ADDED : நவ 08, 2024 07:30 AM
கந்த சஷ்டி விழா - 7ம் நாள்
சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், தங்க மயில் வாகனத்தில் ரதவீதி, கிரிவீதிகளில் தேரோட்டம், காலை 8:00 மணி, மூலவருக்கு தைல புண்ணியாகவாசனமாகி வெள்ளியம்பல வகையறா கட்டளை மண்டபத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பாவாடை, சாதம் நெய்வேதனம், மாலை 4:00 மணி, மகா தீபாராதனை, மாலை 4:30 மணி, வீதியுலா, இரவு 8:00 மணி.
சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில், மூலவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, காலை 6:30 மணி, திருக்கல்யாணம் காலை 10:00 முதல் 10:15 மணிக்குள், உற்ஸவருக்கு அபிஷேகம், அன்ன பாவாடை தரிசனம், தீபாராதனை, பல்லக்கில் சுவாமி புறப்பாடு, காலை 11:30 மணி, ஊஞ்சல் சேவை, மஞ்சள் நீர் உற்ஸவம், ஆறுபடை வீடு முருகன் அலங்காரம், மாலை 5:00 மணி, தங்கரத உலா, மாலை 6:00 மணி.
மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, கூடல்குமாரர் சன்னதியில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளல், வெள்ளிக் கவசம், பாவாடை சாத்தப்பட்டு, விசேஷ அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனை, காலை 7:00 மணி.
மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மதுரை, விக்னேஸ்வர பூஜை, மகா அபிஷேகம், காலை 9:30 மணி, சாந்தி அபிஷேகம், கலசாபிஷேகம், பாவாடை நெய்வேத்தியம், காலை 8:00 மணி, திருக்கல்யாணம், மாலை 6:00 மணி.
கோயில்
உத்திராடத்தின் உன்னதம், காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மாதாந்திர நட்சத்திர வழிபாடு, ஆவஹந்தி ேஹாமம், சுதர்சன ேஹாமம், ஆயுஷ்ய ேஹாமம், காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருக்குறள்: நிகழ்த்துபவர் - பெரியகருப்பன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
திருப்புகழ் பஜனை: நிகழ்த்துவோர் - சபையினர், திருப்புகழ் சபை, தெற்காடி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.
முரளீதர சுவாமி நட்சத்திரத்தை முன்னிட்டு அகண்டநாமம், அன்னதானம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி முதல்.
கந்தபுராணம்: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 மணி, முருகர் திருக்கல்யாணம், மதியம் 12:00 மணி.
பொது
பாலாஜி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா: பாலம் ஸ்டேஷன் ரோடு, செல்லுார், மதுரை, திறந்து வைப்பவர்: த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., பங்கேற்பு: மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன், மதுரை ரெசிடென்சி இயக்குநர் ஜெகதீஷ், ஏற்பாடு: டாக்டர் ஆர். பாலாஜி, காலை 9:15 மணி.
உணவு உற்பத்தி துறையில் மத்திய மாநில அரசின் திட்டங்கள், வேளாண் ஏற்றுமதி, மானியம் குறித்த இலவச விழிப்புணர்வு பயிற்சி: மடீட்சியா ஹால், மதுரை, பேசுபவர்: டி.என். அபெக்ஸ் மதுரை மண்டல முதுநிலை மேலாளர் கவிமுகில் சிவன்ராஜன், ஏற்பாடு: மடீட்சியா, மாலை 4:30 மணி.
சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், அருட்செய்தி: எம்.எல்.டபிள்யு.ஏ., மேல்நிலைப்பள்ளி துணை தலைமையாசிரியர் சவுந்தர பாண்டியன், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம் (செப்சிரா), மாலை 6:00 மணி.
தமிழறிஞர் வீரமாமுனிவரின் 345வது பிறந்த தினவிழா:வீரமாமுனிவர் சிலை வளாகம், மதுரை ---- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, மதுரை, ஏற்பாடு: மதுரை செயின்ட் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி, வீரமாமுனிவர் அறக்கட்டளை , காலை 8:45 மணி.

