sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : ஜூன் 20, 2025 12:28 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

ஆனி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு விசேஷ அபிஷேகம், ராஜ அலங்காரம், தேங்காய் சாத படையல்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.

சஞ்ஜீவினி வழிபாடு: சன்மார்க்க சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 5:15 மணி.

சர்ச் திருவிழா - கொடியேற்றம்: இடைவிடா சகாய அன்னை சர்ச், அஞ்சல்நகர், மதுரை, மாலை 6:15 மணி.

பக்தி சொற்பொழிவு

திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், திருவள்ளுவர் மன்றம், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், சோமசுந்தரம் குடியிருப்பு, மதுரை, மாலை 5:00 மணி.

திருக்குறள்: நிகழ்த்துபவர் - பெரியகருப்பன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

சத்சங்கம், பிரார்த்தனை, சிவபுராணம், லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துவோர் - கீதாபவனம் பாராயணக்குழு, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, மாலை 6:00 மணி.

பொது

அறுபடை வீடுகளின் அருட்காட்சி: ஜெயலலிதா திடல், பாண்டிக் கோயில் அருகே, ரிங் ரோடு, மதுரை, ஏற்பாடு: ஹிந்து முன்னணி, காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் முகாம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 10:00 மணி.

'இணையத் தமிழ் - கற்றலும் படைத்தலும்' தலைப்பில் தமிழ்க்கூடல்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: சங்க இயக்குநர் அவ்வை அருள், சிறப்புரை: உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லுாரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சபானா பர்வீன், ஏற்பாடு: தமிழ் உயராய்வு மையம், யாதவர் கல்லுாரி, காலை 11:00 மணி.

சமூக நீதிக் கதையாடல்களுக்கு தோற்பாவைக் கூத்துக் கலைஞர்களை தயார்படுத்தும் பயிலரங்கம்: மதுரை காமராஜ் பல்கலை, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை, காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

பள்ளி, கல்லுாரி

கவிதைத் திறனாய்வு: செந்தமிழ்க் கல்லுாரி, தமிழ்ச் சங்கம் ரோடு, மதுரை, தலைமை: கல்லுாரி உதவிப் பேராசிரியர் மலர்விழி, திறனாய்வு செய்பவர்: விரிவுரையாளர் அதிவீரபாண்டியன், 'மழை நின்ற தருணங்கள்' புத்தக அறிமுகம், ஏற்புரை: கவிஞர் வினோத் பரமானந்தன், ஏற்பாடு: நான்காம் தமிழ்ச் சங்கம், கல்லுாரியின் பாண்டியன் நுாலக வாசகர் வட்டம், மதியம் 1:30 மணி.

சர்வதேச யோகா தினம்: சவுராஷ்டிரா கல்லுாரி, விளாச்சேரி, மதுரை, தலைமை: கல்லுாரி செயலாளர் குமரேஷ், பயிற்சி அளிப்பவர்: அர்ஜுன் சிங். காலை 10:00 மணி.

கண்காட்சி

கட்டடக்கலை கட்டுமான பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மதுரை கட்டட சங்கம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்க்கிடெக்ட்ஸ் - மதுரை மையம், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us