ADDED : ஜன 05, 2026 05:43 AM
கோயில் திருஅத்யயன உற்ஸவம் - ராப்பத்து 7ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், காலை 7:30 மணி.
திருஅத்யயன உற்ஸவம் - ராப்பத்து 7ம் நாள்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், காலை 7:30 மணி, திருப்பாவை: நிகழ்த்துபவர் - சுஜாதா, மாலை 6:00 மணி.
பூசம் நட்சத்திரத்திற்கான மார்கழி விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.
பக்தி சொற்பொழிவு மார்கழி சத்சங்கம், திருப்பள்ளி எழுச்சி, கீதை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி, இணையில்லா ஹிந்துமதம்: நிகழ்த்துபவர் - சண்முக ஞானசம்பந்தன், தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் - முகுந்தராஜன் சுவாமிகள், கூடலழகர் கோயில், மதுரை,காலை 7:30 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் - ஜகந்நாத ராமாநுஜ தாசர், வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை,மாலை 6:30 மணி,
விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.
திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
மார்கழி பாவை விழா: பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவை பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை, திருப்பாவை - மார்கழி பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 7:00 மணி, சிவபுராணம் பாராயணம், இரவு 7:00 மணி
திருப்பாவை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி, நகர சங்கீர்த்தனம், கூட்டு பிரார்த்தனை, காலை 6:30 மணி.
பொது மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன் குமார், காலை 10:00 மணி.
புவனேஸ்வரி மந்த்ர சஹித சண்டீ ஹோமம்: விஸ்வாஸ் கருத்தரங்கு கூடம், வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: புதுக்கோட்டை ஸ்வயம் பிரகாச அவதுாத சதாசிவ அறக்கட்டளை, காலை 9:00 முதல் 11:30 மணி வரை, மாலை 5:30 முதல் இரவு 8:30 மணி வரை.
74வது ஆண்டு கொண்டாட்டம், இசை, கலை விழா: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, பாட்டு - வித்யா, வயலின் - அட்டுகல் பாலசுப்பிரமணியம், மிருதங்கம் - பிரசாத், கஞ்சிரா - உடுப்பி ஸ்ரீகாந்த், ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், மாலை 6:00 மணி.
மீண்டும் மஞ்சப்பை - பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு: ஆலத்துார், மதுரை, தலைமை: யாதவர் கல்லுாரி முதல்வர் ராஜூ, பங்கேற்பு: கல்லுாரி தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், துணை முதல்வர் கிருஷ்ணவேணி, சுயநிதிப்பிரிவு இயக்குநர் ராஜகோபால், ஓட்டல் பார்க் பிளாசா சேர்மன் கே.பி.எஸ்.கண்ணன், ஏற்பாடு: வேதியியல் துறை, காலை 11:00 மணி.
ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் 183வது ஜெயந்தி இசை, இலக்கிய, கலை விழா: ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் சங்கீத மஹால், தெப்பக்குளம், மதுரை, சுவாமிகள் அலங்காரம்: பகவத் பாகவதர் சேவை, தலைமை: கீதா நடன கோபால நாயகி மந்திர் தலைவர் ஞானப்பிரபாகரன், செயலாளர் கீதாபாரதி, சிறப்பு விருந்தினர்: மதுரை காந்தி என்.எம்.ஆர்., சுப்பராமன் மகளிர் கல்லுாரி தலைவர் ஜவஹர்பாபு, மாலை 5:30 மணி, நீலாராவ் குழு இசை நிகழ்ச்சி, மாலை 6:30 மணி, ஆனந்தி பூர்ண சந்திரன் குழு வீணை கச்சேரி, இரவு 7:30 மணி.
பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலக வளாகம், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் மாரி, ஏற்பாடு: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம், மாலை 5:30 மணி.
வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பேச்சியம்மன் படித்துறை ஆறு முச்சந்தி, மதுரை, தலைமை: மாவட்ட செயலாளர் சாமி, ஏற்பாடு: இந்திய கம்யூ., ஏ.ஐ.டி.யு.சி., காலை 10:30 மணி, தீயணைப்பு நிலையம் அருகே, மேல அனுப்பானடி, மதுரை, ஏற்பாடு: இந்திய கலாச்சார நட்புறவு கழகம், காலை 9:30 மணி, அண்ணா மெயின் வீதி, பெத்தானியாபுரம், மதுரை, ஏற்பாடு: சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம், மாலை 5:00 மணி.
மருத்துவம் இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, மதுரை, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை.
கண்காட்சி வைர நகைகள் கண்காட்சி, விற்பனை: ஓட்டல் கோர்ட் யார்ட் மேரியட், மதுரை, ஏற்பாடு: சலானி ஜூவல்லரி, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.
பர்னிச்சர் திருவிழா, தள்ளுபடி விற்பனை: பூங்கா முருகன் கோயில் மண்டபம், தமுக்கம் அருகே, மதுரை, ஏற்பாடு: தென்காசி பரணி பர்னிச்சர், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

