ADDED : அக் 01, 2024 05:13 AM
கோயில்
* சுப்பிரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆனந்தேஸ்வர விநாயகா ஆஸ்திக சபா, எல்லீஸ் நகர், மதுரை, காலை 8:00 மணி, ராகுகால பூஜை, மதியம் 3:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் ---- மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* ஆதிசங்கரர் அருளிய ஸத ஸ்லோகி: நிகழ்த்துபவர் -- கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழ மாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.
பொது
* காந்தி காணவிரும்பிய சமுதாயம்: காந்தி ஜெயந்தி சிறப்பு சொற்பொழிவு: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மதுரைக் கல்லுாரி முதல்வர் சுரேஷ், முன்னிலை: மியூசியம் பொருளாளர் செந்தில்குமார், பங்கேற்பு: தொலைகாட்சி சொற்பொழிவாளர் கோ, காலை 10:00 மணி.
* ரத்ததான முகாம் அமைப்பாளர்களுக்கான பாராட்டு விழா: அரசு மருத்துவமனை, மதுரை, தலைமை: டீன் செல்வராணி, ஏற்பாடு: அரசு மருத்துவ கல்லுாரி ரத்ததான கொடையாளர் கழகம், காலை 10:00 மணி.
* ஹிந்தி மொழி பேச்சுப் சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்றுநர் -- காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.
* உலக முதியோர் தினக் கருத்தரங்கம்: சுனில் மைத்ரா அரங்கம், அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகில், மதுரை, தலைமை: கூட்டமைப்பு மாவட்ட தலைவர் பிச்சைராஜன், பங்கேற்பு: அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், ஏற்பாடு: மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்புக்குழு, காலை 10:00 மணி.
* பி.எஸ்.என்.எல்., நிறுவன நாளையொட்டி வாக்கத்தான்: பி.எஸ்.என்.எல்., தல்லாகுளம் அலுவலகம் முதல் பீபி குளம் அலுவலகம் வரை, மதுரை, காலை 10:30 மணி.
பள்ளி, கல்லுாரி
* இயற்கை கிளப் துவக்க விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் சீனிவாசன், செயலாளர் குமரேஷ், ஒருங்கிணைப்பாளர் லட்சுமி, பங்கேற்பு: கல்வி விவகாரங்கள் டீன் கவிதா, மதியம் 12:45 மணி.
* துாய்மையே சேவை: சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம்., பொறியியல் கல்லுாரி, அழகர் கோவில், தலைமை: அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் செல்ல துரை, பங்கேற்பு: எம்.ஏ.வி.எம்.எம்., சபை தலைவர் பாஸ்கரன், தாளாளர் கணேசன், பொருளாளர் கண்ணன், ஏற்பாடு: கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டக்குழு, காலை 9:30 மணி.
* பாலின சமத்துவம் மற்றும் உணர்திறன் குறித்த கருத்தரங்கு: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, முன்னிலை: செயலாளர் கண்ணன், பங்கேற்பு: முன்னாள் தாளாளர் கண்ணன், காலை 11:00 மணி.
* அனைத்துலக வன்முறையற்ற நாள் உறுதிமொழி ஏற்பு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் ராமமூர்த்தி, ஏற்பாடு: முதுகலை ஆராய்ச்சி வரலாற்றுத்துறை காந்திய சிந்தனைக் கழகம், காலை 10:30 மணி.
* உலக வனவிலங்கு வார தினத்தையொட்டி மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான சந்திப்பு: பாத்திமா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: செயலாளர் இக்னேஷியஸ் மேரி, முதல்வர் செலின் சகாய மேரி, ஏற்பாடு: விலங்கியல் துறை, காலை 9:30 மணி.
* இணைய வளர்ச்சியல் செயற்கை நுண்ணறிவின் பங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, பங்கேற்பு: நிறுவனர் மஹிமா நிவாஷினி, ஜாஹி தொழில்நுடப் பயற்சி நிர்வாக ஒருங்கிணைப்பாளர் நவ்யா செந்தில், ஏற்பாடு: தகவல் தொழில்நுட்பவியல் துறை, காலை 9:00 மணி.
விளையாட்டு
* தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் தமிழக அணிக்கான ஆடவர் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டி: மதுரை ரைபிள் கிளப், மதுரை, தலைமை: முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், ஏற்பாடு: மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகம், காலை 8:00 மணி.