UPDATED : நவ 29, 2026 12:43 AM
ADDED : நவ 29, 2026 12:43 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை என்.எம்.ஆர்., சுப்பராமன் தொடக்கப் பள்ளியில் கஸ்துாரிபாய் காந்தி அறக்கட்டளை, ஸ்ரீபூகலாசார மையம் சார்பில் 8ம் வகுப்பு மாணவர்கள் எழுதும் ஸ்காலர்ஷிப் தேர்வுக்கான இலவச வழிகாட்டி நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
மத்திய அரசு நடத்தும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (என்.எம்.எம்.எஸ்.,) தேர்வில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்கள் வெற்றி பெறும் நோக்கில் இந்த வழிகாட்டி நிகழ்ச்சி காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது. டிச.,5ல் இதற்கான மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.
விவரங்களுக்கு 77083 69606.
