ADDED : அக் 24, 2025 02:31 AM
கோயில் கும்பாபிஷேகம்: வீரராகவ பெருமாள் கோயில், வண்டியூர், மதுரை, காலை 9:48 முதல் 10:28 மணிக்குள்.
கும்பாபிஷேகம்: வீரபத்ர சப்தமாதாசுவாமி கோயில், தெற்கு மாசிவீதி, காலை 9:00 மணி.
புரட்டாசி திருவிழா: முத்துநாயகி அம்மன் கோயில், பரவை, அம்மன் பச்சைக் குடில் ஆராதனையுடன் நகர்வலம், இரவு 7:00 மணி, பொங்கல் வைத்தல், மோட்டார் வாகன ஓட்டுநர் - நடத்துனர் நலச்சங்கம் வழங்கும் அரிச்சந்திரா நாடகம், இரவு 10:00 மணி.
ஐப்பசி முதல் வெள்ளி சிறப்பு அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, மதுரை, சுவாமிக்கு விசேஷ அபிஷேகங்களுடன் அதிகார தோரணை அலங்காரம், இரவு 7:00 மணி.
அனுஷ வைபவத்தை முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவர் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி, தீபாராதனை: எஸ்.எம்.கே., திருமண மண்டபம், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.
ராகு கால பூஜை: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, காலை 10:30 மணி.
ராகு கால பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.
கந்த சஷ்டி விழா மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, கூடல்குமாரர் சன்னதியில் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனை, காலை 7:00 மணி, கோலாட்ட உற்ஸவம்: அம்மன் ஆடி வீதிகளில் உலா, மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் கொலுச்சாவடி, மாலை 6:00 மணி.
சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், யாகசாலை பூஜை, சண்முகார்ச்சனை, காலை 8:00 மணி, சுவாமி புறப்பாடு, கலை நிகழ்ச்சிகள், மாலை 5:00 மணி.
முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், யாகசாலை பூஜை, காலை 8:30 மணி, சண்முகர் அர்ச்சனை, காலை 10:00 மணி, யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, காலை 11:00 மணி, பழநி முருகன் சந்தன அலங்காரம், மாலை 6:00 மணி.
மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மதுரை, சத்ரு சம்ஹார ஹோமம், கலசபூஜை, ருத்ராபிஷேகம், காலை 8:30 மணி, மயில்வேல் முருகன் அலங்காரம், லட்ச்சார்ச்சனை, மாலை 4:00 மணி.
பக்தி சொற்பொழிவு திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
லலிதா சஹஸ்ரநாம பாராய ணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், இரவு 7:00 மணி.
ஹரே ராமா மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி.
குமாரஸ்த்வம், சஷ்டி கவசங்கள், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், திருப்புகழ், சுப்ரமணியர் புஜங்கம், வேல் மாறல்: நிகழ்த்துவோர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.
பள்ளி, கல்லுாரி தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி: அரசு சட்டக் கல்லுாரி, மதுரை, தலைமை: மாநில சட்டக் கல்வி இயக்குநர் விஜயலட்சுமி, சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.விஜயகுமார், ஒருங்கிணைப்பு: கல்லுாரி முதல்வர் குமரன், காலை 9:15 மணி.
தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு: அல்ட்ரா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி, மதுரை, தலைமை: அல்ட்ரா அறக்கட்டளை சேர்மன் ஆறுமுகம், சிறப்பு விருந்தினர்: எச்.சி.எல்., டெக் சைபர் செக்யூரிட்டி திட்ட மேலாண்மை நிபுணர் கோபிநாத் சுந்தரராஜன், காலை 10:00 மணி.
பொதுக் கொள்கை, பொது நிர்வாகத்தில் வளர்ந்து வரும் போக்குகள் - கருத்தரங்கு: மதுரை காமராஜ் பல்கலை, தலைமை: இந்திய பொது நிர்வாக நிறுவனம் மதுரைக் கிளை சேர்மன் ராஜகோபால், சிறப்பு விருந்தினர்: ஓய்வுபெற்ற அமெரிக்கன் கல்லுாரி முதுகலை, ஆராய்ச்சி பொருளாதாரத் துறை தலைவர் முத்துராஜா, ஏற்பாடு: அரசியல் அறிவியல் துறை, காலை 10:30 மணி.
பொது 17வது 'ரோஜ்கர் மேளா' - அரசு வேலை பெற்றவர்களுக்கு நியமன ஆணை வழங்குதல்: மடீட்சியா அரங்கு, மதுரை, சிறப்பு விருந்தினர்: மத்திய இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ், காணொலி வாயிலாக பிரதமர் மோடி சிறப்புரை, காலை 9:30 மணி.
ஓய்வூதியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் எதிரில், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் பாண்டிவேல், ஏற்பாடு: தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம், காலை 10:15 மணி.
'ஐ பாம்பு' நுால் வெளியீடு: அர்பன் ஸ்பைஸ், கே.கே.நகர், வெளியிடுபவர்: நுாலாசிரியர் விஷ்வா நாகலட்சுமி, ஏற்பாடு: புக் கில்டு ஆப் மதுரை, மாலை 5:30 மணி.
விளையாட்டு யோனெக்ஸ், சன்ரைஸ் அகில இந்திய பாட்மிட்டன் ரேங்கிங் போட்டி - தகுதிச்சுற்று: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மதுரை, பாவூஸ் அகாடமி, சின்ன உடைப்பு, குரு பாட்மின்டன் அகாடமி, திருப்பரங்குன்றம், எஸ்.பி.ஜே., ஸ்போர்ட்ஸ் ஆர்பிட், அவனியாபுரம், மதுரை, காலை 7:00 மணி.
வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான மாணவிகள் பிரிவு கபடி : தாய் மெட்ரிக் பள்ளி, வாடிப்பட்டி, ஏற்பாடு: பள்ளிக்கல்வித்துறை, காலை 8:00 மணி.

