sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்று இனிதாக ... (24.01.2026) மதுரை

/

 இன்று இனிதாக ... (24.01.2026) மதுரை

 இன்று இனிதாக ... (24.01.2026) மதுரை

 இன்று இனிதாக ... (24.01.2026) மதுரை


ADDED : ஜன 24, 2026 05:06 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் தெப்ப உற்ஸவம் 4ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன், சுவாமி தங்கச்சப்பரத்தில் அம்மன் சன்னதி தெரு, கீழமாசிவீதி, கீழவடம் போக்கித் தெரு, கீழவெளிவீதி, நெல்பேட்டை வழியாக ஆட்டுமந்தை 18ம் கோட்டை பரதேசிமண்டபம் சேருதல், காலை 9:00 மணி, மண்டபத்தில் இருந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனும், சுவாமியும் கீழ வெளிவீதி, சுவாமிசன்னதி தெரு, கீழமாசிவீதி, அம்மன் சன்னதி வழியாக கோயில் வந்தடைதல், மாலை 6:00 மணி.

தைப்பூசத் திருவிழா: சோலைமலை கோயில், அழகர்கோவில், யாக சாலை பூஜைகள், காலை 8:30 மணி, உற்ஸவ மூர்த்திக்கு அபிஷேகம், காலை 10:30 மணி, சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு, மதியம் 12:30 மணி, அன்ன வாகன உலா, மாலை 6:00 மணி.

சஷ்டி விழா- பால்குடம், சிறப்பு அலங்காரம்: தங்கமய முருகன் கோயில், விளத்துார், மாலை 4:30 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.

பக்தி சொற்பொழிவு தாயுமானவர்: நிகழ்த்துபவர் -- சுந்தர் கண்ணன்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை,இரவு 7:00 மணி.

பகவத் கீதை: நிகழ்த்துபவர் -- சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை5:00 மணி.

தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியானமையம், காலை 7:15 மணி.

சொற்பொழிவு, -கூட்டு பிரார்த்தனை: நிகழ்த்துபவர் -- ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு,அய்யர்பங்களா, மதுரை, இரவு 7:00 மணி.

லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர்- - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால் தந்திநகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்சனம் விளக்கவுரை, காலை 9:15 மணி.

பொது தமிழ்நாட்டு அகழாய்வுகளில் அண்மைக்கால அறிவியல் ஆய்வுகள் பன்னாட்டு கருத்தரங்கம்: கோர்ட் யார்ட் மேரியட் ஓட்டல், மதுரை, நிறைவு விழா உரை - - அரசு கூடுதல் தலைமைச் செயலர் உதயச்சந்திரன், ஏற்பாடு: தொல்லியல் துறை, மாலை 5:00மணி.

தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் ஜாதிய வன்கொடுமைகள், பின்னணியும் சட்ட ரீதியான தீர்வும் - கலந்தாய்வு கூட்டம்:பி.சி.எஸ். ஹால், லேடி டோக் கல்லுாரி அருகில், மதுரை, பேசுபவர்கள்: வழக்கறிஞர் லஜபதிராய், பாலசுப்பிரமணியம், ஏற்பாடு: எவிடென்ஸ் அமைப்பு காலை 10:00 மணி.

சைவ சித்தாந்த பன்னாட்டு கருத்தரங்கம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, ஆகமங்கள் வரலாறும் வழிபாடும்'நுால் வெளியீடு, வெளியிடுபவர் - எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, பெறுபவர் - வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை இணைத்தலைவர் ஷீலா, காலை 11:00 மணி,

மகாத்மா காந்தியின் தொகுப்பு நுால்கள்- பகுதி 19 - நுால் மதிப்பாய்வுரை: காந்தி மியூசியம், மதுரை, பேசுபவர் - ஆராய்ச்சிஅலுவலர் தேவதாஸ், மாலை 5:00 மணி.

அனைவருக்கும் பென்சன் -கருத்தரங்கம்: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி, தலைமை: துணைத் தலைவர் புண்ணிய மூர்த்தி, சிறப்புரை: எம்.பி., திருச்சி சிவா, ஏற்பாடு: எல்.ஐ.சி., பென்சனர்கள் சங்கம், காலை 9:30 மணி.

குழந்தைகளுக்கான சதுரங்க பயிற்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, பயிற்சி அளிப்பவர்: உமாசங்கர், மாலை 5:30 மணி.

பள்ளி, கல்லுாரி என்.எஸ்.எஸ்., முகாம்: தேனுார், தலைமை: முன்னாள் ஊராட்சி தலைவர் மாயாண்டி, ஏற்பாடு: செந்தமிழ்க் கல்லுாரி என்.எஸ்.எஸ்., பிரிவு, காலை 6:00 மணி, பிளாஸ்டிக் விழிப்புணர்வு, காலை 8:30மணி, மகளிரும் மகத்துவமும் -- கிராம மகளிர் குழு, மதியம் 12:00 மணி.

பெண் குழந்தைகள் விழிப்புணர்வு வீதி நாடகம்: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்பு விருந்தினர்:பார்க்பிளாசா குழும நிறுவனர்கண்ணன், ஏற்பாடு: மகளிர் நலமேம்பாட்டுக்குழு, மகளிர் மாணவர் நலக்குழு, காலை 10:00 மணி.

விளையாட்டு பள்ளிக்கல்வித்துறையின் மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின விழா டேக்வாண்டோ ஆடவர் பிரிவு போட்டி: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, மதுரை, காலை 8:00 மணி, ஸ்குவாஷ் ஆடவர் பிரிவு போட்டி: அரபிந்தோமீரா பள்ளி, மதுரை, காலை 8:00 மணி.

மருத்துவம் பொது மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிக்குளம், மதுரை, காலை 9:00 முதல் மாலை 5:00 மணிவரை.

கண்காட்சி கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம்,காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.

மேட் இன் மதுரை கண்காட்சி: மடீட்சியா ஹால், மதுரை, ஏற்பாடு: மடீட்சியா, காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us