10:45 முதல் 11:15 மணிக்குள், அன்னதானம், மதியம் 1:00 மணி, திருவிளக்கு பூஜை, மாலை 4:00 மணி, அம்மன் ஊர்வலம், மாலை 5:00 மணி.
கும்பாபிஷேகம், வெங்கல காளீஸ்வரர் கோயில், மூவன் சிவல்பட்டி, கொட்டாம்பட்டி, காலை 8:30 மணி.
வளர்பிறை சஷ்டி விழா: தங்கமய முருகன் கோயில், சேவுக பெருமாள் நகர், விளத்துார், பாலபிஷேகம், காலை 8:30 மணி, அன்னதானம், காலை 11:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.
பக்தி சொற்பொழிவு
வள்ளுவர் வழியில் கம்பர்: நிகழ்த்துபவர் -- முத்துசந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
அனுமன் சாலீசா, கீதை பாராயணம்: யாதவா கல்லுாரி, மதுரை, துவக்கி வைப்பவர்: கல்லுாரி செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், சிறப்புரை: சுவாமி சிவயோகானந்தா, சிறப்பு விருந்தினர்கள்: ஓட்டல் பார்க் பிளாசா தலைவர் கே.பி.எஸ். கண்ணன், கல்லுாரி தலைவர் ஜெயராமன், முதல்வர் ராஜூ, கத யோகம் நுால் வெளியீடு, ஏற்பாடு: சின்மயா மிஷன், காலை 8:30 மணி.
ராமகிருஷ்ணரின் வாழ்வும், வாக்கும்: நிகழ்த்துபவர் - சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம் - விளக்கவுரை, காலை 9:15 மணி, சுவாமி சமானந்தரின் தாயுமானவர் சுவாமி பாடல்கள் விளக்கவுரை, இரவு 7:00 மணி.
தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
பொது
எண்மர் போற்றும் எண் குணத்தான் - நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்: அபிநவ வித்யா தீர்த்த சபா மண்டபம், சிருங்கேரி சாரதா அம்பாள் கோயில், பைபாஸ் ரோடு, மதுரை, இசையரங்கம் நிகழ்த்துபவர்: குமாரசாமிநாத தேசிகர், மாலை 5:00 மணி, உரையரங்கம் நிகழ்த்துபவர்: திண்டுக்கல் சிவபுர ஆதீனம் குருமகா சன்னிதானம் திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஏற்பாடு: சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சார்ய மஹாசமஸ்தானம் தட்சிணாம்னாய சாரதா பீடம், மாலை 6:50 மணி.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 140 அடி உயர சிலைக்கான அடிக்கல்நாட்டு விழா: அம்மா திடல், வண்டியூர், மதுரை, தலைமை: புதிய நீதிக்கட்சி நிறுவனர் சண்முகம், அடிக்கல் நாட்டுபவர்: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், ஏற்பாடு: ஏ.சி.எஸ்., அறக்கட்டளை, மாலை 4:00 மணி.
முக்கடல் சங்கமத்தில் முப்பால் நாயகன் - சிந்தனை கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: பேராசிரியர் சக்திவேல், ஏற்பாடு: மாமதுரை கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.
மதுரை - வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், அவனியாபுரம் தொழில் வர்த்தக சங்க அலுவலகம் திறப்பு விழா: 9/3ஏ, 2வது மேற்கு குறுக்குத் தெரு, எச்.பி., பெட்ரோல் பங்க் எதிரே, வில்லாபுரம், மதுரை, தலைமை: தலைவர் தாமோதரன், காலை 11:00 மணி.
ஹோப் அண்ட் ட்ரீம்ஸ் - புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காக நன்கொடையளித்தவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி: மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை, சிறப்பு விருந்தினர்: தன்னம்பிக்கை பேச்சாளர் சுபாஷ்சந்திரன், ஏற்பாடு: டாக்டர் காசி விஸ்வநாதன், காலை 10:00 மணி.
டி.என்.பி.எஸ்.சி., குரூப் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி: கோவிந்த தாஸ சேவா சமாஜம், மஹால் 6வது தெரு, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிரா சபா, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
இயற்கை வாழ்வியல் முகாம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், சிறப்பு விருந்தினர்: மேலுார் அரசு மருத்துவமனை இயற்கை டாக்டர் அக்னேஷ் அனாமிகா, சிவகங்கை செம்மண் நலவாழ்வு மையம் நிறுவனர் சேதுபதி, காலை 10:00 மணி.
இலவச மிருதங்கம், ஹார்மோனியம் வகுப்பு: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதியம் 12:00 மணி.
பள்ளி, கல்லுாரி
ஐ கிரியாஸ் - மாணவர்களின் கிரியேட்டிவ் எக்ஸ்போ: ஜெயின் வித்யாலயா பள்ளி, திருப்பாலை, மதுரை, முன்னிலை: முதல்வர் விஜயகுமாரி, நிர்வாக தலைமை: ராஜேஷ் வோரா, சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், கவுரவ விருந்தினர்கள்: இமேஜ் குரூப் ஆப் கிரியேட்டிவ் எஜூகேஷன் இயக்குநர் லட்சுமி, பள்ளி தாளாளர் நிலேஷ் சங்கோயே, காலை 10:00 மணி.
மாணவர்கள் கல்வி முன்னேற்றத்திற்காக ஹயக்ரீவர் ஹோமம்: வெள்ளியம்பலம் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி, தெற்கு சித்திரை வீதி, மதுரை, ஏற்பாடு: ராஜராஜேஸ்வரி ஆன்மிக இலக்கிய மன்றம், காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

