UPDATED : ஜூன் 02, 2026 05:13 PM
ADDED : ஜூன் 01, 2026 05:21 PM
கோயில்
* திருஞானசம்பந்தர் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, திருஞானசம்பந்தர் திருப்பல்லக்கில் 63 நாயன்மார்களுடன் ஆவணிமூல வீதிகளில் உலா, காலை 8:00 மணி, திருஞானசம்பந்தர் கோ ரதத்தில் மதுரை ஆதீன மடத்தில் எழுந்தருளி, சித்திரை வீதிகளில் உலா, இரவு 8:00 மணி.
* திருஞானசம்பந்தர் குருபூஜை விழா: மதுரை ஆதீனம், தெற்காவணி மூலவீதி, மதுரை, ஞானசம்பந்தருக்கு குருமகா சன்னிதானம் சிறப்பு வழிபாடு, காலை 11:00 மணி, ஞானசம்பந்தர் விருது வழங்குதல், மாலை 6:40 மணி.
* வைகாசி திருவிழா: கூடலழகர் கோயில், மதுரை, தீர்த்தவாரி, காலை 9:00 மணி, குதிரை வாகனத்தில் பெருமாள் வைகை ஆற்றில் இறங்குதல், காலை 10:30 மணி, ராமராயர் மண்டபத்தில் தசாவதார சேவை, இரவு 11:00 மணி.
* வருடாபிஷேகம்: பத்ரகாளியம்மன் கோயில், திருப்பரங்குன்றம், கணபதி ஹோமம், அதிகாலை 4:30 மணி.
* வைகாசி பெருவிழா - தேரோட்டம்: ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், திருத்தேரில் அம்மன் எழுந்தருளல், காலை 7:15 மணி, திருத்தேர் வடம் பிடித்தல், காலை 8:00 மணி, இசை கச்சேரி, இரவு 7:00 மணி.
* வைகாசி திருவிழா - மறு பூஜை: ராஜகாளியம்மன் கோயில், மேட்டுப்புஞ்சை, சிந்தாமணி, மதுரை, இரவு 9:00 மணி.
* வைகாசி பெருவிழா: திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை, வீரபத்திர சுவாமிக்கு சுத்த அன்னபடைப்பு பூஜை, இரவு 7:00 மணி.
* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* உலகளவிலான ராமகிருஷ்ண மடம், மிஷனின் தலைவர் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் தீட்சை: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 6:00 மணி, அருளுரை, தரிசனம், இரவு 7:00 மணி.
* வேங்கடரமண பாகவத சுவாமிகளின் திருநட்சத்திர மாதாந்திர ஆராதனை, பஜன்: கோவிந்த தாஸ சேவா சமாஜம், மஹால் 6வது தெரு, மதுரை, பாட்டு - கனஷ்யாம், வயலின் - கண்ணன், மிருதங்கம் - லட்சுமணராஜ், மாலை 6:30 மணி.
* விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - சுவாமி நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.
பொது
* குப்பை அகற்றுவதில் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்: மாநகராட்சி அலுவலகம், மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம், காலை 10:00 மணி.
* நெல் கொள்முதலுக்கு 70 நாட்களுக்கு மேலாக பணப்பட்டுவாடா செய்யாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்: வட்டாட்சியர் அலுவலகம், வாடிப்பட்டி, ஏற்பாடு: வாடிப்பட்டி முல்லை பெரியாறு பாசன விவசாயிகள், மதுரை பாரதிய கிசான் சங்கம், காலை 10:00 மணி.
யோகா, தியானம்
* இலவச ராஜயோக தியான பயிற்சி: ராஜயோகா பவன், அனுமார் கோயில் படித்துறை ரோடு, சிம்மக்கல், மதுரை, பயிற்சி வழங்குபவர்: யோகாச்சார்யா அர்ஜூன் சிங், ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், காலை 7:00 முதல் 8:00 மணி வரை, காலை 10:00 முதல் 11:00 மணி வரை, மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை.
மருத்துவம்
* தோல் லேசர் நவீன மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.
கண்காட்சி
* 76ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு புத்தக கண்காட்சி, தள்ளுபடி விற்பனை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேற்கு கோபுர தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
