sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை

 இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : ஜன 29, 2026 05:34 AM

Google News

ADDED : ஜன 29, 2026 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் தெப்ப உற்ஸவம் 9ம் நாள் - சட்டத்தேர்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சித்திரை வீதிகளில் அம்மன், சுவாமி சட்டத் தேரில் எழுந்தருளல், காலை 9:00 மணி, சட்டத்தேர் இழுத்தல், காலை 10:30 மணி, அம்மன், சுவாமி சப்தாவர்ண சப்பரத்தில் எழுந்தருளல், இரவு 7:00 மணி.

தைப்பூசத் திருவிழா: சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில், யாகசாலை பூஜைகள், காலை 8:30 மணி, சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு, மதியம் 12:30 மணி, பல்லக்கு வாகனத்தில் சுவாமி புறப்பாடு, மாலை 6:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.

குருவாரத்தை முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவர் வெள்ளி பாதுகைக்கு புஷ்பாஞ்சலி: மஹா பெரியவர் கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு ஏகாதசியை முன்னிட்டு ராமநாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி, வாசி நாதம் நிகழ்த்தும் சத்சங்கம், மாலை 5:00 மணி.

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

ஏகாதசியை முன்னிட்டு அகண்ட ஹரே ராம மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி, அபிஷேகம், காலை 11:00 மணி, சத்சங்கம், மதியம் 1:00 மணி.

பள்ளி, கல்லுாரி என்.எஸ்.எஸ்., முகாம் - நிறைவு விழா: தேனுார், தலைமை: முதல்வர் சாந்திதேவி, சிறப்பு விருந்தினர்: ஆய்வாளர் காசி சேதுமணியன், மதுரை காமராஜ் பல்கலை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பாண்டி, ஏற்பாடு: செந்தமிழ்க் கல்லுாரி, காலை 8:30 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம்: ஆலாத்துார், மகளிர் ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம் சிறப்புரை: சத்துணவு நிபுணர் பாலமுருகன், காலை 10:30 மணி, 'உங்கள் உடல்நலம் உங்கள் கையில்' சிறப்புரை: சித்த மருத்துவர் சித்தையா, மதியம் 2:30 மணி, கலை நிகழ்ச்சிகள், மாலை 6:00 மணி.

ஆரோக்கிய பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு: செயின்ட் கிளாரட் மேல்நிலைப் பள்ளி, கருமாத்துார், சிறப்பு விருந்தினர்: மகாலட்சுமி, ஏற்பாடு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி வணிகவியல் தகவல் தொழில்நுட்பத்துறை, காலை 11:00 மணி.

உங்கள் மதிப்பு, நோக்கத்தை ஆராய்தல் - கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மணிவண்ணன் கிளாஸ் டிரேடர்ஸ் உரிமையாளர் மணிவண்ணன், ஏற்பாடு: ஆங்கிலத்துறை, மதியம் 2:30 மணி.

பொது தமிழ்க்கூடல்: உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை, தலைமை: சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, முன்னிலை: பேராசிரியர் முனியாண்டி, சிறப்புரை: அருப்புக்கோட்டை சைவபானு சத்திரிய கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் தனசுபா, ஏற்பாடு: திருமங்கலம் அன்னை பாத்திமா கலை அறிவியல் கல்லுாரி, காலை 10:00 மணி.

பாரத பண்பாட்டு கேந்திரம் தலைமை அலுவலக திறப்பு: சுபா இல்லம், கென்னட் மருத்துவமனை ரோடு, எல்லீஸ்நகர் மதுரை, முன்னிலை: ஒருங்கிணைப்பாளர்கள் செல்வராஜ், செல்வ விக்கேஷ், பழனிவேல், சிறப்பு விருந்தினர்: விருதுநகர் விவேகானந்தா அறக்கட்டளை தலைவர் சிவலிங்கம், காலை 10:30 மணி.

வாக்காளர் விழிப்புணர்வு முகாம்: செட்டிகுளம், தலைமை: கல்லுாரி முதல்வர் ராஜூ, முன்னிலை: தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், சிறப்பு விருந்தினர்: ஓட்டல் பார்க் பிளாசா தலைவர் கே.பி.எஸ்.கண்ணன், ஏற்பாடு: யாதவர் கல்லுாரி, காலை 11:00 மணி.

மருத்துவம் பொது மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிகுளம், மதுரை, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.

விளையாட்டு மாநில அளவில் கல்லுாரிகளுக்கு இடையேயான காமராஜர் நினைவு வாலிபால் போட்டி - 3ம் நாள்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: தலைவர் கோடீஸ்வரன், முன்னிலை: இணைச்செயலாளர் பாலமுருகன், சிறப்பு விருந்தினர்: நாடார் மகாஜன சங்கம் பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ், மாலை 6:30 மணி.






      Dinamalar
      Follow us