/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி/ டிச.17 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சி/ டிச.17 க்குரியது
ADDED : டிச 17, 2025 06:34 AM
கோயில் பாலாபிஷேகம்: தங்கமய முருகன் கோயில், விளத்துார், சிறப்பு பூஜை, காலை 9:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.
72 வது ஆண்டு பாவை விழா: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: நிர்வாகி விசலாட்சி, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவைப் பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.
பிரதோஷ பூஜை: காட்டுப்பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 8:00 மணி.
பக்தி சொற்பொழிவு 45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: வசந்தி, முன்னிலை: ராஜேந்திரன், கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.
விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, ஐயப்பன் கோயில் எதிரில், சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.
திருவருட்பா: நிகழ்த்துபவர் -- பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
மார்கழி மாத சத்ஸங்கம், திருபள்ளி எழுச்சி, கீதை பாராயணம், பஜனை, புஷ்பாஞ்சலி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி.
ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
மஹா பெரியவா ஆராதனை விழா : எஸ்.எம்.கே., திருமண மண்டபம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, குருவே சரணம் தலைப்பில் சொற்பொழிவு: பட்டிமன்ற பேச்சாளர் ராமலிங்கம், ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.
திருவடி சரணம்: நிகழ்த்துபவர் - மல்லி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பொது மதுரை மாநகராட்சி முறைகேடான வரிவிதிப்பில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளதை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம்: பழங்காநத்தம், தலைமை: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா, மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா, ஏற்பாடு: மதுரை நகர், மாவட்ட அ.தி.மு.க., காலை 10:00 மணி.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம், மதுரை, தலைவர்: மண்டலத் தலைவர் முருகேசன், முன்னிலை: மாநிலத் தலைவர் கிருஷ்ணன், ஏற்பாடு: போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, காலை 10:30 மணி.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்: மதுரை தலைமை தபால் அலுவலக வளாகம், வடக்குவெளி வீதி, மதுரை, முன்னிலை: மாவட்டச் செயலாளர் பாண்டியன், ஏற்பாடு: அகில இந்திய சிவில் பென்ஷசனர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு, மாலை 4:00 மணி.
ஓய்வூதியர் தினக்கூட்டம்: எல்.ஐ.சி., கோட்ட அலுவலக வளாகம், செல்லுார், மதுரை, தலைமை: தலைவர் ராமநாராயணன், முன்னிலை: மத்தியக்குழு உறுப்பினர் மீனாட்சிசுந்தரம், பாலசுப்பிரமணியன், செயலாளர் சேகர், ஏற்பாடு: அகில இந்திய இன்சூரன்ஸ் பென்ஷனர்கள் சங்கம், மதியம் 1:00 மணி.
பள்ளி, கல்லுாரி நிலையான விவசாயம், மருத்துவ பயன்பாடுகளுக்கான நுண்ணுயிர் கண்டுபிடிப்புகள் பற்றிய சர்வதேச கருத்தரங்கம்: மதுரை காமராஜ் பல்கலை, ஏற்பாடு: பல்கலை நிர்வாகம், இந்திய மைக்ரோலாஜிக்கல் சொசைட்டி, இந்திய நுண்ணுயிரியல் சங்கம், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
ஆராய்ச்சி நெறிமுறைகள் பற்றிய கருத்தரங்கம்: சவுராஷ்டிரா கல்லுாரி,மதுரை, சிறப்புரை: நாகலாந்து பல்கலை உதவிப் பேராசிரியர் பெருமாள்ராஜா, வக்புபோர்டு கல்லுாரி உதவிப் பேராசிரியர் மைதீன், காலை 10:00 மணி.
'ஞயம் பட உரை' தலைப்பில் மாணவர்கள் கலந்துரையாடல்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தொடங்கி வைப்பவர்: முதல்வர் ராஜேஸ்வர பழனிசாமி, காலை 10:30 மணி.
மருத்துவம் இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, சேதுபதி பள்ளி எதிரில், சிம்மக்கல், மதுரை, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை.
இலவச காது பரிசோதனை, காது கேட்கும் கருவி பயிற்சி: குளோபல் ஹியரிங் ஏய்டு சென்டர், 7, டாக்டர் சத்தார் ரோடு, அண்ணா நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.
மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: மாநகராட்சி தொடக்கப் பள்ளி, தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.
விளையாட்டு 29 வது ராஜாமணி, கனகமணி அம்மாள் நினைவு மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப், காலை 7:00 மணி.
மாநில அளவிலான பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள்: எஸ்.எம்.டி., மகால், மேலமடை, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் அசோசியேஷன், காலை 9:00 மணி.

