ADDED : செப் 13, 2024 05:27 AM
கோயில்
ஆவணி மூலத் திருவிழா 9ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சுவாமி, அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் சித்திரை வீதிகள், கீழமாசி வீதி, யானைக்கல் வழியாக பழைய சொக்கநாத சுவாமி கோயில், விருதுநகர் இந்து நாடார் உறவின்முறை பரிபாலன சபை திருக்கண் மண்டபம், திருமலைராயர் படித்துறை, அனுமார் கோயில் படித்துறை, சாரதா வித்யாவனம் மெட்ரிக் பள்ளி, பேச்சியம்மன் படித்துறை வழியாக புட்டுத் தோப்பு மண்டபம் எழுந்தருளல், காலை 6:00 மணி, புட்டுக்கு மண் சுமந்த லீலை, மதியம் 1:05 முதல் 1:29 மணிக்குள், சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பொன்னகரம் பிராட்வே, ஒர்க் ஷாப் ரோடு, நாயக்கர் புதுத் தெரு, கீழவெளி வீதி, அம்மன் சன்னதி வழியாக கோயில் வருதல், மாலை 6:00 மணி.
கோயில் உற்ஸவம்: காளியம்மன் கோயில், பொன்மேனி, மதுரை, மறுபூஜை, மாலை 4:00 மணி.
முளைப்பாரி திருவிழா: மாரியம்மன் கோயில், தல்லாகுளம், மதுரை, விளக்கு பூஜை, மாலை 6:00 மணி.
கும்பாபிஷேகம் - முதல் கால யாக பூஜை: அகிலாண்டேஸ்வரி அம்மன் திருமூலநாத சுவாமி கோயில், சோழவந்தான், கோ பூஜை, யாக சாலை அலங்காரம், காலை 8:00 மணி, அங்குரார்பணம், கும்பலங்காரம், யாகபூஜை, மாலை 5:00 மணி.
ஜீவ கருணை பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட் பிரகாச வள்ளலார், மாலை 6:30 மணி.
வியாகுல அன்னையின் 182ம் ஆண்டுத் திருவிழா: செயின்ட் மேரீஸ் சர்ச், கீழவெளிவீதி, மதுரை, நவநாள் சிறப்பு திருப்பலி, ஏற்பாடு: பாதிரியார் ஹென்றி ஜெரோம், துணை பாதிரியார்கள் லெனின், ஜோ லிவிங்ஸ்டன், மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருக்குறள்: நிகழ்த்துபவர் - ராமச்சந்திரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
லலிதா சகஸ்ரநாமம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி
கலைநிகழ்ச்சி: மதுரை சிவகாசி நாடார் பயோனீர் மீனாட்சி மகளிர் கல்லுாரி, பூவந்தி, சிறப்பு விருந்தினர்: மதுரை வள்ளி பொறியியல் நிறுவன நிர்வாக இயக்குநர் ஜெகபதி ராஜன், காலை 10:00 மணி.
மூலக்கூறு தத்துவார்த்த அணுகுமுறைகள் - கருத்தரங்கம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்கள்: பேராசிரியர்கள் வேலுராஜா, ராஜா, ஏற்பாடு: முதுநிலை ஆராய்ச்சி இயற்பியல் துறை, காலை 10:30 மணி, கல்வியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு - கருத்தரங்கு: வழங்குபவர் - அண்ணா பல்கலை உதவி பேராசிரியர் வித்யா ஜனனி, காலை 10:30 மணி, தொழில் முனைவோர் கலந்தாய்வு நிகழ்ச்சி, சிறப்பு விருந்தினர்: தொழில் முனைவோர் வளர்ச்சி, கண்டுபிடிப்பு நிறுவனம் பயிற்சியாளர் அர்ச்சனா, காலை 11:00 மணி.
பொது
மதுரை மாவட்ட ஓய்வூதியர்கள் சங்கத்தின் 61வது ஆண்டு கூட்டம்: சொக்கநாதர் திருமண மண்டபம், வடக்கு மாசி வீதி, மதுரை, தலைமை: தலைவர் பழனிச்சாமி, சிறப்பு விருந்தினர்கள்: கருவூலம் மண்டல இணை இயக்குனர் சின்னுசாமி, ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க துணைத் தலைவர் தாமோதரன், காலை 10:00 மணி.
எழுத்தாளர் தீபா நாகராணியின் 3 நூல்கள் வெளியீட்டு விழா: புத்தகத் திருவிழா, அரங்கு எண். 22, சத்யா என்டர்பிரைசஸ், தமுக்கம் மைதானம், மதுரை, வெளியிடுபவர்கள்: ஆயி என்ற பூரணம், பழனியப்பா நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை மீனாட்சி, ஓ.சி.பி.எம். மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியை (ஓய்வு) ரூபி மல்லிகா, மாலை 6:30 மணி.
கல்வியாளர்களை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் ஆசிரியர்கள் மாநாடு: சி.இ.ஓ. அலுவலக ஆடிட்டோரியம், தல்லாகுளம், மதுரை, சிறப்பு விருந்தினர்: முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, பேசுபவர்கள்: மதுரை ஆர். எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் எம்.பி.ஏ. துறை இயக்குநர் சுப்ரமணியன், லேடிடோக் கல்லூரி வணிகவியல் துறை இணை பேராசிரியை அமுதா, ஏற்பாடு: தி இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டரிஸ் ஆப் இந்தியா, காலை 10:00 மணி.
கண்காட்சி
புத்தகத் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, மாலை 4:00 மணி, சிறப்புரை: கவிஞர்கள் மனுஷ்ய புத்திரன், நந்தலாலா, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பபாசி, பொது நுாலக இயக்கம், மாலை 6:00 மணி.
வண்ண மீன்கள் கண்காட்சி, வீட்டு உபயோகப் பொருட்காட்சி: காந்தி மியூசிய மைதானம், மதுரை, மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.
விளையாட்டு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் முதல்வர் கோப்பைக் கான மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்: எம்.ஜி.ஆர்., விளையாட்டு அரங்கம், மதுரை, காலை 8:00 மணி, ஸ்ரீராம் நல்லமணி மேனிலைப்பள்ளி, கிரிக்கெட், காலை 8:00 மணி, டான் பாஸ்கோ டி - நோபிலி மேனிலைப்பள்ளி, கால்பந்து, காலை 8:00 மணி, தடகளம், ஆயுதப்படை மைதானம், காலை 8:00 மணி.