ADDED : ஜன 30, 2026 06:35 AM
கோயில் தெப்ப உற்ஸவம் 10ம் நாள் -- தெப்பம் முட்டுதள்ளுதல்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன், சுவாமி தங்கபல்லக்கில் எழுந்தருளி அம்மன் சன்னதி தெரு, கீழ மாசிவீதி, சுவாமி சன்னதி தெரு, முனிச்சாலை ரோடு, காமராஜர் சாலை, தெப்பக்குளம் சுற்றி, முக்தீஸ்வரர் கோயில் வந்தடைதல், காலை 9:00 மணி, அம்மன், சுவாமி ரிஷப வாகனத்தில் முக்தீஸ்வரர் கோயிலில் இருந்து புறப்பட்டு, தெப்பக்குளம் ரோடு, காமராஜர் சாலை,கீழ மாசிவீதி, வெங்கல கடைத் தெரு, தெற்காவணி மூலவீதி, சொக்கப்ப நாயக்கர் தெரு, சித்திரை வீதிகளில் எழுந்தருளுதல், மாலை 5:00 மணி.
தைப்பூசத் திருவிழா: சோலைமலை கோயில், அழகர்கோவில், யாக சாலை பூஜைகள், காலை 8:30 மணி, உற்ஸவ மூர்த்திக்கு அபிஷேகம், காலை 10:30 மணி, சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு, மதியம் 12:30 மணி, குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, மாலை 6:00 மணி.
தை மூன்றாம் வெள்ளி- அபிஷேகம், பூஜை: முனியாண்டி சுவாமி கோயில், 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.
பிரதோஷ வழிபாடு -- நந்தி அபிஷேகம்: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், பெத்தானியாபுரம், மதுரை, மதியம் 3:30 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்: யோக விநாயகர் கோயில், நீர்வளத்துறை பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம் மதுரை, கணபதி ஹோமம், ஏற்பாடு: நீர்வளத்துறை பொதுப்பணித்துறை பணியாளர்கள் மற்றும் விழா கமிட்டியினர், காலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் -- டாக்டர் கோகுல்நாத். சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
திருக்குறள்: நிகழ்த்துபவர் -- பகவதி சந்தானம், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
ஸ்ரீமத் நாராயணீயம் பாராயணம், காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, காலை 9:00 - 12:00.
பள்ளி, கல்லுாரி பள்ளி ஆண்டு விழா - -மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்குதல்: எஸ்.பி.ஜே. மெட்ரிக் பள்ளி, கல்குளம், அவனியாபுரம், சிறப்பு விருந்தினர்: போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் வனிதா, மாலை 5:30 மணி.
தகவல் அமைப்பு, தரவுப் பாதுகாப்பு குறித்த பயிலரங்கம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் சீனிவாசன், செயலாளர் குமரேஷ், பேசுபவர்கள்: டி.வி.எஸ்., சென்சிங் சொல்யூஷன்ஸ் மேலாளர் சூரியநாராயணன், துணை மேலாளர் சதீஷ் சுந்தர், ஏற்பாடு: வணிக நிர்வாக முதுகலை துறை, காலை 9:30 மணி.
நெகிழி இல்லா பசுமை எதிர்காலம் நோக்கி: கூழப்பாண்டி கிராமம், வாழ்த்துரை: யாதவர் கல்லுாரி தலைவர் ஜெயராமன், தலைமை: முதல்வர் ராஜூ, ஏற்பாடு: வணிகவியல் தகவல் தொழில் நுட்பத்துறை, காலை 10:30 மணி.
கைவினை கரவேல்- மாணவர்கள் கலந்துரையாடல்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: முதல்வர் பழனிச்சாமி, ஏற்பாடு: கல்லுாரி நுாலகம், காலை 10:30 மணி, தேசிய தொழுநோய் விழிப்புணர்வு, சிறப்பு விருந்தினர்கள்: வலையங்குளம் சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், நாகமலை புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் செந்தில் கருப்பையா, ஏற்பாடு: இளைஞர் செஞ்சிலுவை சங்கம், காலை 11:00 மணி.
பொது காந்தி 78வது நினைவு நாள்: காந்தி மியூசியம், மதுரை, காந்தி சிலைக்கு மாலை அணிவித்தல் காலை, 9:30 மணி, காந்திய பணிச் செம்மல் விருது வழங்கல், தலைமை: செயலாளர் நந்தாராவ், முன்னிலை: பொன்முகம் அறக்கட்டளை நிறுவன தலைவர் மீனாட்சி சுந்தரம், மாணவர்களுக்கான போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தடகம், ஏற்பாடு: இளைஞர் செஞ்சிலுவை சங்கம், மதுரை ரோட்டரி கிளப், காலை, 10:30 மணி.
காந்தி நினைவு நாள் சிறப்பு சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், குமாரசாமி ராஜா தெரு, செனாய்நகர், மதுரை, தலைமை: செயலாளர் மோகன், பங்கேற்பு: காந்திய சிந்தனையாளர் சோமசுந்தரம், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம் (செப்சிரா) , சேவாலயம் மாணவர் இல்லம் , மாலை 6:00 மணி.
மனித சங்கிலி இயக்கம்: தமுக்கம் முதல் காந்தி மியூசியம் வரை, மதுரை, தலைமை: ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன், முன்னாள் அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வம், ஏற்பாடு: தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை, காலை 10:00 மணி.
விழிப்புணர்வு முகாம், பரிசளிப்பு விழா: அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, யா.ஒத்தக்கடை, போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கல், ஏற்பாடு: மாவட்ட காவல் துறை, மதுவிலக்கு அமலாக்கம், காலை 10:00 மணி.
திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா: லதா மாதவன் பொறியியல் கல்லுாரி, கிடாரிப்பட்டி, பங்கேற்பு: நிறுவன தலைவர் டத்தோ மாதவன், மதுரை வேலை வாய்ப்பு, பயிற்சி துறை துணை இயக்குனர் கண்ணன், காலை 10:00 மணி.
மருத்துவம் பொது மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிக்குளம், மதுரை, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.
கண்காட்சி கிரடாய் பேர்புரோ மதுரை 2026 - கட்டுமான நிறுவனங்களின் கண்காட்சி தொடக்க விழா: தமுக்கம் மைதானம், மதுரை, துவக்குபவர்கள்: முன்னாள் மாநில தலைவர் இளங்கோவன், மாநில செயலாளர் ஸ்ரீகுமார், எஸ்.பி.ஐ., வங்கி துணை பொது மேலாளர் அமித்ரஞ்சன், காலை 10:00 மணி, கண்காட்சி நேரம்: இரவு 9:00 மணி வரை.
விளையாட்டு இளைஞர் விளையாட்டுத் திருவிழா : மாவட்ட அளவிலான தடகள, கபடி, வாலிபால், கேரம் போட்டிகள் துவக்கம்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 7:00 மணி.
