ADDED : மார் 15, 2026 06:09 AM
கோயில் பங்குனி பெருந்திருவிழா - 4ம் நாள்: மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மதுரை, மாரியம்மன் சிம்மாசனத்தில் தெப்பக்குளம் வலம் வருதல், இரவு 7:25 மணி, சிறப்பு அபிஷேகம், இரவு 9:00 மணி.
சுவாமி ஐயப்பன் விக்ரஹத்துக்கு சிறப்பு அபிஷேகம், படி பூஜை: எஸ்.எம்.கே., திருமண மண்டபம், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, காலை 9:00 மணி, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருவாரூர் பக்தவத்சலம் குழுவின் இசை நிகழ்ச்சி: பாட்டு - ரவி கிரண், வயலின் - ரவீந்திரன், ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, காலை 10:30 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு பஞ்சபூத ரகசியங்கள்: நிகழ்த்துபவர் - பிரேமகுமாரி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத் வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள் விளக்கவுரை வழங்குபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.
ஹரே ராம மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி, அபிஷே கம், காலை 11:00 மணி, சத்சங்கம், மதியம் 1:00 மணி, அன்னதானம், மதியம் 1:30 மணி.
பொது தினமலர் நாளிதழ், ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் இணைந்து வழங்கும் எம்.பி.ஏ., படிக்க விரும்பும் மாணவர்களுக்காக டான்செட், மேட் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு: மதுரைக் கல்லுாரி, மதுரை, காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை.
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டு, மத்திய அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்: முனிச்சாலை, மதுரை, பங்கேற்பு: ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, காலை 10:00 மணி.
மாணவர்களுக்கு தொடர்ந்து நடக்கும் அநீதிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்: திருவள்ளுவர் சிலை அருகே, கலெக்டர் அலுவலகம் ரோடு, மதுரை, ஏற்பாடு: அனைத்து மாணவர் முன்னேற்ற அமைப்பு, காலை 10:00 மணி.
புளியங்குளம் கண்மாய் சீரமைப்பு பணி: அமரர் பூங்கா அருகே, திருநகர், ஏற்பாடு: திருநகர் பக்கம், காலை 10:00 மணி.
மதுரை கிழக்கு நாம் தமிழர் வேட்பாளர் செல்வம் அறிமுக கூட்டம்: அம்மா பூங்கா, கல்மேடு, சக்கிமங்கலம் - ஆண்டார் கொட்டாரம், மதுரை, சிறப்புரை: மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் சிவசங்கரன், கரிகாலபாண்டியன், மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் தீரன் திருமுருகன், மாலை 5:00 மணி.
காந்திய சிந்தனை சான்றிதழ் வகுப்பு: ஆரோலேப், வீரபஞ்சான், மதுரை, பயிற்றுநர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், காலை 9:30 மணி.
இலக்கியத்தில் சட்டம் - வாங்க பேசலாம்: மதுரை திருவள்ளுவர் மன்றம், பொன்மேனி பெரியவர் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: மதுரை இலக்கிய பேரவை, காலை 11:00 மணி.
மாநில தலைவருக்கு பாராட்டு, மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு, முதல்வர் களின் முதல்வர் ஓ.பி.ஆர்., 100 நுால் வெளியீடு, திருமண தகவல் மையம் அறிமுகம், செயற்குழு கூட்டம் - ஐம்பெரும் விழா: டெம்பிள் சிட்டி கிரீன் பார்க், உயர்நீதிமன்றம் பின்புறம், மதுரை, தலைமை: மாநில தலைவர் ஜெயராமன், பங்கேற்பு: பா.ஜ., மாநில செயலாளர் ராம ஸ்ரீனிவாசன், ஏற்பாடு: தமிழ்நாடு ரெட்டி ஜன சங்கம், மதியம் 3:00 மணி.
டி.என்.பி.எஸ்.சி., குரூப் தேர்வு களுக்கான இலவச பயிற்சி: கோவிந்த தாஸ சேவா சமாஜம், மஹால் 6வது தெரு, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு மஹா சவுராஷ்டிர சபா, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
சிறுதானியம், பாரம்பரிய உணவுத் திருவிழா: தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மதியம் 3:00 மணி.
தியானம், யோகா தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
தியானம், ஆளுமை பயிற்சி, அந்தர் யோகம்: சிவானந்த தபோவனம், சிவானந்த நகர், தோப்பூர், மதுரை, முன்னிலை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தர், பயிற்சி அளிப்பவர்: திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனம் சுவாமி சந்திரசேகரானந்த, காலை 10:00 மணி.
கண்காட்சி 'சூத்ர சவுந்தர்யம்' - கைத்தறி, கைவினைப்பொருள் கண்காட்சி: ஜே.சி., ரெசிடென்சி, லேடிடோக் கல்லுாரி ரோடு, மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.

