UPDATED : ஜூலை 16, 2026 07:44 PM
ADDED : ஜூலை 16, 2026 07:14 PM
ஜூலை 17
கோயில்
* ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன் தங்கச்சப்பரத்தில் பவனி, காலை 9:00 மணி, அன்ன வாகனத்தில் பவனி, இரவு 7:00 மணி.
* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.
* ஆடித்திருவிழா: முத்துமாரியம்மன் கோயில், ஊருணிக்கரை, அனுப்பானடி, மதுரை, பால்குடம், பூக்குழி, காலை 6:00 மணி, சக்தி கரகம், அக்னிச்சட்டி, மாலை 6:00 மணி.
* கோயில் உற்ஸவம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், புட்டுத்தோப்பு ரோடு, மதுரை, சக்தி கரகம், பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, பொங்கல் வைத்தல், இரவு 7:00 மணி, கும்மிப்பாட்டு, இரவு 8:00 மணி, அம்மனுக்கு படையல் போடுதல், அதிகாலை 12:00 மணி.
ஆடி வெள்ளி * மீனாட்சி, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்: மீனாட்சி சொக்கநாதர் கோயில், கோச்சடை, மதுரை, காலை 9:00 மணி.
* அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்: சக்தி விநாயகர் கோயில், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, காலை 9:00 மணி.
* துர்க்கை, தேவி கருமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, காலை 11:30 மணி.
* சுவாமிக்கு கவச அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* பிரகலாத சரித்திரம் - கம்பராமாயண தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - திருச்சி கல்யாணராமன், மஹா பெரியவர் கோயில், வ.உ.சி., தெரு, ஆனையூர் மெயின் ரோடு, கூடல்நகர், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:30 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* துறவும் தொண்டும்: நிகழ்த்துபவர் - சவுந்திரராஜன், தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ரமேஷ் குழுவின் வீணை இசை, மாலை 6:00 மணி.
* விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
* திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: லட்சுமி விநாயகர் கோயில், மகாலட்சுமி நகர் 4வது தெரு, புதுார், மதுரை, ஏற்பாடு: ஹரி பக்த சமாஜம், மாலை 6:00 மணி.
* பகவத் கீதை - சம்பூர்ண பாராயணம்: நிகழ்த்துபவர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.
பள்ளி, கல்லுாரி
* ஆராய்ச்சி நெறிமுறைகளின் அடிப்படைகள் குறித்த தேசிய பயிலரங்கம்: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: நான்காம் தமிழ்ச்சங்கம் செயலாளர் மாரியப்ப முரளி, சிறப்பு விருந்தினர்கள்: திருநெல்வேலி ஹிந்துக் கல்லுாரி ஓய்வு பெற்ற பேராசிரியர் கண்ணா கருப்பையா, பாபநாசம் திருவள்ளுவர் கல்லுாரி உதவிப் பேராசிரியர் ஜெகதீசன், காலை 10:00 மணி.
* ஏஜென்டிக் செயற்கை நுண்ணறிவு - பயிற்சி பட்டறை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: செயற்கை நுண்ணறிவு நிபுணர் ராம்குமார் மனோகரன், ஏற்பாடு: தகவல் தொழில்நுட்பத் துறை, காலை 9:00 மணி, பாரதியார் மன்றம் - தொடக்கவிழா, சிறப்புரை: ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார், ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 9:00 மணி, எஸ்.வி.என்., - சி.ஐ.ஐ., - ஐ.டபிள்யூ.என்., தொடக்கவிழா சிறப்பு விருந்தினர்கள்: சி.ஐ.ஐ., இந்திய மகளிர் வலையமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஹேமா, இணை ஒருங்கிணைப்பாளர் விசாலாட்சி, பிரிவு தலைவர் நிலோபர் பாத்திமா, ஜனன்யை குழும நிறுவனங்கள் நிறுவனர் சத்யா, காலை 10:30 மணி.
பொது
* யுனைடெட் பில்ட் எக்ஸ்போ - கட்டுமான கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, துவக்கி வைப்போர்: கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், லயன்ஸ் கிளப் ஆளுநர் அறிவழகன், ஏற்பாடு: யுனைடெட் டிரேட் பேர்ஸ் இந்தியா, காலை 10:00 மணி, கண்காட்சி நேரம்: இரவு 7:00 மணி வரை.
* சர்வ சமய அமைதிப் பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செயலாளர் மோகன், அருட் செய்தி: மேலுார் அரசுக் கலைக்கல்லுாரி உதவிப் பேராசிரியர் மைக்கேல், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி.
* மக்கள் மரபியல் - வாழ்வியல்: பண்டைய தமிழக வரலாறு குறித்த கருத்தரங்கம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, சிறப்புரை: மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் குமரேசன், மாலை 5:00 மணி.
விளையாட்டு
* பள்ளிக் கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கூடைப்பந்து, டெனிகாய்ட், கால்பந்து உள்ளிட்ட போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 7:00 மணி முதல்.
மருத்துவம்
* நிறுவனர் டாக்டர் மனோரமா பிறந்த மாதத்தை முன்னிட்டு குழந்தையில்லா தம்பதிக்கான மருத்துவ முகாம்: சுமதி கருத்தரித்தல் மையம், சுமதி மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.
கண்காட்சி
* அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
* மான்சரோவர் - ஆடவர் ஆடைகள் தள்ளுபடி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர் மெயின் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.
