கோயில்
ஆடி உற்ஸவம்: சந்தன மாரியம்மன் கோயில், கண்ணனேந்தல், திருவிளக்கு பூஜை, மாலை 5:00 மணி, கும்மிப்பாட்டு, இரவு 8:00 மணி.
பக்தி சொற்பொழிவு
ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
திருவருட்பா: நிகழ்த்துபவர் -- விஜயராமன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
அஷ்டா வக்கிர கீதை சொற்பொழிவு: நிகழ்த்துபவர் -- ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழ மாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
ஏகாதசியை முன்னிட்டு அகண்டநாமம், அபிஷேகம், அன்னதானம், ஸத்ஸங்கம்: நிகழ்த்துபவர் -- ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 மணி.
பொது
மாநகராட்சி கவுன்சில் கூட்டம்: மாநகராட்சி அலுவலகம், மதுரை, தலைமை: மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ் குமார், காலை 10:30 மணி.
ஜெமினி சர்க்கஸ்: யு.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
நம்மினும் சிறந்தது நுவ்வை: நுால் அறிமுக விழா: உயர்நீதிமன்றம் மதுரை கிளை, தலைமை: தலைவர் சுரேஷ், நுால் அறிமுக உரை: வழக்கறிஞர் லட்சுமி, சிறப்பு விருந்தினர்: நிர்வாக நீதிபதி சுரேஷ் குமார், ஏற்பாடு: மதுரை வழக்கறிஞர் சங்கம், மாலை 5:00 மணி.
குறை தீர்க்கும் முகாம்: போலீஸ் கமிஷனர் அலுவலகம், அழகர்கோவில் ரோடு, மதுரை, தலைமை: கமிஷனர் லோகநாதன், காலை 10:00 மணி.
பள்ளி, கல்லுாரி
பட்டம் வழங்கும் விழா: அண்ணா பல்கலை கல்லுாரி, மதுரை, தலைமை: பதிவாளர் பிரகாஷ், சிறப்பு விருந்தினர்: தமிழக புத்தொழில், புத்தாக்க கொள்கை திட்ட இயக்குநர் சிவராஜா, ஏற்பாடு: அண்ணா பல்கலை உறுப்புக் கல்லுாரிகள், காலை 10:15 மணி.
மனித ஆரோக்கியத்தில் வைட்டமின்கள் உயிரியல் முக்கியத்துவம், வேதியியல் மன்றம் துவக்க விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், சிறப்பு விருந்தினர்: பாத்திமா கல்லுாரி வேதியியல் துறை இணைப் பேராசிரியர் ராஜேஸ்வரி, பங்கேற்பு: முதல்வர் ஸ்ரீனிவாசன், மதியம் 1:00 மணி.
போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: மதுவிலக்கு டி.எஸ்.பி., சிவசுப்பு, ஏற்பாடு: போலீஸ், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, கல்லுாரி இளையோர் செஞ்சிலுவை சங்கம், காலை 10:30 மணி.
போதை விழப்புணர்வு பாதுகாப்பு கருத்தரங்கம்: மதுரை சிவகாசி நாடார் பயோனீர் மீனாட்சி பெண்கள் கல்லுாரி, பூவந்தி, தலைமை: தாளாளர் சிவராம், சிறப்பு விருந்தினர்: பல் மருத்துவர் ஹரிஹரசுதன், பங்கேற்பு: முதல்வர் விசுமதி, ஏற்பாடு: என்.எஸ்.எஸ்., காலை 11:00 மணி.
இணைய இணைப்பில் உள்ள பொருட்களின் செயல்படும் தொழில்நுட்பங்கள் ஆராய்தல்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: அமெரிக்கன் கல்லுாரி கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் கிரிஜா, ஏற்பாடு: கணினி அறிவியல் துறை, மதியம் 2:00 மணி.
மருத்துவம்
இலவச கண் பரிசோதனை முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.
விளையாட்டு
பள்ளிக்கல்வித்துறை சார்பில் கருப்பாயூரணி குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான கேரம் போட்டி: இளங்கோ மாநகராட்சி பள்ளி, மதுரை, காலை 8:30 மணி.