ADDED : நவ 13, 2025 12:33 AM
கோயில் குருவாரத்தை முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவர் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி, தீபாராதனை: மஹா பெரியவர் கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
குருதினத்தை முன்னிட்டு தட்சிணாமூர்த்தி, குரு பகவானுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம்: முனியாண்டி கோயில், பொன்மேனி, மதுரை, காலை 7:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.
பக்தி சொற்பொழிவு திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
ஹரே ராமா மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 மணி, சொற்பொழிவு, மதியம் 12:30 மணி.
பள்ளி, கல்லுாரி மனித விண்வெளி ஆய்வு குறித்து சர்வதேச கருத்தரங்கு: பாத்திமா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பாத்திமா மேரி, சிறப்பு விருந்தினர்: நாசா விஞ்ஞானி ஆண்டனி ஜீவராஜன், ஏற்பாடு: இயற்பியல், வேதியியல், கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல் துறை, காலை 11:00 மணி.
உலக கருணை தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு ஊக்கமும், உணவும் வழங்கும் நிகழ்ச்சி: அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளி, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன், மதியம் 12:00 மணி.
பொது கிழக்கு கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: உதவி செயற்பொறியாளர் அலுவலகம், மேலுார், பங்கேற்பு: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
மொழிபெயர்ப்பு பயிற்சி, சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்றுநர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.
கண்காட்சி நீருக்கடியில் அக்வாரியம்: அம்மா திடல், வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, ஏற்பாடு: தி ஓஷன் அமைப்பு, மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை.
'காந்தி சில்ப் பஜார்' - அகில இந்திய கைவினைப் பொருட்களின் கண்காட்சி, விற்பனை: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: பெட்கிராட் நிறுவனம், கைவினைப் பொருட்களுக்கான மேம்பாட்டு இயக்ககம், காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.
பட்டுச் சேலைகள் கண்காட்சி, விற்பனை: திருப்புவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்கம் கிளைகள், 141, கீழ வெளிவீதி, தவிட்டுச்சந்தை, மதுரை, 12, சேர்மன் துளசிராம் 2வது தெரு, மதுரை, ஏற்பாடு: திகோ சில்க்ஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

