தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூன் 18, 2026 08:57 PM

ADDED : ஜூன் 18, 2026 08:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2026 08:57 PM ADDED : ஜூன் 18, 2026 08:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

* கும்பாபிஷேக விழா - மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவட்சலம் குழுவினரின் இசைநிகழ்ச்சி : பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோயில், சவுராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, தலைமை: சவுராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைவர் ஜவஹர்பாபு, மாலை 6:30 மணி முதல்.

* ஆனி முதல் வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு அதிகார தோரணை அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, இரவு 7:00 மணி.

* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.

பக்தி சொற்பொழிவு

* திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

* பகவத்கீதை - அத்தியாயம் 2: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

* பட்டமளிப்பு விழா: யாதவா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, முன்னிலை: தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், சிறப்பு விருந்தினர்: ஓட்டல் பார்க் பிளாசா சேர்மன் கே.பி.எஸ்.கண்ணன், காலை 10:00 மணி.

* உலக யோகா தின நிகழ்ச்சி: மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளி, மறவன்குளம், தலைமை: முதல்வர் ஈஸ்டர் ஜோதி, காலை 9:00 மணி.

பொது

* பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா பயனாளிகளுக்கு பிரதமர் மோடி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, திருப்பரங்குன்றம், முன்னிலை: வெங்கடேசன் எம்.பி., ஏற்பாடு: பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு, மாலை 4:00 மணி.

* கல்லுாரி மாணவர்களுக்கான படிப்பிடை பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், கல்வி அலுவலர் நடராஜன், சிறப்பு விருந்தினர்: யூ கேன் பவுண்டேஷன் நிறுவனர் அக்கீபா, மதியம் 2:30 மணி.

* சர்வ சமய அமைதிப் பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், அருட்செய்தி வழங்குபவர்: கல்வியாளர் சொல்வேந்தன், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம் (செப்சிரா), மாலை 6:00 மணி.

மருத்துவம்

* உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை.

கண்காட்சி

* அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

* கோ-ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா, தள்ளுபடி விற்பனை: அங்கயர்கண்ணி கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, வெங்கலக்கடை தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us