sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 இன்றைய நிகழ்ச்சி/ ஜன.11 க்குரியது

/

 இன்றைய நிகழ்ச்சி/ ஜன.11 க்குரியது

 இன்றைய நிகழ்ச்சி/ ஜன.11 க்குரியது

 இன்றைய நிகழ்ச்சி/ ஜன.11 க்குரியது


ADDED : ஜன 11, 2026 05:59 AM

Google News

ADDED : ஜன 11, 2026 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் அஷ்டமி சப்பரம் - அம்மன், சுவாமி வீதி உலா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, நகர் வீதிகள், அதிகாலை 5:00 மணி முதல்.

கொடியேற்றம்: செல்லத்தம்மன் கோயில், சிம்மக்கல், மதுரை, சிம்மாசனம் அலங்காரம், இரவு 1:00 மணி.

மார்கழி சிறப்பு பூஜை: முனியாண்டி கோயில், பொன்மேனி, மதுரை, கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை, அதிகாலை 5:00 மணி, காலபைரவர் பூஜை, மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.

சித்திரை நட்சத்திரத்திற்கான மார்கழி விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி.

தை மகம் விளக்கு பூஜை ஆலோசனை கூட்டம்: ஸ்ரீ சாரதா சமிதி, சிம்மக்கல், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், காலை 11:00 மணி.

அஷ்டமி பூஜை: காட்டுப்பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, பைரவருக்கு சிறப்பு பூஜை அலங்காரம், காலை 9:00 மணி.

ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி 22ம் ஆண்டு விழா, குரு பாதுகா பூஜை - காலை 7:30 மணி, உஞ்சவ்ருத்தி காலை 8:00 மணி, ராதாகல்யாண வைபவம், காலை 9:30 மணி, பிராமண கல்யாண மகால், எஸ்.எஸ்.காலனி, மதுரை.

பக்தி சொற்பொழிவு சித்தர்கள் கண்ட கடவுள் ரகசியம்: நிகழ்த்துபவர் -- மதுரைத் திருவள்ளுவர் கழக செயலாளர் திருமாவளவன், மொட்டை பிள்ளையார் கோயில், கீழமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரையில் விருதுநகர், அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, ஹிந்து நாடார்கள் உறவின்முறை பொது பரிபாலன சபை, மாலை 6:00 மணி.

தியானம், சத்ஸங்கம்: நிகழ்த்துபவர் -- வாசிநாதம் சுவாமிகள், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: சித்தர் அகத்தியனார் சித்த யோக தியான மையம், மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.

காலப்புலவன் காளமேகம் பாடல்கள்: நிகழ்த்துபவர் -- இளங்கோ, மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்: நிகழ்த்துபவர் -- சுவாமி குணார்ணவானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை: நிகழ்த்துபவர் -- சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள்: நிகழ்த்துபவர் -- சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.

விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, கூடாரை வெல்லும் சீர்பாசுர வைபவம், மாலை 5:00 மணி.

மார்கழி சத்ஸங்கம், திருப்பள்ளி எழுச்சி, கீதை பாராயணம், பஜனை, புஷ்பாஞ்சலி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி முதல்.

72ம் ஆண்டு பாவை விழா: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவைப் பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் -- முகுந்தராஜன் சுவாமிகள், கூடலழகர் கோயில், மதுரை, காலை 7:30 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் -- ஜகந்நாத ராமானுஜ தாசர், வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, காலை 6:30 மணி, மாலை 6:30 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் -- சுஜாதா, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி.

கூடாரவள்ளி சிறப்பு வழிபாடு, திருப்பாவை பாராயணம்: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 மணி.

கூடாரவள்ளி சிறப்பு வழிபாடு, ஆண்டாள் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் -- ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மாலை 6:00 மணி.

பொது மார்கழி தமிழிசை திருவிழா: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, உரையரங்கம், காலை 10:45 மணி, பாபநாசம் சிவன் பாடல்கள், காலை 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை, அம்புஜம் கிருஷ்ணா பாடல்கள், மாலை 5:30 மணி, உரையரங்கம், மாலை 6:20 மணி, சீர்காழி தமிழிசை மூவர், மாலை 6:30 மணி, பாரதியார் பெரியசாமி துாரன் பாடல்கள், ஏற்பாடு: திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி அறக்கட்டளை, இரவு 7:30 மணி,

சண்டீ ஹோம பூஜைகள்: விஸ்வாஸ் கருத்தரங்கு கூடம், வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, சக்ர நவாவரண பூஜை, காலை 9:00 மணி, கமலாத்மிகா மந்திர ஸஹித சண்டீ ஹோமம், ஏற்பாடு: புதுக்கோட்டை ஸ்வயம்பிரகாச அவதுாத சதாசிவ அறக்கட்டளை, மாலை 5:30 முதல் இரவு 8:30 மணி வரை.

74வது ஆண்டு கொண்டாட்டம், இசை, கலை விழா: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, இசை நிகழ்ச்சி: பாட்டு - குருசரண், வயலின் - - சம்பத், மிருதங்கம் -- ரமேஷ், கஞ்சிரா -- ஸ்ரீராம் ரமேஷ், ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், மாலை 6:00 மணி.

விவேகானந்தர் பிறந்தநாள் விழா, பொங்கல் விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: கல்வி அலுவலர் நடராஜன், 'இளைஞர்களின் வழிகாட்டி சுவாமி விவேகானந்தர்' சிறப்புரை: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முன்னாள் இணைப்பேராசிரியர் ஜெயக்கொடி, முதல்வர் தேவதாஸ் தலைமையில் நம் வாழ்வில் நிலையான மகிழ்ச்சி தருவது ஆரோக்கியமா பணமா பட்டிமன்றம், காலை 10:00 முதல் மதியம் 1:15 மணி வரை.

அரசு உதவிபெறும் கல்லுாரி அலுவலர் சங்க மண்டல மாநாடு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, முன்னிலை: அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி, தலைமை: மண்டலத் தலைவர் வீரவேல்பாண்டி, பங்கேற்பு: எம்.எல்.ஏ., மாரிமுத்து, காலை 9:30 மணி முதல்.

ராஜபாளையம் பி.ஏ.சி., ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லுாரியில் 1983 பேட்ச் முன்னாள் மாணவர் சந்திப்பு: தமிழ்நாடு ஓட்டல், மதுரை, மதியம் 3:00 மணி முதல்.

ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் மதுரை ஒருங்கிணைப்புக்குழு 19 வது ஆண்டு விழா: அருணாச்சலம் -கமலாம்பாள் ஆடிட்டோரியம், காமராஜர் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: போலீஸ் துணை கமிஷனர் திருமலை குமார், டாக்டர் சபரின், காலை 10:00 மணி.

வண்டியூர் கண்மாய்க்கு வரும் பறவைகள் பற்றிய பறவை நோக்குதல் நிகழ்ச்சி: வண்டியூர் பூங்கா, மதுரை, சிறப்புரை: டாக்டர் பத்ரி, ஏற்பாடு: தென்றல் நகர் குடியிருப்போர் சங்கம், மதியம் 3:30 மணி.

பொங்கல் திருவிழா: தேசம் கார்டன், பொய்கைக்கரைப்பட்டி, அழகர்கோவில், முன்னிலை: விழாத் தலைவர் முருகேசன், ஏற்பாடு: மதுரை சிவில் என்ஜினியர்கள் சங்கம், காலை 10:00 மணி.

பள்ளி, கல்லுாரி விருதுநகர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி 77 வது ஆண்டுவிழா: வி.எம்.ஜே., பள்ளி வளாாகம், புதுராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம், மதுரை, சிறப்பு விருந்தினர்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன், பங்கேற்பு: தலைவர் ஜெயமாணிக்கம், தாளாளர் உதயசங்கரலிங்கம், தலைமையாசிரியர் ஜெயசிங், மாலை 5:00 மணி முதல்.

என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம் நிறைவு விழா: சமுதாயக்கூடம், சீகுப்பட்டி, தலைமை: முதல்வர் சிவாஜி கணேசன், ஏற்பாடு: எஸ்.எல்.எஸ்., எம்.ஏ.வி.எம்.எம்., ஆயிரவைசியர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., பிரிவு, காலை 11:00 மணி.

மருத்துவம் இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, மதுரை, காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை.

புற்றுநோய் விழிப்புணர்வு, இலவச பரிசோதனை முகாம்: ரோட்டரி லஹாரி மெட்ரிக் பள்ளி வளாகம், பீ.பிகுளம் உழவர் சந்தை அருகில், மதுரை, ஏற்பாடு: கார்க்கினோஸ் ஹெல்த்கேர், ஓடைக்கருப்பணசாமி சேரிட்டபிள் டிரஸ்ட், காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை.

ரத்ததான முகாம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசிவீதி, மதுரை, பங்கேற்பு: தாளாளர் வரதராஜன், ஏற்பாடு: குருதிக்கொடைக் கழகம், காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்: கலையரங்கம், சிந்தாமணி, மதுரை, ஏற்பாடு: மதுரை சேவாபாரதி, அரசு மருத்துவமனை ரத்த வங்கி, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

கண்காட்சி பிரில்லியன்ஸ் வைர ஜூவல்லரி ஷோ: ஜோயாலுக்காஸ் ஜூவல்லரி, மேலவெளி வீதி, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு:மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.

பர்னிச்சர் திருவிழா, தள்ளுபடி விற்பனை: பூங்காமுருகன் கோயில் மண்டபம், தமுக்கம் அருகில், மதுரை, ஏற்பாடு: தென்காசி பரணி பர்னிச்சர், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us