sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி/ ஜன.7 க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி/ ஜன.7 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி/ ஜன.7 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி/ ஜன.7 க்குரியது


ADDED : ஜன 07, 2026 06:39 AM

Google News

ADDED : ஜன 07, 2026 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.

மகம் நட்சத்திரத்திற்கான மார்கழி விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி.

பக்தி சொற்பொழிவு திருவருட்பா: நிகழ்த்துபவர் -- பார்வதியம்மாள், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி,

திருப்பாவை: நிகழ்த்துபவர் -- சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

திருப்பாவை ஸேவித்தல், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி, நகர ஸங்கீர்த்தனை, கூட்டுப்பிரார்த்தனை, காலை 6:30 மணி முதல்.

மார்கழி சத்ஸங்கம், திருப்பள்ளி எழுச்சி, கீதை பாராயணம், பஜனை, புஷ்பாஞ்சலி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி முதல்.

72 வது ஆண்டு பாவை விழா: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவைப் பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.

தேசிய இளைஞர் தின விழா: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, சிறப்பு சொற்பொழிவு: நிகழ்த்துபவர்கள் -- தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்தானந்தஜி மகராஜ், திருவேடகம் விவேகானந்தா கல்லுாரி முன்னாள் முதல்வர் வன்னியராஜன், ராணி லேடி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லுாரி மாணவர்கள், சாரதா வித்யாவனம் பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சி, காலை 10:00 மணி முதல்.

திருப்பாவை: நிகழ்த்துபவர் - - முகுந்தராஜன் சுவாமிகள், கூடலழகர் கோயில், மதுரை, காலை 7:30 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் -- ஜகந்நாத ராமானுஜ தாசர், வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, காலை 6:30 மணி, மாலை 6:30 மணி.

* திருப்பாவை: நிகழ்த்துபவர் -- சுஜாதா, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி.

பொது '2026 - புதிய தமிழகம் வெல்லும்' தலைப்பில் 7வது மாநில மாநாடு: பாண்டி கோயில் ரோடு, ரிங்ரோடு, மதுரை, தலைமை: தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ஷியாம் கிருஷ்ணசாமி, ஏற்பாடு: புதிய தமிழகம் கட்சி, மதியம் 3:00 மணி.

சண்டீ ஹோம பூஜைகள்: விஸ்வாஸ் கருத்தரங்கு கூடம், வசுதாரா வளாகம், 84, திருப்பரங்குன்றம் ரோடு, ஆண்டாள்புரம், மதுரை, சக்ர நவாவரண பூஜை, காலை 9:00 மணி, திரிபுர பைரவி மந்திர ஸஹித சண்டீ ஹோமம், ஏற்பாடு: புதுக்கோட்டை ஸ்வயம்பிரகாச அவதுாத சதாசிவ அறக்கட்டளை, மாலை 5:30 முதல் இரவு 8:30 மணி வரை.

ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் 183வது ஜெயந்தி இசை, இலக்கிய, கலை விழா: ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் சங்கீத மஹால், தெப்பக்குளம், மதுரை, சுவாமிகள் அலங்காரம்: ஊஞ்சல் சேவை, தலைமை: தலைவர் ஞானப்பிரபாகரன், சிறப்பு விருந்தினர்: பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.ஆர்.மஹாலட்சுமி, காஞ்சனா சுரேந்திரநாத் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி: மாலை 5:30 மணி, ரமேஷ் குழுவினரின் தீபகேளிகை, கோலாட்ட நிகழ்ச்சிகள், மாலை 6:30 மணி, விழா ஏற்பாட்டாளர்கள், சேவையாளர்களை கவுரவித்தல், இரவு 8:15 மணி.

74 வது ஆண்டு கொண்டாட்டம், இசை, கலை விழா: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, சுபாஸ்ரீ தணிகாசலம், திரையிசைப் பாடல்களில் ஆன்மிகம், ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், மாலை 6:00 மணி.

மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் விழா: சின்மயா மிஷன், 7 வது குறுக்குத்தெரு, டோக் நகர், மதுரை, வழங்குபவர்: விஜயா, ஆசியுரை: சுவாமி சிவயோகானந்தா, காலை 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

லயன்ஸ் கிளப் ஆப் மதுரை ஆலவாய் இயக்குநர்கள் குழு சந்திப்பு கூட்டம் : ஜெயவிலாஸ் ஓட்டல், 78, கீழ ஆவணி மூல வீதி, மதுரை, தலைமை: தலைவர் சுந்தர்ராஜன், சிறப்பு விருந்தினர்: கேபினட் கூடுதல் பொருளாளர் ராதாகிருஷ்ணன், இரவு 8:01 மணி.

பள்ளி, கல்லுாரி சர்டிபிகேட் கோர்ஸ் கிளினிக்கல் மேனேஜ்மென்ட் சிஸ்டம் கருத்தரங்கம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: தாளாளர் குமரேஷ், முன்னிலை: முதல்வர் ஸ்ரீனிவாசன், ஏற்பாடு: நுண்ணுயிரியியல் துறை, மதியம் 2:30 மணி.

முத்தமிழ் மாநாடு 2026 தொடக்க விழா: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: நான்காம் தமிழ்ச்சங்க செயலாளர் மாரியப்பமுரளி, மாநாடு மலர் வெளியிடுபவர்: உலக திருக்குறள் பேரவை மதிப்பியல் தலைவர் கார்த்திகேயன், இயற்றளமிழ் அரங்கம் சிறப்பு அமர்வுகள், காலை 10:00 மணி.

'தொழிற்முறை படிப்புகளுக்கான வேலைவாய்ப்புகள்' பற்றிய கருத்தரங்கம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, கவுரவ விருந்தினர்கள்: இந்திய பட்டயக்கணக்காளர்கள் நிறுவன தொழில் ஆலோசனைக்குழுத் தலைவர் துர்கேஷ் குமார் காப்ரா, மதுரைக் கிளை தலைவர் சதீஷ்குமார், ஏற்பாடு: கல்லுாரி வர்த்தகம், ஆராய்ச்சி மையம், காலை 10:30 மணி.

'பொருட்கள் சந்தையில் வளர்ந்து வரும் போக்குகள்' கருத்தரங்கம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: மேலாண்மைத்துறை, காலை 9:00 மணி.

சீகுபட்டி, மஞ்சம்பட்டி ஊராட்சிகளில் சிறப்பு முகாம்: பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, காலை 10:00 மணி, 'மாணவர்களின் சமுதாயப் பங்கு' சிறப்புரை: மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி உதவிப்பேராசிரியர் ராஜேந்திரன், காலை 11:15 மணி, மன ஒருமைப்பாடு பயிற்சி: அளிப்பவர் - - தியாகராஜர் கல்லுாரி திட்ட அலுவலர் செல்வக்குமார், மதியம் 2:00 மணி, கிராம சுயஉதவிக்குழுவினரிடம் மாணவர்கள் கலந்துரையாடல், மாலை 4:00 மணி, கலை நிகழ்ச்சிகள், ஏற்பாடு: எஸ்.எல்.எஸ்., எம்.ஏ.வி.எம்.எம்., ஆயிரவைசியர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., பிரிவு, மாலை 6:00 மணி.

சமத்துவ பொங்கல் விழா மற்றும் நுால் வெளியீட்டு விழா: அருள் ஆனந்தர் கல்லுாரி, கருமாத்துார், செக்கானுாரணி, எழுத்தாளர் திருமலை எழுதிய 'மதுரை மாட்டுத்தாவணி பொங்கல்' நுால் வெளியிடுபவர்: அமைச்சர் மூர்த்தி, தலைமை: முதல்வர் அன்பரசு, 'தமிழ்ப் பண்பாடும், பொங்கல் விழாவும்' சிறப்புரை: திருவனந்தபுரம் தமிழ் சங்க செயலாளர் மோதிலால் நேரு, ஏற்பாடு: மதுரை தமிழர் ஆய்வு மையம், கல்லுாரி நிர்வாகம், காலை 11:00 மணி.

தமிழ் கூடல் விழா: பி.கே.என்., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருமங்கலம், தலைமை: செயலர் செல்வராஜ், முன்னிலை: தலைவர் சுரேஷ் கண்ணா, குத்து விளக்கு ஏற்றுபவர்: தலைமை ஆசிரியை குருவம்மாள் தங்கரதி, சிறப்புரை: கல்வியாளர் காயத்ரி, பரிசளிப்பவர்: புலவர் சங்கரலிங்கம், இலக்கிய நாடகம் கலை நிகழ்ச்சி, ஏற்பாடு: பள்ளி நிர்வாகம், மதுரை இளங்கோ முத்தமிழ் மன்றம், மதியம் 3:00 மணி.

மருத்துவம் இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, மதுரை, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை.

கண்காட்சி கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு:மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.

பர்னிச்சர் திருவிழா, தள்ளுபடி விற்பனை: பூங்காமுருகன் கோயில் மண்டபம், தமுக்கம் அருகில், மதுரை, ஏற்பாடு: தென்காசி பரணி பர்னிச்சர், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us