sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 12க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 12க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 12க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 12க்குரியது


ADDED : ஜூலை 12, 2025 04:23 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

கும்பாபிஷேகம் - யாகசாலை பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மங்கள வாத்தியம், காலை 7:00 மணி, நான்காம் கால யாக பூஜைகள், காலை 8:30 முதல் மதியம் 11:30 மணி வரை, வேத, திருமுறை பாராயணம், மாலை 4:30 மணி, ஐந்தாம் கால யாக பூஜைகள், மாலை 5:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

கும்பாபிஷேகம் : பூர்ண புஷ்கலா வில்லாயுதமுடைய அய்யனார், முத்தையா கருப்பையா சுவாமி, நாகப்ப சுவாமி கோயில், கோச்சடை, மதுரை, இரண்டாம் கால யாக வேள்வி ஆரம்பம், பூஜைகள், காலை 8:00 முதல் 10:00 மணிக்குள், எந்திர ஸ்தாபிதம், மருந்து சாத்துதல், கலசம் ஸ்தாபிதம், காலை 10:45 முதல் 11:45 மணிக்குள், மூன்றாம் கால வேள்வி ஆரம்பம், பூஜைகள், வேதபாராயணம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 5:30 முதல் இரவு 10:00 மணி.

கோயில் உற்ஸவம் : பாதாள மாரியம்மன், முனியாண்டி சுவாமி கோயில், மணிநகரம் மெயின் ரோடு, மதுரை, அன்னதானம், மதியம் 12:00 மணி, துவக்கி வைப்பவர்கள்: அமைச்சர் தியாகராஜன், மேயர் இந்திராணி, மாவிளக்கு, முளைப்பாரி நகர்வலம், இரவு 9:00 மணி, அம்மனுக்கும் சுவாமிக்கும் ஆராதனை, இரவு 12:00 மணி, அம்மன் புஷ்ப பல்லக்கில் நகர்வலம் வருதல், இரவு 1:00 மணி.

வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, தீபாராதனை, காலை 9:00 மணி.

94ம் ஆண்டு உற்ஸவம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், புட்டுத்தோப்பு ரோடு, மதுரை, அன்னதானம், காலை 11:00 மணி, சிறப்பு நிகழ்ச்சி, இரவு 7:00 மணி.

56ம் ஆண்டு உற்ஸவம்: சந்தன மாரியம்மன் கோயில், சொக்கலிங்கநகர், மதுரை, அம்மனுக்கு பொங்கல் வைத்தல், அதிகாலை 5:00 மணிக்கு மேல், ஆற்றுக்கு சென்று முளைப்பாரி கரைத்தல், காலை 7:00 மணி, விளையாட்டு போட்டிகள், காலை 10:00 மணி, திருப்பாவை, திருவெம்பாவை பயிற்சி பள்ளி ஆசிரியை விசாலாட்சி தலைமையில் விளக்கு பூஜை, மாலை 6:00 மணி.

ஆனி பிரமோற்ஸவ நிகழ்ச்சி: ஸ்ரீநிவாச பெருமாள் தேவஸ்தானம், மீனாட்சிபுரம் 2வது தெரு, மதுரை, பகவத் அனுக்ஞை, விஷ்வக்சேனர் திருமஞ்சனம், கருட கொடியுடன் புறப்பாடு, மாலை 5:00 மணி, ம்ருத்ஸங்க்ரஹணம், அங்குரார்ப்பணம், மாலை 6:00 மணி, வாஸ்து சாந்தி, பிரசாதம் வழங்குதல், இரவு 7:00 மணி, கருட கொடி பிரதிஷ்டை, இரவு 9:00 மணி.

பக்தி சொற்பொழிவு

தாயுமானவர் பாடல்கள்: நிகழ்த்துபவர் --- கண்ணன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - சுவாமி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 முதல் 8:00 மணி வரை, ஸ்ரீ பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 முதல் 10:15 மணி.

ஸ்ரீமத் பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

சத்ஸங்கம், கூட்டுப்பிரார்த்தனை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, இரவு 7:00 முதல் 8:30 மணி வரை.

பள்ளி, கல்லுாரி

மை மதுரை மாண்டிசோரி பயிற்சி கல்லுாரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா: ஜே.சி., ரெசிடென்சி ஓட்டல், மதுரை, தலைமை: கல்விக் குழுமத் தலைவர் கீதா கண்ணன், சிறப்பு விருந்தினர்கள்: முன்னாள் மாவட்ட முதன்மை நீதிபதி கருப்பையா, டாக்டர் சின்னதுரை, காலை 10:00 மணி.

பொது

உலக குருதி கொடையாளர் தின கருத்தரங்கம்: அரசு மருத்துவமனை, மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன்குமார், பங்கேற்பு: அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ் குமார், ரத்தவங்கி அலுவலர் டாக்டர் சிந்தா, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் குமரகுருபரன், காலை 11:00 மணி.

இந்தியன் வங்கியின் சுயஉதவி குழுக்களுக்கான மெகா கடன் வழங்கும் முகாம்: தமுக்கம் மாநாட்டு அரங்கம், மதுரை, தலைமை: மத்திய நிதி சேவைகள் துறை செயலர் நாகராஜூ, பங்கேற்பு: வங்கி நிர்வாக இயக்குநர் பினோத்குமார், மதியம் 3:00 மணி முதல்.

16வது வேலை நியமன உத்தரவு வழங்கும் விழா: ரயில்வே கல்யாண மண்டபம், மேற்கு ரயில்வே நுழைவாயில் அருகில், மதுரை, தலைமை: மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா, காலை 10:30 மணி முதல்.

மருத்துவம்

இலவச கண்பரிசோதனை முகாம்: வாகைக்குளம் துவக்கப்பள்ளி, பனங்காடி, மதுரை, தலைமை: டாக்டர் ஜெயபாலன், ஏற்பாடு: மக்கள் சட்ட உரிமைகள் கழகம், அருணோதயா கண் மருத்துவமனை, காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை.

கண்காட்சி

மான்சரோவர் ஆடைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை.

யோகா

யோகாசனா, பிராணாயாம வகுப்புகள்: சின்மயா மிஷன், கோச்சடை, மதுரை, காலை 6:30 மணி.






      Dinamalar
      Follow us