ADDED : டிச 19, 2025 07:25 AM
கோயில் ஹனுமன் ஜெயந்தி: மங்கல ஆஞ்சநேயர் கோயில், நேதாஜி ரோடு, மதுரை, சிறப்பு அலங்காரம், பூஜை, வடை மாலை சாத்துதல், காலை 7:00 மணி.
ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், லட்சுமி விநாயகர் கோயில், மகாலட்சுமி நகர் 4வது தெரு, அய்யர் பங்களா, மாலை 6:00 மணி.
ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு விசேஷ அபிஷேகம், புன்னகை அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.
ஹனுமன் ஜெயந்தி உற்ஸவம்: வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம், காலை 9:00 மணி, தங்கக் கவச அலங்காரம், விசேஷ சஹஸ்ரநாம அர்ச்சனை, வடை மாலை சாத்துதல், மாலை 5:00 மணி.
ஆஞ்சநேயர் ஜெயந்தி சிறப்பு அபிஷேகம், பூஜை: சூட்டுகோல் ராமலிங்க சுவாமிகள் கோயில், வேளாளர் தெரு, ஆரப்பாளையம், மதுரை, காலை 8:30 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி.
கேட்டை நட்சத்திரத்திற்கான மார்கழி விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளைகள், மதுரை, அதிகாலை 5:00 மணி, ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வடை மாலை சமர்ப்பணம், காலை 7:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.
பால் அபிஷேகம்: தங்கமய முருகன் கோயில், விளத்துார், மதுரை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மதுரை, காலை 8:30 மணி.
பக்தி சொற்பொழிவு மறை தந்த மாமுனிவர்கள்: நிகழ்த்துபவர் - வாசுதேவ கோவிந்த ராஜ பட்டாச்சாரியார், மதனகோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
மார்கழி மாத விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், லட்ச்சார்ச்சனை: ஆஸ்திக பிரசார ஸபா, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, மாலை 5:00 மணி.
மார்கழி சத்சங்கம், திருப்பள்ளி எழுச்சி, கீதை பாராயணம், பஜனை, புஷ்பாஞ்சலி: தெய்வ நெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி.
மார்கழி பாவை விழா: திருப்பாவை, திருவெம்பாவை இசைப் பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, பாவைப் பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.
45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, தலைமை: கிருஷ்ணமூர்த்தி, முன்னிலை: ஊர்மிளா, விநாயகர், கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.
திருக்குறள்: நிகழ்த்துபவர் - பகவதி சந்தானம், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
மார்கழி திருப்பாவை, வீதி பஜனை, நாம சங்கீர்த்தனம்: காஞ்சி காமகோடிமடம், மதுரை, ஏற்பாடு: ஹரி பக்த சமாஜம் குழு, காலை 6:00 மணி முதல்.
திருப்பாவை தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி தமிழ் பேராசிரியர் ஜகந்நாத ராமானுஜ தாஸர், வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, காலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி தியாகராஜர் முன்னாள் மாணவர்கள் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் உச்சிமாநாடு 2025 - திரிவேணி எக்ஸ்போ துவக்க விழா: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: சேர்மன் ஹரி தியாகராஜன், முன்னிலை: முதல்வர் அஷோக் குமார், சிறப்பு விருந்தினர்: மேட்ரிமோனி.காம் சேர்மன் முருகவேல் ஜானகிராமன், ஏற்பாடு: கல்லுாரி தொழில்நுட்ப வணிக இன்குபேட்டர் (டி.சி.இ., - டி.பி.ஐ.,), காலை 10:00 மணி.
ஸ்கோப் 2025 - சர்வதேச கருத்தரங்கம்: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: சேர்மன் ஹரி தியாகராஜன், முன்னிலை: முதல்வர் அஷோக் குமார், சிறப்பு விருந்தினர்: அமெரிக்கா கே.பி.எம்.ஜி., நிர்வாக இயக்குநர் சுரேஷ் ராஜப்பா, ஏற்பாடு: கணினி அறிவியல் துறைகள், காலை 9:00 மணி.
மாணவர்களுக்கான திரைப்படம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: நாட்டு நலப்பணி திட்ட அமைப்பு, காலை 10:00 மணி.
செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் குறித்த தேசிய தொழில்நுட்ப மாநாடு: எஸ்.ஆர்.எம்., பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் துரைராஜ், ஏற்பாடு: கணினி அறிவியல், பொறியியல் துறை, காலை 10:00 மணி.
கணிதத்தின் முடிவுகளில் நிஜ உலக பயன்பாடுகள் - கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி பேராசிரியர் வீரம்மாள், ஏற்பாடு: கணிதத்துறை மதியம் 1:30 மணி, எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினர்: செக்கானுாரணி ஆரம்ப சுகாதார நிலையம் ஐ.சி.டி.சி., கவுன்சிலர் கல்பனா கோஷ், ஏற்பாடு: செஞ்சுருள் சங்கம், மதியம் 12:30 மணி.
திரிசாரணியர் மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி: அழகர்கோவில், ஏற்பாடு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி திரிசாரணியர் இயக்கம், காலை 9:30 மணி.
வருங்கால இளம் தலைவர்களுக்கான சிறப்பு முகாம்: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, அனுப்பானடி, மதுரை, ஏற்பாடு: மாவட்ட மை பாரத் அமைப்பு, காலை 10:00 மணி.
தேசிய அளவிலான மெய்நிகர் ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்புரை: வேலம்மாள் தொழில்நுட்ப நிறுவன இணை பேராசிரியர் பார்த்திபன், மாலை 6:00 மணி.
காமர்ஸ் கனெக்ட் 2025 - வணிக கருத்தரங்கம்: லேடி டோக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, சிறப்பு விருந்தினர்: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் இணைச் செயலாளர் குமார் துரைசாமி, காலை 9:30 மணி
பொது விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன் குமார், காலை 10:00 மணி.
245வது ஜெயந்தி இசை விழா: கீதா நடனகோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, வேங்கடரமண பாகவத சுவாமிகளின் உருவப்படம் திறப்பு, பூஜை, ஆராதனை, காலை 8:00 மணி, லட்சுமி நாராயண சுதர்ஸன ஹோமம், காலை 9:00 மணி, இசை நிகழ்ச்சிகள், காலை 11:00 மணி முதல், ஜெயந்தி இசை விழாவை தொடங்கி வைப்போர்: ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கிஷோர் குமார், தொழில் அதிபர் ஸ்ரீமூர்த்தி, ஏற்பாடு: வாலாஜாபேட்டை ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சேவா ஸமாஜம், மாலை 6:00 மணி.
245வது ஜெயந்தி இசை விழா: சவுராஷ்டிர சபை, 13, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, ஸ்ரீமத் வேங்கடரமண பாகவத சுவாமிகளின் உற்ஸவமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, லட்சுமி நாராயண சுதர்ஸன ஹோமம், காலை 8:30 மணி, அனுப்பானடி என்.எம்.ஆர்., சுப்பராமன் பெண்கள் கல்லுாரி தலைவர் ஜவஹர்பாபு தலைமையில் விழா தொடக்கம்: சிறப்பு விருந்தினர் - பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன், ஏற்பாடு: மதுரை சவுராஷ்டிர சபை, மதுரை ஸ்ரீமத் வேங்கடரமண பாகவதர் சேவை சங்கம், காலை 11:00 மணி, பரதநாட்டியம் - பவானி விஜயன் மாணவிகள், மாலை 5:00 மணி, வீணை - ஹேமநாத், மிருதங்கம் - சுதர்ஸன், மாலை 6:00 மணி, பாட்டு - சந்தோஷ் சுப்பிரமணியம், வயலின் - ரவீந்திரன், மிருதங்கம் - குமார், கஞ்சிரா - சுரேஷ், இரவு 7:00 மணி.
51ம் ஆண்டு தமிழ் இசை விழா: ராஜா முத்தையா மன்றம், மதுரை, எழுமலை பரமேஸ்வரன் - வெங்கடேசன் குழு மங்கல இசை, மாலை 4:30 மணி, மதுரை தமிழ் இசை சங்க தேவார இசைக் குழுவின் தேவார இன்னிசை, மாலை 5:00 மணி, முத்தமிழ் பேரறிஞர் பட்டம், பொற்கிழி வழங்குதல் - வழங்குபவர்: நீதிபதி சொக்கலிங்கம், பெறுபவர் - டி.வி.வரதராஜன், ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:00 மணி.
மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டுகளில் பாதாள சாக்கடை இணைப்புக்கான சிறப்பு முகாம்: வார்டு அலுவலகம், வண்டியூர், மதுரை, 36 முதல் 40வது வார்டு மக்கள் மனு வழங்குதல், காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை.
தொழில் முனைவோருக்கான சிறப்பு முகாம்: ஐடியா சென்டர், பாரதியார் தெரு, பாலரெங்காபுரம், மதுரை, தலைமை: வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ், சிறப்பு விருந்தினர்: தாட்கோ அலுவலகம் மாவட்ட பொது மேலாளர் பாலசுப்பிரமணியன், ஏற்பாடு: மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு, காலை 10:00 மணி.
தொழில்நுட்ப ஜவுளியில் முதலீடு, உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் 'டெக்ஸ்டைல் மிஷன் 2025' - கருத்தரங்கம்: ஓட்டல் கோர்ட்யார்ட் மேரியட், ஏற்பாடு: ஜவுளித்துறை, காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.
மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க சிறப்பு கூட்டம்: யூனியன் கிளப் அரங்கம், காந்தி மியூசியம் அருகில், மதுரை, தலைமை: தலைவர் கதிரவன், சிறப்பு விருந்தினர்: ரோட்டரி மாவட்ட ஆளுநர் கார்த்திக், ஏற்பாடு: உதவி ஆளுநர் நெல்லை பாலு, செயலாளர் சண்முகம், பொருளாளர் கார்த்திக், மாலை 6:00 மணி.
அனுமன் ஜெயந்தி விழா : பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், திருப்பரங்குன்றம், பங்கேற்போர் : தென்னிந்தியா பார்வர்ட் பிளாக் நிறுவனர் திருமாறன், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன், அனுமன் சேனா நிறுவனர் ஸ்ரீதர், ஏற்பாடு : இந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா, காலை 11:00 மணி.
மருத்துவம் இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, சேதுபதி பள்ளி எதிரில், சிம்மக்கல், மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் கமல்பாபு, பிரேம்குமார், சுரேந்திர பால், சவுந்தர்யா ராஹினி, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை.
இலவச கண் பரிசோதனை முகாம்: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, அவனியாபுரம், மதுரை, சிறப்பு விருந்தினர்: டாக்டர் திருமலைக்குமார், ஏற்பாடு: ஆதி கண் மருத்துவமனை, நாட்டு நலப்பணி திட்டம், இளையோர் செஞ்சிலுவை சங்கம், காலை 10:30 மணி.
விளையாட்டு 29வது ராஜாமணி, கனகமணி அம்மாள் நினைவு மாநிள ஹாக்கி போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: ரிசர்வ் லைன் ஸ்போர்ஸ் கிளப், காலை 7:00 மணி.
மாநில பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள்: எஸ்.எம்.டி., மஹால், மேலமடை, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் அசோசியேஷன், காலை 9:00 மணி.
கண்காட்சி காதி மற்றும் கிராமத் தொழில்கள் தயாரிப்புகளின் மாநில கண்காட்சி - தொடக்க விழா: ராஜா முத்தையா மன்றம், மதுரை, தொடங்கி வைப்போர்: கலெக்டர் பிரவீன் குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, ஏற்பாடு: காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், மாலை 4:30 மணி.
எம்.எஸ்.எம்.இ., கனெக்ட் 2025 - தொழில்துறை கருத்தரங்கம், சிறு தொழில் உற்பத்தி பொருட்களை அரசு, பொதுத்துறை நிறுவனங்களுக்கு சப்ளை செய்வதற்கான விற்பனையாளர்கள் சந்திப்பு, கண்காட்சி: மடீட்சியா ஹால், அம்பேத்கர் ரோடு, மதுரை, ஏற்பாடு: சென்னை சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வசதியாக்க நிறுவனம், காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை.

