தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஆக 20, 2026 06:43 PM

ADDED : ஆக 20, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2026 06:43 PM ADDED : ஆக 20, 2026 06:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆக. 21

கோயில்

* ஆவணி மூல உற்ஸவம் - பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 10:00 மணி, சுவாமி தங்க ரிஷப வாகனம், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி, இரவு 7:00 மணி.

* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.

* கோயில் உற்ஸவம்: சக்தி மாரியம்மன் கோயில், துவரிமான், மதுரை, அன்னதானம், காலை 10:00 மணி, முத்தாலம்மன் நாடகம், இரவு 10:00 மணி.

* ஆவணி முதல் வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு புன்னகை அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

* திரிவேணி விழா - சிவானந்த ஜெயந்தி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, 'வாழ்க்கையின் லட்சியம்' தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, மாலை 5:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செயலாளர் மோகன், அருட்செய்தி வழங்குபவர்: இஸ்லாமிய மாணவர் அமைப்பு மாநில செயலாளர் அப்துல் கபூர், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி.

* வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு லலிதா சஹஸ்ரநாமம், மஹாலட்சுமி அஷ்டகம், கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம்: நிகழ்த்துவோர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

* வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு 'குரு மஹிமை' சொற்பொழிவு: நிகழ்த்துபவர் வரலொட்டி ரங்கசாமி, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

* 'ஒரு தொழில்முனைவோராக எனது பயணம்' - கருத்தரங்கம்: ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, முன்னிலை: இயக்குநர் சுப்பிரமணியன், சிறப்பு விருந்தினர்: கபே டி.என்.59 நிர்வாக இயக்குநர் இனியா ராஜா, காலை 11:30 மணி.

* முத்தமிழ் விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மாவட்ட தலைவர் செல்லா, ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 9:00 மணி.

* கல்லுாரிகளுக்கு இடையேயான கலைத் திருவிழா: பி.கே.என்., கலை அறிவியல் கல்லுாரி, திருமங்கலம், முன்னிலை: முதல்வர் கணேசன், சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜ் பல்கலை மரபணு பொறியியல் துறை இணை பேராசிரியர் அசோக் குமார், ஏற்பாடு நுண்ணுயிரியல் துறை, காலை 10:00 மணி, உலக தொழில் முனைவோர் தினத்தை முன்னிட்டு ஏ.ஐ., வணிக கருத்தரங்கம், சிறப்பு விருந்தினர்: ஏ.ஐ., மற்றும் டிஜிட்டல் வணிக உத்தி நிபுணர் கோகுல்நாத், மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி பேராசிரியை பார்கவி, காலை 10:00 மணி.

* பட்டயக் கணக்காளர் படிப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ஸ்ரீனிவாசன், சிறப்பு விருந்தினர்: ஐ.சி.ஏ.ஐ., மதுரை கிளை துணை சேர்மன் பாலகணேஷ், முன்னாள் சேர்மன் தங்கர் சந்த் ஜெயின், ஏற்பாடு: வணிகவியல் துறை, காலை 10:30 மணி, திருவிளக்கு பூஜை, ஏற்பாடு: மகளிர் மேம்பாட்டு பிரிவு, காலை 9:30 மணி.

* போதைப் பொருள் ஒழிப்பு, சாலை பாதுகாப்பு டூவீலர் விழிப்புணர்வு பேரணி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தொடங்கி வைப்பவர்: குற்றப்பிரிவு டி.எஸ்.பி., நாகராஜ், ஏற்பாடு: கல்லுாரி என்.எஸ்.எஸ்., அமைப்பு, மதுரை யங் இந்தியன் அமைப்பு, சாலை பாதுகாப்பு மன்றம், காலை 7:30 மணி.

பொது

* தினமலர் - சத்யா இணைந்து வழங்கும் 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2026' - வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, துவக்கி வைப்பவர்: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, காலை 10:15 மணி, கண்காட்சி நேரம்: காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.

* மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, காலை 10:00 மணி.

* தேசிய மூத்த குடிமக்கள் தின கொண்டாட்டம்: மடீட்சியா, மதுரை, சிறப்பு விருந்தினர்: முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஏற்பாடு: மடீட்சியா, கான்சார்ட், காலை 10:00 மணி, பாரதி இன்பினிட்டி மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம், காலை 9:00 முதல் 10:30 மணி வரை.

விளையாட்டு

* வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான மகளிர் வாள் சண்டை போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை, காலை 8:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us