sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி / ஜன. 10 க்குரியது

/

 இன்றைய நிகழ்ச்சி / ஜன. 10 க்குரியது

 இன்றைய நிகழ்ச்சி / ஜன. 10 க்குரியது

 இன்றைய நிகழ்ச்சி / ஜன. 10 க்குரியது


ADDED : ஜன 10, 2026 07:02 AM

Google News

ADDED : ஜன 10, 2026 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் வாஸ்து சாந்தி: செல்லத்தம்மாள் கோயில், சிம்மக்கல், மதுரை, இரவு 8:00 மணி.

மார்கழி சிறப்பு பூஜை: முனியாண்டி கோயில், பொன்மேனி, மதுரை, கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை, மதியம் 1:30 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.

ஹஸ்தம் நட்சத்திற்கான மார்கழி மாத விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி.

சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, சிறப்பு பூஜை, காலை 6:30 மணி, பஜனை, காலை 8:30 மணி, ஹோமம், காலை 10:30 மணி, சிறப்பு சொற்பொழிவு: சுவாமி நித்யதீபானந்தர், காலை 11:15 மணி, ஆராதனை, மதியம் 12:15 மணி, சிறப்பு பஜனை, மாலை 6:30 மணி.

பக்தி சொற்பொழிவு தியானம், சத்ஸங்கம்: நிகழ்த்துபவர் --- வாசிநாதம் சுவாமிகள், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: சித்தர் அகத்தியனார் சித்த யோக தியான மையம், மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.

ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த நாம சங்கீர்த்தன பஜன் மண்டலி 22ம் ஆண்டு விழா, தோடயமங்களம், குரு கீர்த்தனை, மாலை 3:00 மணி, பஞ்சபதி, தியான கீர்த்தனைகள் மாலை 5:15 மணி, பூஜை, திவ்யநாமம், டோலோத்ஸவம் இரவு 7:31 மணி. பிராமண கல்யாண மகால், எஸ்.எஸ்.காலனி, மதுரை.

தாயுமானவர் பாடல்கள்: நிகழ்த்து பவர் -- கண்ணன், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, கலை 7:00 மணி, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை: நிகழ்த்துபவர் -- சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, காலை 9:15 மணி.

விஷ்ணு ஸகஸ்ரநாம பாரா யணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி,

மார்கழி சத்ஸங்கம், திருப்பள்ளி எழுச்சி, கீதை பாராயணம், பஜனை, புஷ்பாஞ்சலி: தெய்வ நெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி முதல்.

72 வது ஆண்டு பாவை விழா: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவைப் பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் -- முகுந்தராஜன் சுவாமிகள், கூடலழகர் கோயில், மதுரை, காலை 7:30 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் -- ஜகந்நாத ராமானுஜ தாசர், வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, காலை 6:30 மணி, மாலை 6:30 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் -- சுஜாதா, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி.

பொது அரசு டாக்டர்கள் சங்கம் பொன்விழா மாநாடு: அரசு மருத்துவக்கல்லுாரி, மதுரை, தலைமை: மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில், துவக்கி வைப்பவர்: அமைச்சர் சுப்பிரமணியன், சிறப்பு விருந்தினர்கள்: அமைச்சர்கள் மூர்த்தி, தியாக ராஜன், சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார், காலை 11:00 மணி.

மார்கழி தமிழிசை திருவிழா: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, மூவர் தேவாரம், மாலை 6:00 மணி, உரையரங்கம், மாலை 6:45 மணி, திருவெம்பாவை, இரவு 7:00 மணி, திருப்புகழ் இன்னிசை, ஏற்பாடு: திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி அறக் கட்டளை, இரவு 7:30 மணி,

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் மதுரை ஒருங்கிணைப்புக் குழு 19வது ஆண்டு விழா: அருணாச்சலம் - கமலம்பாள் ஆடிட்டோரியம், மதுரை, பொது அமர்வு, மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை, இரவு அமர்வு, இரவு 8:30 முதல் நள்ளிரவு 12:30 மணி.

சண்டீ ஹோம பூஜைகள்: விஸ்வாஸ் கருத்தரங்கு கூடம், வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, சக்ர நவாவரண பூஜை, காலை 9:00 மணி, துாமாவதி மந்திர ஸஹித சண்டீ ஹோமம், ஏற்பாடு: புதுக்கோட்டை ஸ்வயம்பிரகாச அவதுாத சதாசிவ அறக் கட்டளை, மாலை 5:30 முதல் இரவு 8:30 மணி வரை.

74வது ஆண்டு கொண்டாட்டம், இசை, கலை விழா: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, இசை நிகழ்ச்சி: வீணை - - ஜெயந்தி, வயலின் -- குமரேஷ், மிருதங்கம் -- ஜெயச்சந்திரராவ், கடம் -- கிருஷ்ணசாமி, ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், மாலை 6:00 மணி.

தமிழிசை விழா: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, நாதஸ்வரம், வீணை, புல்லாங் குழல் உள்ளிட்ட இசை நிகழ்ச்சி, ஏற்பாடு: மதுரை இன்னிசை அறக்கட்டளை, சென்னை இசைக்கூடல் பண்பாட்டு அறக்கட்டளை, அமெரிக்காவின் வலைத்தமிழ் அறக்கட்டளை, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.

மரபு பொங்கல் திருவிழா: காந்தி மியூசியம், மதுரை, பாடகர் சித்திரசேனனின் கிராமி இசை நிகழ்ச்சி, ஏற்பாடு: மதுரை இயற்கை சந்தை, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.

தனியார் வேலைவாய்ப்பு முகாம்: வேலம்மாள் பொறியியல் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை.

பள்ளி, கல்லுாரி பட்டமளிப்பு விழா: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஜோ அருண், முன்னிலை: முதல்வர் பால் ஜெயகர், காலை 10:00 மணி.

என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம்: சரந்தாங்கி, சிவானந்த ஆசிரமம் பார்வையிடல், மனநலம் பேணும் நிகழ்ச்சி, காலை 10:30 மணி, உடல்நலம் சிறப்புரை: மதுரை காந்தி மியூசியம் முதல்வர் தேவதாஸ், மதியம் 2:00 மணி, ரத்ததானம் சிறப்புரை: திருமங்கலம் அரசு கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்: ஜெகன், இரவு 7:00 மணி, கலை நிகழ்ச்சிகள், ஏற்பாடு: எம்.ஏ.வி.எம்.எம்., ஆயிரவைசியர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., பிரிவு, இரவு 8:00 மணி,

பொங்கல் விழா: யாதவர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: பார்க் பிளாசா குழும நிறுவனர் கே.பி.எஸ்.கண்ணன், தலைமை: முதல்வர் ராஜூ, முன்னிலை: தலைவர் ஜெய ராமன், காலை 9:00 மணி.

திருமணத்தடை நீக்கும் சுயம்வர கலாபார்வதி, கந்தர்வராஜர் யாகம்: எஸ்.எம்.கே., திருமண மண்டபம், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, காலை 10:30 மணி, நெல்லை வெங்கடேஸ்வர பாகவதரின் ஆண்டாள் திருக்கல்யாணம், நாம சங்கீர்த்தனம், ஏற்பாடு: அனுஷத்தின் அனுக் கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:00 மணி.

புது மதுரை பசுமை உற்பத்தி 'எக்ஸ்' மாநாடு: ஓட்டல் கோர்ட் யார்ட் மேரியட், மதுரை, ஏற்பாடு: இந்திய தொழில் கூட்டமைப்பு, காலை 9:30 மணி.

மருத்துவம் இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, மதுரை, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை.

நுரையீரல் செயல்திறன், கண் விழித்திரை உள்ளிட்டவற்றிற்கான இலவச பரிசோதனை முகாம்: ரோசிபெர்ல் மருத்துவமனை, 67, பாரதி நகர் மெயின் ரோடு, கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் சந்திரன், காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை.

கண்காட்சி பிரில்லியன்ஸ் வைர ஜூவல்லரி ஷோ தொடக்க விழா: ஜோயாலுக்காஸ் ஜூவல்லரி, மேலவெளி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.

கைத்தறி, நாட்டு ஆடை களுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு:மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.

பர்னிச்சர் திருவிழா, தள்ளுபடி விற்பனை: பூங்காமுருகன் கோயில் மண்டபம், தமுக்கம் அருகில், மதுரை, ஏற்பாடு: தென்காசி பரணி பர்னிச்சர், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us