ADDED : செப் 27, 2024 06:53 AM
கோயில்
புரட்டாசி 2ம் வெள்ளி சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம், தயிர் சாதம் படையல்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, விளாங்குடி, இரவு 7:00 மணி.
பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட் பிரகாச வள்ளலார், மாலை 5:30 மணி.
சந்தன குடம் புறப்பாடு: புரட்டாசி திருவிழா, வில்லாயுதமுடைய அய்யனார் முத்தையா கோயில், கோச்சடை, மதுரை, சன்னதி சந்தனக் கடையில் இருந்து சந்தனகுடம் புறப்பாடு, மாலை 5:00 மணி.
பக்தி சொற்பொழிவு
லலிதா சகஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
108 திவ்ய தேச வைபவம்: நிகழ்த்துபவர் - அரவிந்த் லோச்சனன், சுவாமி, மதனகோபால சுவாமி கோயில், மேல மாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி.
நாராயணீயம் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
போதை மருந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி: லதா மாதவன் பொறியியல் கல்லுாரி, கிடாரிப்பட்டி, தலைமை: நிறுவனர் மாதவன், சிறப்பு விருந்தினர்: மாவட்ட எஸ்.பி., அர்விந்த், காலை 10:30 மணி.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு போட்டோகிராபி, ஓவியம், ரீல் தயாரித்தல், வினாடி வினா போட்டிகள்: காமராஜர் பல்கலை கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் புவனேசுவரன், ஏற்பாடு: தென் தமிழக சுற்றுலா முகவர்கள் சங்கம், காலை 10:00 மணி, கலைநிகழ்ச்சிகள், மாலை 6:00 மணி.
கல்லுாரிகளுக்கிடையேயான பல்திறன் போட்டிகள்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துசெழியன், காலை 10:00 மணி, சுற்றுலா விழிப்புணர்வு நிகழ்ச்சி, காலை 10:30 மணி, வர்த்தக உலகம் - மாணவர்களின் பங்கு குறித்து விளக்கவுரை, சிறப்பு விருந்தினர்: பி.கே.என்., கல்லுாரி வணிகவியல் துறைத் தலைவர் தாமரைச் செல்வி, காலை 10:00 மணி.
பொது
மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்: மாநகராட்சி அலுவலகம், மதுரை, தலைமை: மேயர் இந்திராணி பொன்வசந்த், காலை 10:30 மணி.
சர்வ சமய வழிபாடு: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலாளர் நந்தாராவ், மாலை 4:30 மணி.
உலக சுற்றுலா தின கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம், மதுரை, மதியம் 3:30 மணி.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு 'புட் வாக்' - உணவுத் திருவிழா: மேற்கு கோபுரம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: சுற்றுலாத் துறை, மாலை 5:30 மணி.
வன உயிரின வார விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான ஓவியம், கட்டுரை, பேச்சு, வினாடி வினா போட்டிகள்: மாவட்ட வன அலுவலக வளாகம், ரேஸ்கோர்ஸ், மதுரை, ஏற்பாடு: மதுரை வனக் கோட்டம், மதியம் 3:30 மணி.
கிராம கைத்தொழில் பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, பயிற்சியளிப்பவர்: கல்வி அலுவலர் நடராஜன், காலை 10:30 மணி.
மதுரை கோட்ட வணிக வரித்துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் நலச் சங்க பொதுக்குழு கூட்டம்: லீலா தேவி பவன் மண்டபம், மேல ஆவணி மூல வீதி, மதுரை, தலைமை: தலைவர் சிவசுப்பிரமணியன், காலை 9:00 மணி.
கண்காட்சி
மினி ஐடியல் ஹோம் கண்காட்சி: மடீட்சியா ஹால், மதுரை, துவக்கி வைப்பவர்: மாவட்ட தொழிற்சாலை மைய பொது மேலாளர் கணேசன், தலைமை: தலைவர் கோடீஸ்வரன், ஏற்பாடு: மதுரை மாவட்ட குறு, சிறு தொழிற்சாலைகள் சங்கம், காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.

