UPDATED : ஜூன் 08, 2026 07:30 PM
ADDED : ஜூன் 08, 2026 07:20 PM
ஜூன் 9
கோயில்
* 74ம் ஆண்டு உற்ஸவம்: வீரமாகாளியம்மன் கோயில், ஜெய்ஹிந்த்புரம், மதுரை, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, மாலை 5:00 மணி, கூழ் வழங்குதல், இரவு 7:00 மணி.
* 38 வது வருடாபிஷேக விழா: காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், பழங்காநத்தம், மதுரை, காலை 7:05 முதல் 7:55 மணிக்குள், சொற்பொழிவு: நிகழ்த்துபவர் -- ஆசிரியர் சண்முக திருக்குமரன், மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு * பெரியபுராணம்: நிகழ்த்துபவர் -- மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* பகவத் கீதை: நிகழ்த்துபவர் --ஞானசம்பந்தன், தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி முதல்.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் -- டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி முதல்.
* விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் -- திண்டுக்கல் நித்ய சத்வானந்தா சுவாமிகள், சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.
* முரளிஜியின் சொற்பொழிவு: மஹா கணபதி கோயில், கஸ்துாரிபாய் காலனி, பெருங்குடி, ஏற்பாடு: நாமத்வார் பிரார்த்தனை மையம், மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
பொது * எல்.ஐ.சி., பென்சனர்கள் சங்க 29வது ஆண்டு மாநாடு: ஐ.எம்.ஏ., ஹால், அரசு மருத்துவக்கல்லுாரி வளாகம், மதுரை, தலைமை: தலைவர் கோபாலகிருஷ்ணன், காலை 9:30 மணி.
* ரயில்வே ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் பயணப் பாஸ், இ - பாஸாக வழங்கப்படும் என்ற ரயில்வே வாரிய உத்தரவை ரத்துசெய்யக் கோரி ஆர்ப்பாட்டம்: மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் முன்பு, மதுரை, ஏற்பாடு: தட்சிண ரயில்வே ஓய்வூதியர் சங்கம், தேசிய ஓய்வூதியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, காலை 10:30 மணி.
* கள்ளந்திரி பகுதி விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்க வலியுறுத்தி ரோடு மறியல்: கள்ளந்திரி, ஏற்பாடு: மார்க்சிஸ்ட் கம்யூ., காலை 8:00 மணி.
* மாதாந்திர பொதுக்குழு கூட்டம்: மூட்டா அலுவலகம், காக்கா தோப்பு தெரு, மதுரை, தலைமை: கிளைத் தலைவர் பேராசிரியர் ராமமூர்த்தி, காலை 10:30 மணி.
கண்காட்சி: * 76ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புத்தகக் கண்காட்சி, தள்ளுபடி விற்பனை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேற்கு கோபுர தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
