தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்று இனிதாக மதுரை

 இன்று இனிதாக மதுரை

 இன்று இனிதாக மதுரை


ADDED : ஏப் 24, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

* சித்திரை பெருவிழா - 7ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாசி வீதிகளில் கங்காளநாதர் மர சிம்மாசன புறப்பாடு, காலை 8:00 மணி, கோயில் சிவகங்கைராஜா மண்டகப்படி, மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளல், மதியம் 12:00 மணி, மாசி வீதிகளில் நந்திகேஸ்வரர் வாகனத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், யாளி வாகனத்தில் அம்மன் உலா, இரவு 7:00 மணி.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி.

* கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு திவ்ய சரித்திரம்: நிகழ்த்துபவர் - சுதர்சன் பாகவதர், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மாலை 6:30 மணி.

பொது

* இசை நிகழ்ச்சி: லட்சுமி சுந்தரம் ஹால், கோகலே ரோடு, தல்லாகுளம், மதுரை, பாட்டு - ராம்நாத், வயலின் - ஆதித்யா அனில், மிருதங்கம் - சர்வஜித் கிருஷ்ணா, ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், மாலை 6:30 மணி.

மருத்துவம்

* உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு 18 வயதுக்கு மேற்பட்ட இருபாலருக்குமான இரைப்பை, குடல், கல்லீரல் சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம்: ப்ரீதி மருத்துவமனை, உத்தங்குடி, மதுரை, காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.

விளையாட்டு

* 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு தடகளம், குழு விளையாட்டு கோடை கால இலவச பயிற்சி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 முதல் 8:00 மணி வரை, மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us