/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி // ஜூலை 18 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சி // ஜூலை 18 க்குரியது
ADDED : ஜூலை 18, 2024 04:12 AM
கோயில்
ஆடிப் பெருந்திருவிழா 6ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், தங்கப் பல்லக்கில் எழுந்தருளல், காலை 7:00 மணி, யானை வாகனத்தில் எழுந்தருளல், மாலை 6:00 மணி.
தட்சிணாமூர்த்தி பூஜை:
கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி
தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8.00 மணி.
வரசித்தி விநாயகர் கோயில் பெருந்தேவி தாயார், பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி காலை 11:00 மணி.
கல்கத்தா காளி அம்மன் கோயில் எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6.00 மணி, காளியம்மனுக்கு பூஜை: காலை 6:30 மணி, குருவாயூரப்பனுக்கு பூஜை: காலை மணி. 7:00
பக்தி சொற்பொழிவு
சுவாமி சிவானந்தரின் மகா ஆராதனை விழாவை முன்னிட்டு 'தாயுமானவரும் சிவானந்தரும்' - சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், பழைய திருக்கல்யாண மண்டபம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரை தெய்வ நெறிக் கழகம், மாலை 6:00 மணி.
108 திவ்ய தேச வைபவம்: நிகழ்த்துபவர் - தென் திருப்பேரை அரவிந்த் லோச்சனன் சுவாமி, மதன கோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி.
திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கை வரலாறு: நிகழ்த்துபவர் - ஓம் சக்தி நடேசன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பொது
சுய பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அரசு உயர்நிலைப்பள்ளி, சிறுவாலை, மதுரை, தலைமை: தலைவர் ஜெயராஜசேகர், ஏற்பாடு: ஏ.என்.டி., கல்வி, மருத்துவம், சமூக மேம்பாட்டு அறக்கட்டளை, காலை 10:30 மணி.
விளையாட்டு
பள்ளிகளுக்கிடையேயான டி.வி.சுந்தரம் ஐயங்கார் நினைவு மாநில கையுந்து பந்தாட்டப் போட்டிகள்: டி.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி, லட்சுமிபுரம், மதுரை, போட்டியை துவக்கி வைப்பவர்: டி.வி.எஸ்., பள்ளிகளின் துணை இயக்குனர் மைதிலி சுந்தரராஜன், காலை 8:30 மணி.
பள்ளி, கல்லுாரி
பாரம்பரிய நெல் வகைகளும், அதன் பாதுகாப்பும்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை, தலைமை: முதல்வர் (பொ) ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: தியாகராஜர் கல்லுாரி தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் கார்த்திகேயன், காலை 10:30 மணி.
செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டு கருத்தரங்கு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, தலைமை: ராமசுப்பையா, முதல்வர், பேசுபவர்: கார்த்திகேயன் சுந்தர்ராஜன், திட்ட மேலாளர், விஷ்ணுவா, மதுரை, ஏற்பாடு: சுயநிதி பிரிவு செயற்கை நுண்ணறிவு துறை, மதியம் 12:00 மணி.
மருத்துவம்
இலவச கண் பரிசோதனை முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட்ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.

