UPDATED : மே 17, 2026 09:04 PM
ADDED : மே 17, 2026 07:42 PM
மே 18
கோயில்
* வைகாசி திருவிழா - கொடியேற்றம்: ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், இரவு 7:35 மணிக்கு மேல் 9:00 மணிக்குள்.
* புதிய தேர் வெள்ளோட்டம்: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுத்தல், காலை 9:00 மணி.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.
பக்தி சொற்பொழிவு
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
* பகவத் கீதை: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி
* உலகளாவிய மனித விழுமியங்கள் (யு.எச்.வி.,) - 5 நாள் ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி துவக்க விழா: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் அசோக் குமார், சிறப்பு விருந்தினர்கள்: மும்பை யு.எச்.வி., தன்னார்வலர் நிதி சிராக் சகடே, பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி பேராசிரியர் மைதிலி, ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரி பேராசிரியர் லலிதா, சேது தொழில்நுட்பக் கல்லுாரி பேராசிரியர் ராஜஸ்ரீ, ஏற்பாடு: கணிதம் மற்றும் மின்னியல், மின்னணுவியல் துறைகள், காலை 9:00 மணி.
மருத்துவம்
* தோல் லேசர் நவீன மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.
பொது
* மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன்குமார், காலை 10:00 மணி.
* சர்வதேச அருங்காட்சியக தினம், மீனாட்சி கல்லுாரி வரலாற்றுத்துறை மாணவிகளுக்கு படிப்பிடை பயிற்சி தொடக்க விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய பொருளாளர் செந்தில்குமார், சிறப்பு விருந்தினர்: மதுரைக் காமராஜ் பல்கலை கல்லுாரி துணை முதல்வர் கபிலன், காலை 11:00 மணி.
* களிமண் பொம்மைகள் செய்தல், சதுரங்கம், ஜும்பா நடனம் உள்ளிட்ட பயிற்சிகள் - குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, ஏற்பாடு: பொது நுாலக இயக்ககம், காலை 11:00 மணி முதல், பெண்களுக்கான அழகுக் கலை பயிற்சி, மதியம் 3:00 மணி.
விளையாட்டு
* மாநில அளவிலான கூடைப்பந்து, ஹாக்கி, கபடி போட்டிகளுக்கு 6 முதல் 9ம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களுக்கான தேர்வு: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 7:00 மணி முதல்.
