sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 25, 2025 ,புரட்டாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி / செப்.25

/

இன்றைய நிகழ்ச்சி / செப்.25

இன்றைய நிகழ்ச்சி / செப்.25

இன்றைய நிகழ்ச்சி / செப்.25


ADDED : செப் 25, 2025 03:18 AM

Google News

ADDED : செப் 25, 2025 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவராத்திரி விழா

ஏகபாதமூர்த்தி அலங்காரம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி, மங்கையற்கரசியின் சொற்பொழிவு, மாலை 6:30 மணி, கலை விழா, காலை 8:00 மணி முதல்.

கள்ளழகர் கோயில், அழகர்கோவில், உட்பிரகாரங்களில் சிறப்பு அலங்காரத்தில் கல்யாண சுந்தரவள்ளித் தாயார் உற்ஸவ புறப்பாடு, மாலை 6:00 மணி, கலை நிகழ்ச்சிகள், காலை 9:30 மணி முதல்.

மடப்புரம் காளியம்மன் அலங்காரம்: தேவி முத்தாலம்மன் கோயில், கீழமாரட் வீதி, மதுரை, மாலை 6:00 மணி.

கூடலழகர் கோயில், மதுரை, உட்பிரகாரங்களில் சிறப்பு அலங்காரத்தில் மதுரவள்ளித் தாயார் உற்ஸவ புறப்பாடு, கொடிமர மண்டபம் முன் வைக்கப்பட்டுள்ள கொலுவிற்கு சிறப்பு பூஜை, கலை நிகழ்ச்சிகள், மாலை 5:00 மணி.

லட்சுமி நாரயணன் அலங்காரம்: திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை, சிறப்பு பூஜை, இரவு 7:00 மணி.

தட்சிணாமூர்த்தி அலங்காரம்: சக்தி சந்நியாசி சுவாமி கோயில், புது ராமநாதபுரம் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

மீனாட்சி அலங்காரம்: மகா துர்க்கையம்மன் கோயில், சிலைமான், புளியங்குளம், மதுரை, கொலு மண்டபத்தில் அம்மனுக்கு சோடஸ உபசார பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி, பிரசாதம் வழங்குதல், இரவு 8:00 மணி.

ஸ்ரீனிவாச கல்யாண அலங்காரம்: நவநீத கிருஷ்ணன் கோயில், மகால் ரோடு, பால்மால் குறுக்குத்தெரு, மதுரை, மாலை 6:00 மணி முதல்.

ராக்காயி அம்மன் அலங்காரம்: பொன்முனியாண்டி சுவாமி கோயில், பொன்மேனி, விமலியின் சொற்பொழிவு, மாலை 6:30 மணி.

சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, பெரியநாயகி அம்பாளுக்கு விஷேச அபிஷேகம், தீபாராதனை, காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:00 மணி, பரதநாட்டியம்: நிகழ்த்துபவர்கள் - நாட்டிய சாஸ்திரா கலைக்கூட மாணவகள், இரவு 7:00 மணி.

சக்தி விநாயகர் கோயில், கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, கொலு வைத்தல், சிறப்பு பூஜை, காலை 10:00 மணி.

தட்சிணாமூர்த்தி அலங்காரம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காளபரமேஸ்வரி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி, சிறப்பு பூஜை, இரவு 8:00 மணி.

மாரியம்மன் அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், கே.கே.நகர், மதுரை, மாலை 6:00 மணி, குபேர சாய்பாபாவிற்கு அபிஷேகம், பூஜைகள், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 6:30 மணி.

துவாரகையில் கிருஷ்ணரிடம் அர்ஜூனனும், துரியோதனனும் போர் உதவி கோரும் அலங்காரம்: திரவுபதி அம்பாள் கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.

மதுரை நகரத்தார் விடுதியில் சுவாமிக்கு மீனாட்சி அலங்காரம், ஆராதனை, வடக்கு சித்திரை வீதி, மதுரை, ஏற்பாடு: நகரத்தார் விஜயதசமி விழாக்குழு, மாலை 6:00 மணி.

கல்யாண சுந்தரர் அலங்காரம்: விசாலாட்சி காசி விஸ்வநாதர் கோயில், தெற்காவணி மூல வீதி, மாலை 6:00 மணி.

அறுபத்து மூவர் குருபூஜை மடம், அம்மன் சன்னதி தெரு, மதுரை, கொலு வைத்தல், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், திருவிளக்கு வழிபாடு, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், லட்சார்ச்சனை, கூட்டு வழிபாடு, ஏற்பாடு: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, மாலை 5:00 மணி.

தட்சிணாமூர்த்தி அவங்காரம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், நேதாஜி ரோடு, மதுரை, மாலை 6:00 மணி முதல், நவராத்திரி விசேஷ பூஜைகள், இரவு 10:00 மணிக்கு மேல்.

கருட வாகன அலங்காரம்: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி தெரு, மதுரை, சிருங்கேரி மடம், பைபாஸ் ரோடு, மதுரை, லலிதா சகஸ்ரநாம பாராயணம், சுவாசினி பூஜை, காலை 8:00 மணி, மாலை 5:00 மணி முதல்.

ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, பஜனை, ஸ்ரீதேவி மஹாத்மியம் பாராயணம், ஆரத்தி, புஷ்பாஞ்சலி, காலை 8:30 மணி, சிறப்பு பஜனை, இரவு 7:00 மணி.

சின்மயா மிஷன், டோக் நகர், மதுரை, லலிதா சஹஸ்ரநாம பூஜை, காலை 6:30 மணி, மதுரை லயசேத்ரா நடனப்பள்ளி வழங்கும் பரதநாட்டியம், ஏற்பாடு: சின்மய தேவி குழு, மாலை 6:30 மணி.

நாராயணீ அவதாரம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, காஞ்சி காமகோடி பீடம் முள்ளிப்பள்ளம் கிளை,சோழவந்தான் ரோடு, கோ பூஜை, காலை 9:00 மணி, காமாட்சி அம்பாளுக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணம், சுவாசினி பூஜை, கன்யாபூஜை, பிரசாதம் வழங்குதல், மாலை 6:00 மணி.

கோயில்

நவராத்திரி உற்ஸவம்: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் செட்டிய தெரு, மதுரை, கிருஷ்ணா அவதாரம், மாலை 6:00 மணி.

ஜெயந்தி உற்ஸவம்: ராமசுவாமி நவநீத கிருஷ்ணசுவாமி கோயில், ராமாயணச் சாவடி தெரு, வடக்கு மாசி வீதி, மதுரை, ராஜாங்கம், ராமாயணச்சாவடி, காலை 8:00 மணி, மச்சாவதாரம், மாலை 4:00 மணி, மகாவிஷ்ணு சப்பரத்தில் நான்கு மாசி வீதி உலா, இரவு 8:00 மணி.

புரட்டாசி பிரம்மோற்ஸவம் - கொடியேற்றம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 9:30 மணிக்கு மேல் 10:00 மணிக்குள், ரதத்திற்கு முகூர்த்தக்கால் நாட்டல், காலை 10:15 மணிக்கு மேல் 11:00 மணிக்குள்.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.

குரு வாரம் முன்னிட்டு சிறப்பு பூஜை: மகாபெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, விக்ரகம் மற்றும் வெள்ளிப்பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி, தீபாராதனை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

நவராத்திரி சிறப்பு வழிபாடு: லலிதா சகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர்கள் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 6:00 மணி.

சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு அகண்ட மகாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி, மாலை 6:00 மணி.

பள்ளி, கல்லுாரி

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கல்லுாரிகளுக்கிடையேயான பல்திறன் போட்டிகள்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி, ஏற்பாடு: முதுகலை மற்றும் ஆராய்ச்சி வரலாற்றுத்துறை, காலை 10:00 மணி, கல்லுாரியின் பெற்றோர்- ஆசிரியர் சந்திப்புக் கூட்டம்: தலைமை: முதல்வர் ராஜேஸ்வர பழனிசாமி, மாலை 3:00 மணி, வளனார் சிறப்பு பள்ளி மாணவர்களுடன் ஒரு நாள்: வளனார் சிறப்புப் பள்ளி, நாகமலை புதுக்கோட்டை, ஏற்பாடு: கல்லுாரி உயிரி வேதியியல் துறை, காலை 10:00 மணி, நடமாடும் மருத்துவ முகாம்: கீழக்குயில்குடி, மதுரை, சிறப்பு விருந்தினர்: வளையங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் தனசேகரன், ஏற்பாடு: கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்ட குழுவினர், காலை 10:00 மணி

வண்ணத்துப்பூச்சி மாத கொண்டாட்டம்: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, வண்ணத்துப்பூச்சி புகைப்பட போட்டி, ஏற்பாடு: கல்லுாரி விலங்கியல் கூட்டமைப்பு, காலை 7:45 மணி.

தமிழ்மொழி இலக்கியத் திறனரி தேர்வுக்கான வழிகாட்டுதல் மற்றும் மாதிரித்தேர்வு நிகழ்வு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, வழிகாட்டுநர்: தியாகராஜர் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் கார்த்திக், முன்னிலை: கல்லுாரி தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராமசுப்பையா, இயக்குநர் பிரபு, பூ கலாசார மைய செயலாளர் ராமக்கிருஷ்ணன், ஏற்பாடு: கல்லுாரி தமிழ்த்துறை, பூ கலாசார மையம்-அறிவகம் நுாலகம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

பொது

மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்: மாநகராட்சி அலுவலகம், மதுரை, தலைமை: மேயர் இந்திராணி, முன்னிலை: கமிஷனர் சித்ரா, துணைமேயர் நாகராஜன், காலை 10:15 மணி.

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் 5ம் ஆண்டு நினைவஞ்சலி: மகாபெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, தலைமை: மதுரை ஸ்டார் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் வாசுதேவன், முன்னிலை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், ஆடிட்டர் சேதுமாதவா, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு நிறுவனர் நெல்லை பாலு, காலை 9:00 மணி.

இன்றைய சூழலில் உலக அமைதிக்கான காந்திய அணுகுமுறை: கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:15 மணி.

ரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழு கூட்டம்: ரயில்வே கல்யாண மண்டபம், ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயில், மதுரை, மதியம் 3:00 மணி.

தன்னார்வலர்களின் துாய்மைப்பணி நிகழ்ச்சி: தெப்பக்குளம் ஆர்ச் அருகில், குகன் பள்ளி ரோடு, மதுரை, ஏற்பாடு: விவேகானந்தர் குடியிருப்போர் சங்கம், வைகை நதி மக்கள் இயக்கம், காலை 8:00 மணி முதல்.

அரசரடி மின்பகிர்மான வட்டப்பகுதிக்கான மின்குறைதீர் கூட்டம்: அரசரடி மேற்கு கோட்ட அலுவலகம், தலைமை: மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி.






      Dinamalar
      Follow us