/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி /டிச.28 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சி /டிச.28 க்குரியது
ADDED : டிச 28, 2025 06:06 AM
கோயில் ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் 183 வது ஜெயந்தி விழா: ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் சபை, பிருந்தாவன கோயில், காதக்கிணறு, மதுரை, பங்கேற்பு: சைதன்ய பீடம் சைதன்யானந்த ஜி மகராஜ் சுவாமிகள், ஏற்பாடு: ஸ்ரீமந் நாயகி இயக்கம், ஆன்மிக இளைஞர் எழுச்சி இயக்கம், காலை 8:00 மணி முதல்.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.
ரேவதி நட்சத்திரத்திற்கான மார்கழி விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி முதல்.
அதிருத்ர மஹாயக்ஞம் வைபவம்: லட்சுமி சுந்தரம் ஹால் வளாகம், கோகலே ரோடு, மதுரை, லகுன்யாஸம், காலை 7:00 மணி, 121 கலச அபிஷேகம், காலை 9:00 மணி , தீபாராதனை, காலை 10;00 மணி, ரித்விக்குகள் சம்பாவனை, மதியம் 1:00 மணி.
மாதாந்திர உழவாரப் பணி: மீனாட்சி அம்மன் கோயில் வளாகம், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி முதல்.
பக்தி சொற்பொழிவு 45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: பாலகுமார், முன்னிலை: ஜெயந்தி, கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.
சிவனும், முருகனும்: நிகழ்த்துபவர் --- வெங்கடாசலம், மொட்டை விநாயகர் கோயில், கீழமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரையில் விருதுநகர், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி ஹிந்து நாடார்கள் உறவின்முறை பொதுப்பரிபாலன சபை, மாலை 6:00 மணி.
விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி,
லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள்: நிகழ்த்துபவர் -- சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி முதல்.
சித்தர்கள் சிந்தனைச் சொல்லரங்கம்: நிகழ்த்துபவர்கள் -- ஞானசம்பந்தம், இளங்கோவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
மார்கழி சத்ஸங்கம், திருப்பள்ளி எழுச்சி, கீதை பாராயணம், பஜனை, புஷ்பாஞ்சலி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி, நோன்பும், ஆரோக்கியமும் தலைப்பில் சொற்பொழிவு: பேராசிரியர் சவுந்திரராஜன், தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 முதல் 8:30 மணி வரை.
72 வது ஆண்டு பாவை விழா: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவைப் பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.
சாரதா தேவி வாழ்க்கை வரலாறு: நிகழ்த்துபவர் -- சுவாமி தயாசாகரானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் -- முகுந்தராஜன் சுவாமிகள், கூடலழகர் கோயில், மதுரை, காலை 7:30 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் -- ஜகந்நாத ராமானுஜ தாசர், வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, காலை 6:30 மணி, மாலை 6:30 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் -- சுஜாதா, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி.
பொது தமிழ்நாடு சவுராஷ்டிரா அரசியல் எழுச்சி மாநாடு: ராஜா முத்தையா மன்றம், மதுரை, தலைமை: ஓய்வுபெற்ற டி.ஜி.பி., கிஷோர்குமார், சிறப்பு விருந்தினர்: சவுராஷ்டிரா மத்திய சபா தலைவர் சுரேந்திரன், முன்னிலை: மாநாட்டு சேர்மன் தினேஷ், ஏற்பாடு: சவுராஷ்டிரா அரசியல் ஒருங்கிணைப்பு குழு, அனைத்து சவுராஷ்டிரா சமூக அமைப்புகள், காலை 10:00 மணி முதல்.
முத்தமிழ் கலைத் திருவிழா: சொர்ணம் மஹால், காளவாசல், மதுரை, தலைமை: தலைவர் நாகா, துவங்கி வைப்பவர்கள்: முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, அ.தி.மு.க., மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன், ஏற்பாடு: அகில உலகத் தமிழ்க் கவிஞர்கள் அறக்கட்டளை, காலை 9:00 மணி முதல்.
தேமதுர தமிழோசை உலகெங்கும் பரவ வேண்டும் - சிந்தனை கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: பேராசிரியர் சக்திவேல், ஏற்பாடு: மாமதுரைக் கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.
இயற்கை வாழ்வியல் முகாம்: காந்தி மியூசியம், மதுரை, முன்னிலை: செயலாளர் நந்தாராவ், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், தலைமை: பொருளாளர் செந்தில்குமார், காலை 10:00 மணி.
குழந்தைகளுக்கான விளையாட்டு, யோகா, பஜனை உள்ளிட்ட குளிர்கால பயிற்சி முகாம்: சின்மயா மிஷன், 7 வது குறுக்குத்தெரு, டோக் நகர், மதுரை, காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை.
பிராமண சுயம்வரம் - பெற்றோர்கள் சந்திப்பு: மதுர நகர் வைதீக சமாஜம் ஹால், ராமையா நகர், தபால்தந்தி நகர், காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
மனவளக் கலை, யோகா பயிற்சிகள்: திருநகர் மனவளக்கலை அறக்கட்டளை, 45 சி,பிருந்தாவன் தெரு, திருநகர் 4 வது நிறுத்தம், மதுரை, காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை.
இலவச மிருதங்கம், ஹார்மோனிய பயிற்சி: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை.
பள்ளி, கல்லுாரி அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை, பொது சுகாதாரத்தில் புதுமைகள் சர்வதேச மாநாடு நிறைவு விழா: யாதவா கல்லுாரி, மதுரை, சிறப்பு அமர்வுகள், காலை 10:00 மணி முதல், தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்புரை: ஓட்டல் பார்க் பிளாசா தலைவர் கே.பி.எஸ்.கண்ணன், மதியம் 2:00 மணி முதல்.
போட்டோகிராபி போட்டி: மதுரை காமராஜ் பல்கலை, ஏற்பாடு: தானம் அறக்கட்டளை, எச்.சி.எல்., காலை 6:00 மணி முதல்.
தியாகராஜர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., முகாம்: அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாதவூர், களப்பணி, காலை 8:00 மணி முதல், திரைப்படமும், சமூகமும் சிறப்புரை: உதவிப்பேராசிரியர் முத்துக்குமார், காலை 11:30 மணி, மாற்றுத்திறனாளிகளும், சமூகநலத்திட்டங்களும் சிறப்புரை: இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மதியம் 3:00 மணி, கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணி, மாலை 5:30 மணி, கலை நிகழ்ச்சிகள், மாலை 6:00 மணி.
மருத்துவம் இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, மதுரை, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை.
கண்காட்சி ஷாப்பிங் திருவிழா 2025: தமுக்கம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை எக்னாமிக் சேம்பர், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.
பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை கண்காட்சி: சீமா டாடா யார்டு, பென்ஸ் ஷோரூம் அருகில், கப்பலுார், ஏற்பாடு:சீமா டாடா, காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.
கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு:மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.
விளையாட்டு 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள்: பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லுாரி, ஏனாதி, காலை 7:00 மணி முதல்.

