ADDED : மார் 01, 2025 04:15 AM
கோயில்
மகா சிவராத்திரி விழா: தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், 16, வடக்கு மாசி வீதி, மதுரை, சுவாமி அதிகார நந்திகேஸ்வர வாகனத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் மாசி வீதிகளில் வலம் வருதல், இரவு 8:00 மணி.
உழவாரப்பணி: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், தலைமை: தலைவர் பொன்னுச்சாமி, ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், காலை 10:00 மணி.
கும்பாபிஷேகம் -2ம் கால யாக பூஜை: செல்வ விநாயகர் கோயில், வேளாண் உணவு வர்த்தக மையம், சிக்கந்தர் சாவடி, காலை 8:50 மணி, பூர்ணாகுதி, தீபாராதனை, காலை 11:30 மணி, 3ம் கால யாக பூஜை, மாலை 6:30 மணி.
பக்தி சொற்பொழிவு
தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
கந்தர் கலிவெண்பா: நிகழ்த்துபவர் - சுகுமாரி, திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.
திருமூலரின் திருமந்திரம்: நிகழ்த்துபவர் --- சுவாமி சிவயோகானந்தா, தாம்ப்ராஸ் டிரஸ்ட் மஹால், 18, சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: சின்மயா மிஷன், மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
மாணவர் அணியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா: சமுதாயக்கூடம், கொடிமங்கலம், தலைமை: யாதவர் கல்லுாரி முதல்வர் ராஜூ, சிறப்புரை: மதுரை காமராஜ் பல்கலை என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி, பார்க் பிளாசா குழும நிறுவனர் கண்ணன், முன்னிலை: கொடிமங்கலம் ஊராட்சி செயலாளர் வெர்ஜின் ராணி, தனி அலுவலர் பொற்செல்வி, முன்னாள் தலைவர் அழகுலட்சுமி, முன்னாள் துணைத் தலைவர் ஆனந்தவள்ளி, ஏற்பாடு: யாதவர் கல்லுாரி, மாலை 4:00 மணி.
அறிவியல் கண்காட்சி: மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளி, திருமங்கலம், தலைமை: முதல்வர் ஈஸ்டர் ஜோதி, சிறப்புரை: ஆசிரியர்கள் ஜினாஸ் மன்சுரா, ஜெயந்தி, காலை 9:00 மணி.
கல்லுாரி ஆண்டு விழா: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் கவிதா, சிறப்பு விருந்தினர்: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன், காலை 10:30 மணி.
பெற்றோர் ஆசிரியர் கூட்டம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மணிமொழி, ஏற்பாடு: வணிகவியல், தொழில்நுட்பத் துறை, காலை 10:00 மணி.
'ரிதம் 2025' - 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பள்ளிகளுக்கிடையேயான நடனப் போட்டி: என்.எம்.எஸ்., விஜயலட்சுமி சஞ்சீவிமலையன் கல்வியகம், நாகமலை, தலைமை: தாளாளர் ராம சுந்தரசேகரன், பாரத் மாடர்ன் பள்ளி தாளாளர் காளிமுத்து, துவக்கி வைப்பவர்: மடீட்சியா தலைவர் கோடீஸ்வரன், காலை 9:00 மணி.
பொது
மாற்றுத்திறனாளிகளுக்கான சட்ட உதவி மையம் துவக்கம்: 3/675, சக்தி காம்ப்ளக்ஸ், ஆவின் நகர், சர்வேயர் காலனி, மதுரை, தலைமை: மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய செயலாளர் சரவண செந்தில்குமார், சிறப்பு விருந்தினர்கள்: இந்திய வழக்கறிஞர் சங்க மாநிலத் தலைவர் சாமிதுரை, மதுரை வழக்கறிஞர் சங்கம் முன்னாள் தலைவர் தர்மராஜ், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பாண்டுரங்கன், மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் புரவலர் ராஜ்குமாரி, காலை 11:00 மணி.
மெடெக்ஸ் 2025 - மருத்துவ கருத்தரங்கு, கண்காட்சி: ஓட்டல் கோர்ட் யார்டு மேரியட், மதுரை, ஏற்பாடு: இந்திய தொழில் கூட்டமைப்பு, காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா: எழுமலை, தலைமை: மாவட்ட வன அலுவலர் தருண்குமார், பங்கேற்பு: பேராசிரியர் ராமசாமி, சோழவந்தான் வனச்சரக அலுவலர் வெங்கடேஸ்வரன், உசிலம்பட்டி அலுவலர் அன்னக்கொடி, தொண்டு நிறுவன நிறுவனர் சவுந்திரராஜன், ஏற்பாடு: மக்கள், வனத்துறை, ஸ்வார்டு தொண்டு நிறுவனம், காலை 11:00 மணி.