ADDED : பிப் 17, 2026 06:46 AM
கோயில் மாசித் திருவிழா: அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, அமாவாசை அபிஷேகம், காலை 11:00 மணி, தத்தனேரியில் மயான பூஜை, இரவு 11:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.
பக்தி சொற்பொழிவு தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் -- டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
பகவத் கீதை: நிகழ்த்துபவர் - நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
பெரியபுராணம்: நிகழ்த்துபவர் -- மல்லிகா, திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
சத்சங்கம், ஆசிரமம் பிரார்த்தனை-சிவத்தலங்கள்: நிகழ்த்துபவர் - காந்திமதி, மீனாட்சி கோயில், தெற்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: தெய்வநெறி கழகம், இரவு 7:00 மணி.
பொது 'அந்த பொன்னான ஒரு மணி நேரம்' தலைப்பில் பேச்சாளர்கள் கூட்டம்: ஜே.சி. ரெசிடன்சி ஓட்டல், மதுரை, சிறப்பு விருந்தினர்: டாக்டர் அமரேஸ்வர் ரெட்டி, ஏற்பாடு: மதுரை ஸ்டார் ரோட்டரி கிளப், மாலை 6:30 மணி.
ஒத்தக்கடை அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: திருமோகூர் கோயில், மதுரை, ஏற்பாடு: தருமையாதீன வித்வான் செல்வம், காலை 11:00 மணி.
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், திருமங்கலம், காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.
பள்ளி, கல்லுாரி விழிப்புணர்வு நிகழ்ச்சி: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைப்பு: கர்ப்பப்பை வாய் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், எச்.பி.வி. தடுப்பூசி பங்கு, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்பு விருந்தினர்: பார்க் பிளாசா குழும நிறுவனர் கண்ணன், பங்கேற்பு: தலைவர் ஜெயராமன், துணை முதல்வர் கிருஷ்ணவேணி, ஏற்பாடு: மகளிர் நல மேம்பாட்டுக்குழு, மகளிர் மாணவர் நலக்குழு, திண்டுக்கல் மாவட்ட ரோட்டரி கிளப், காலை 10:00 மணி.
பன்னாட்டு கருத்தரங்கம்: பாத்திமா கல்லுாரி, மதுரை, தலைப்பு: கவிதைகளில் வாழ்வியல் விழுமியங்களும் பண்பாட்டுக் கூறுகளும், தலைமை: முதல்வர் பாத்திமா மேரி, பேச்சாளர்கள்: சிங்கப்பூர் காந்தி கிராமம் கிராமிய பல்கலை பேராசிரியர் சொக்கலிங்கம் பிரகாசம், கத்தார் ஆம்பல் தமிழ்ச் சங்கத் தலைவர் ரவி கோவிந்தராஜ், ஏற்பாடு: தமிழ் உயராய்வு மையம், நவீனத் தமிழாய்வு இதழ், காலை 9:00 மணி.
கலாசாரங்கள் கடந்த பெண்களின் குரல்கள்- சர்வதேச மாநாடு: லேடி டோக் கல்லுாரி, மதுரை,பேசுபவர்கள்: அமெரிக்க ஹெல்த் செக்யூர் அறக்கட்டளை இயக்குநர் சுதா, அமெரிக்கன் கல்லுாரி முதல்வர் பால் ஜெயகர், ஏற்பாடு: முதுகலை ஆங்கிலத் துறை, ஆராய்ச்சி மையம், பெண்கள் கல்வி மையம், காலை 10:00 மணி முதல் 4:00 மணி வரை.
பயிற்சி வகுப்பு: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைப்பு: உங்கள் மடிக்கணினியை ஒரு தொழில் கருவியாக மாற்றுதல், ப்ளூ பேர்ல் டெக்னாலஜிஸ் நிறுவனர் சாந்தா, திட்டத் தலைவர் பூபதி ராஜா கருப்பசாமி, ஏற்பாடு: இன்ஸ்டிடியூட் இனோவேஷன் கவுன்சில், கணினி பயன்பாடுகள் துறை, காலை 10:00 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா: வீரபாண்டி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, பேசுபவர்கள்: பார்க் பிளாசா நிறுவனர் கண்ணன், செயலாளர் ஆர்.வி.என். கண்ணன், ஏற்பாடு: யாதவர் கல்லுாரி, காலை 11:00 மணி.
பள்ளி மாணவர்களுக்கான புத்தக வாசிப்பு திருவிழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, துவக்கி வைப்பவர்: முதல்வர் ராஜேஸ்வர பழனிச்சாமி, ஏற்பாடு: கல்லுாரி நுாலகம், கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி, காலை 10:30 மணி.
கண்காட்சி ராஜஸ்தான் மேளா - பருத்தி, பட்டு கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

