sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி// டிச.6 க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி// டிச.6 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி// டிச.6 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி// டிச.6 க்குரியது


ADDED : டிச 06, 2025 05:53 AM

Google News

ADDED : டிச 06, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.

கும்பாபிஷேக விழா: முக்தீஸ்வரர் கோயில், தெப்பக்குளம், மதுரை, யாகசாலை பூஜைகள், காலை 8:00 மணி முதல்.

பக்தி சொற்பொழிவு 45 நாள் சம்பூர்ண கீதா பாராயணம், யாகம்: கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, தலைமை: ரத்னமாலா, முன்னிலை: ஷியாம்சுந்தர், விநாயகர், கிருஷ்ணர், லட்சுமி அஷ்டோத்திரங்கள், பத்மநாப குரு ஸ்தோத்திரம், பூர்ணாஹுதி, காலை 7:30 மணி.

தாயுமானவர்: நிகழ்த்துபவர் - கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - சுவாமி பிரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, விளக்கவுரை, காலை 7:00 மணி, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 9:15 முதல்.

சொற்பொழிவு, கூட்டுப்பிரார்த்தனை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மாலை 7:00 முதல் 8:30 மணி வரை.

பொது கம்பன் விழாவும், அவ்வை - பாரதி விழாவும்: துர்காம்மா நினைவு அரங்கம், வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, தலைமை: மதுரைக் கல்லுாரி வாரிய செயலர் நடனகோபால், முன்னிலை: திண்டுக்கல் கம்பன் கழகத் தலைவர் சுந்தரராஜன், பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி, சிறப்புரை: மதுரைக் கல்லுாரி முதல்வர் சுரேஷ், மாலை 5:00 மணி, ஏற்பாடு: மதுரைக் கம்பன் கழக அறக்கட்டளை, பாலா நந்தகுமார் குழுவினரின் வஞ்சமகள் சூர்ப்பனகை நாட்டிய நாடகம், இரவு 7:00 மணி.

16 வது மாநில பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம்: துவாரகா பேலஸ், பாண்டிகோவில் பின்புறம், மதுரை, தலைமை: மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன், சிறப்பு விருந்தினர்கள்: கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், நுகர்வோர் பணிகள் கூடுதல் பதிவாளர் வீரப்பன், காலை 9:30 மணி, மனநிறைவுக்கான வாழ்வுக்கு பெரிதும் துணையாவது சொத்துக்களா, சொந்தங்களா பட்டிமன்றம், நடுவர்: மகாராஜன், மாலை 5:00 மணி, மாநில நிர்வாகிகள் தேர்வு, ஏற்பாடு: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம், இரவு 7:00 மணி.

'தமிழ்நாட்டில் காந்திய பதிவுகள் கட்டுரைத்தொகுப்பு' நுால் வெளியீடு, கருத்தரங்கம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: தமிழ்நாடு காந்தி நினைவு நிதித் தலைவர் அண்ணாமலை, முன்னிலை: மாநில வரிகள் இணை கமிஷனர் மகேஸ்வரி, ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநர் சொக்கலிங்கம், காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ், ஏற்பாடு: தமிழ்நாடு காந்தி நினைவு நிதி, காந்தி மியூசியம், ராமசாமி நினைவு அறக்கட்டளை, காலை 10:30 மணி.

'பூக்களை நாடி புன்னகை தேடி' - உலக மாற்றுத்திறனாளிகள் விழா: மீனாட்சி கல்லுாரி, மதுரை, தலைமை: உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா, முன்னிலை: மாவட்ட மாற்றுத்திறன் நல அலுவலர் சுவாமிநாதன், சிறப்பு விருந்தினர்: நகைச்சுவை நடிகர் மதுரை முத்து, ஏற்பாடு: ஐஸ்வர்யம் டிரஸ்ட், காலை 11:30 மணி முதல்.

மாதாந்திர இசை நிகழ்ச்சி: ஓட்டல் பார்ச்சூன் பாண்டியன், மதுரை, பாடுபவர்: லட்சுமி பிரியா, வயலின் - ஹேமலதா, மிருதங்கம் - ராஜாகணேஷ், ஏற்பாடு: ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி முதல்.

வணிகத்திற்கான விரிதாள் குறித்த பயிற்சி பட்டறை - 2ம் நாள்: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், சிறப்பு விருந்தினர்: 'ஆக்கம் செவன்த் மைண்ட் அகாடமி' நிறுவனர் அழகுபாண்டி, காலை 9:45 மணி.

27 வது மதுரை ஆவணப்பட, குறும்பட விழா: லென்ஸ் ஊடக மையம், ஞானஒளிவுபுரம், மதுரை, ஏற்பாடு: மறுபக்கம் அமைப்பு, காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை, மாலை திரையிடுதல்: கலெடாஸ்கோப், அய்யர்பங்களா, மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

இயற்கை சார், மகளிர் சுய உற்பத்தி பொருள்களின் ஆரோக்கிய சந்தை: காந்தி மியூசியம், மதுரை, சிறுதானிய உணவு வகைகள், சுய உதவிக்குழு பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், ஏற்பாடு: கிரீன்பெம் உற்பத்தியாளர்கள் நிறுவனம், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

தென்மாவட்ட விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்: மணியம்மை மழலையர் தொடக்கப் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, முன்னிலை: பொதுச் செயலாளர் அர்ச்சுனன், காலை 10:30 மணி.

பள்ளி, கல்லுாரி மூன்றாம் ஆண்டு விழா, விளையாட்டு விழா: ஏ.பி.டி., துரைராஜ் தொடக்கப் பள்ளி, மதுரை, தலைமை: செயலர் ரமேஷ்பாபு, முன்னிலை: முதல்வர் சிவசங்கரி, காலை 9:30 மணி.

ரத்ததான முகாம்: மீனாட்சி பள்ளி, மதுரை, ஏற்பாடு: பள்ளி நிர்வாகம், அரசு மருத்துவமனை, காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள்: பிரான்ஷ்வா மெய்யர் மெட்ரிக் பள்ளி, திருமங்கலம், காலை 8:30 மணி.






      Dinamalar
      Follow us