ADDED : மார் 17, 2026 04:51 AM
கோயில் பங்குனி பெருந்திருவிழா - 6ம் நாள்: மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மதுரை, தீச்சட்டி, பால்குடம் எடுத்தல், மாரியம்மன் ரிஷப வாகனத்தில் தெப்பக்குளம் வலம் வருதல், இரவு 7:25 மணி, சிறப்பு அபிஷேகம், இரவு 9:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.
பக்தி சொற்பொழிவு பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
அஷ்டாவக்கிர கீதை: நிகழ்த்துபவர் -- ஜனார்த்தனன், சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பொது தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: பழங்காநத்தம் ரவுண்டானா அருகில், மதுரை, பங்கேற்பு: பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., காலை 10:00 மணி.
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி: வழக்கறிஞர் அறை கட்டடம், உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை, மதுரை, பங்கேற்பு: மதுரை கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர்கள் அஜ்மல்கான், கதிரவன், ஏற்பாடு: அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, மாலை 5:30 மணி.
விளையாட்டு விழா: அரசு சட்டக்கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூடுதல் அரசு வழக்கறிஞர் கண்ணன், முன்னிலை: முதல்வர் குமரன், பங்கேற்பு: வழக்கறிஞர் சுந்தரவேல், மதுரை பார் கவுன்சில் செயலாளர் மோகன் குமார், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை பதிவாளர் கவுரி ரமேஷ், மாலை 3:30 மணி.
அம்ரித் காலத்தில் வணிகம்: உலகளாவிய வணிக மாற்றங்களிலான நிலைத்தன்மை கருத்தரங்கம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: பெங்களூர் கிறிஸ்ட் பல்கலை பேராசிரியர் குமார் சந்தர், அமெரிக்கன் கல்லுாரி துணை முதல்வர் சாமுவேல் அன்புச்செல்வன், ஏற்பாடு: முதுநிலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை, காலை 10:00 மணி.
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு காந்திய சிந்தனை கருத்தரங்கம்: மதுரை காந்தி என்.எம்.ஆர்.சுப்பராமன் மகளிர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் கோமதி, சிறப்பு விருந்தினர்: காந்தி மியூசிய ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், ஏற்பாடு: கல்லுாரி நிர்வாகம், காந்தி மியூசியம், காலை 10:30 மணி.
தி யானம், யோகா தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
கண்காட்சி 'சூத்ர சவுந்தர்யம்' - கைத்தறி, கைவினைப்பொருட்கள் கண்காட்சி: ஜே.சி., ரெசிடென்சி, மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.

