ADDED : பிப் 14, 2026 07:09 AM
சனிப்பிரதோஷம்
சக்தி விநாயகர் கோயில், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, சிறப்பு பூஜை, மாலை 4:00 மணி.
செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, சிறப்பு பூஜை, மாலை 4:00 மணி.
காட்டு பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, மாலை 4:30 மணி.
கோயில்
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
புனித லுார்தன்னை சர்ச் 106ம் ஆண்டு பெருவிழா-தேர்பவனி: புதுார், மதுரை, தலைமை: சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம், இரவு 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு
பகவத் கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
தாயுமானவர்: நிகழ்த்துபவர் -- சுந்தர கண்ணன், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் -- டாக்டர் கோகுல்நாத். சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
சொற்பொழிவு, கூட்டு பிரார்த்தனை: நிகழ்த்துபவர் -ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை.
லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் -- சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால் தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்சனம் விளக்கவுரை, காலை 9:15 மணி.
சத்சங்கம், ஆசிரம பிரார்த்தனை- திருப்புகழ் பாராயணம்: மீனாட்சி கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி.
சிவனும் நானும்... சிவனுடன் சில நேரம்-தரிசனம்: சிவ சக்தி பவன், பிரம்மகுமாரிகள் ராஜயோக தியான நிலையம், நாகமலை புதுக்கோட்டை, காலை 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
பொது
ஸ்டார் நைட்-இசை நிகழ்ச்சி: வேலம்மாள் மைதானம், ஒத்தக்கடை, மதுரை, பங்கேற்பு: முத்த மழை பாடல் புகழ் அமினா, சின்னத்திரை கலைஞர்கள், ஏற்பாடு: இம்பிரஸ் பிலிம்ஸ், மாமதுரையர் அமைப்பு, மாலை 6:00 மணி.
மதுரை மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் சந்திப்பு: ஓட்டல் டியூக், மதுரை, சிறப்பு விருந்தினர்: கமிஷனர் சித்ரா, பங்கேற்பு: கல்வி குழுத்தலைவர் ரவிச்சந்திரன், மாநகராட்சி கல்வி அதிகாரி மோகன், எச்.சி.எல். அறக்கட்டளை துணை மேலாளர் பிரபாகர் இக்னேஷியஸ், திட்ட அதிகாரி ராஜலட்சுமி, ஏற்பாடு: எச்.சி.எல். அறக்கட்டளை, காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை.
மதுரை உற்பத்தி கவுன்சில்-பாதுகாப்பு மாநாடு: ஓட்டல் கோர்ட்யார்டு மேரியாட், மதுரை, தலைமை: உற்பத்தி கவுன்சில் தலைவர் ஜெகன்மோகன், சிறப்பு விருந்தினர்: தொழில்துறை பாதுகாப்பு, சுகாதார இயக்குநர் அனந்த், தமிழக முன்னாள் தொழில்துறை பாதுகாப்பு, சுகாதார இயக்குநர் போஸ், மதுரை தொழில்துறை பாதுகாப்பு, சுகாதார கூடுதல் இயக்குநர் சித்தார்த்தன், காலை 9:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை.
பெண்களுக்கு மீதான வன்முறைக்கு எதிரான எழுச்சி பிரசாரம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: இ.கே.டி.ஏ. இயக்குநர் சந்திரசேகரன், சிறப்புரை: போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் வனிதா, சமூக நல அதிகாரி காந்திமதி, அரவிந்த் கண் மருத்துவமனை எச்.ஆர். மேலாளர் மகாலட்சுமி, காலை 9:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை.
35ம் ஆண்டு பொங்கல் விழா- விளையாட்டு போட்டிகள், அன்னதானம்: வல்லப கணபதி கோயில், அவனியாபுரம், தலைமை: விழா தலைவர் சேதுராமன், ஏற்பாடு:பிரசன்னா காலனி தண்ணீர் பகிர்மான சங்கம், பொது மக்கள், மதியம் காலை 10:00 மணி.
பள்ளி, கல்லுாரி
'அவுரா 2026' மாணவர்களின் படைப்பு அரங்கம்: மகரிஷி வித்யா மந்திர், தனக்கன் குளம், மதுரை, முன்னிலை: மதுரை எம்.வி.எம்., தலைவர் வடிவேலு, ஏற்பாடு: மகரிஷி வித்யா மந்திர், சைசா, காலை 11:00 மணி.
மனித பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்: வீரபாண்டி, பேசுபவர்கள்: குழந்தைகள் மனநல ஆலோசகர் ராதிகா, ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் மாநில செயலாளர் முகமது முகைதீன், ஏற்பாடு: யாதவர் கல்லுாரி என்.எஸ்.எஸ். பிரிவு, காலை 7:00 முதல் மதியம் 2:30 மணி வரை.
கண்காட்சி
ஓவிய கண்காட்சி: அரசு கவின் கலை கல்லுாரி, உலக தமிழ்ச்சங்க வளாகம், மதுரை, சிறப்பு விருந்தினர்: முதல்வர் நல்லசிவம், அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் மருது பாண்டியன், மீனா ஜவஹர், சுலைமான், ஷர்மிளா தேவதாஸ், ஏற்பாடு: அரசு அருங்காட்சியகம், அறிவன் அறக்கட்டளை, காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.

