ADDED : பிப் 01, 2026 06:25 AM
கோயில் தெப்ப உற்ஸவம் 12ம் நாள் - தெப்பத்திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாரியம்மன் தெப்பக்குளத்தில் எழுந்தருளுதல், காலை 8:30 மணி, அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும், சுவாமி தங்கக் குதிரை வாகனத்தில் கோயிலுக்கு திரும்புதல், இரவு 10:00 மணி.
தைப்பூசத் திருவிழா: சோலைமலை கோயில், அழகர்கோவில், யாக சாலை பூஜைகள், அதிகாலை 4:00 மணி, சுவாமி சிம்மாசனத்தில் புறப்பாடு, காலை 8:00 மணி, தைபூசம் அபிஷேகம், காலை 8:30 மணி, சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு, மாலை 3:45 மணி, கொடி இறக்கம், சுவாமி கோயில் திரும்புதல், மாலை 4:15 மணி.
தைப்பூசத்தை முன்னிட்டு பால்குடம் எடுத்தல், ஆண்டி பாலகர் கோயில், செம்மினிபட்டி, காலை 10:30 மணி.
தைப்பூச விழா: யோக விநாயகர் கோயில், விளத்துார், காலை 8:30 மணி.
தைப்பூசம்-அபிஷேகம்: காட்டு பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, காலை 8:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் : யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: நீர்வளத்துறை பொதுப் பணித்துறை பணியாளர்கள் மற்றும் விழா குழுவினர், காலை 7:00 மணி.
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, ஞான ஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு சுவாமி அத்புதானந்தர் ஜெயந்தி: நிகழ்த்துபவர் -- சுவாமி குணார்ணவானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
சச்சினாந்தம்: நிகழ்த்துபவர் -- சுந்தர கண்ணன், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் -- சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால் தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்சனம் விளக்கவுரை, காலை 9:15 மணி, சுவாமி சமானந்தரின் தாயுமானவர் பாடல்கள் விளக்கவுரை, இரவு 7:00 மணி.
தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் -- டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பிரார்த்தனை: நிகழ்த்துபவர்-ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 11:00 மணி.
பொது தென்மண்டலத்திற்கான த.வெ.க., தேர்தல் அறிக்கை குழு கருத்து கேட்பு: டிவின்ஸ் மஹால், அண்ணா நகர், மதுரை, பங்கேற்பு: நிர்வாகி அருண்ராஜ், காலை 9:30 மணி.
மன்னர் திருமலை நாயக்கர் 443வது பிறந்தநாள்-அ.தி.மு.க., மரியாதை: திருமலை நாயக்கர் மஹால் வளாக சிலை, மதுரை, பங்கேற்பு: முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, கடம்பூர் ராஜூ, உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., காலை 10:00 மணி.
திருமலை நாயக்கர் 443வது பிறந்தநாள்-மாலை அணிவிப்பு: திருமலை நாயக்கர் மஹால் வளாக சிலை, மதுரை, தலைமை: மாமன்னர் திருமலை நாயக்கர் சமூக நலச்சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், காலை 9:00 மணி.
காந்திய சிந்தனை சான்றிதழ் வகுப்பு: ஆரோலேப், வீரபாஞ்சான், தலைமை: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், காலை 9:30 மணி.
என்.எஸ்.எஸ்.முகாம்: ஆலாத்துார், படிப்பை இடைநிறுத்திய குழந்தைகள் கணக்கெடுப்பு, ஏற்பாடு: யாதவா கல்லுாரி, காலை 7:00 மணி, சுய விழிப்புணர்வு, ஒருங்கிணைப்பாளர்: தமிழ் உயராய்வு மைய துறைத்தலைவர் பரந்தாமன், மதியம் 2:30 மணி.
கருவின் ஆரோக்கியம் குறித்த கருத்தரங்கு: ப்ரீத்தி மருத்துவமனை, உத்தங்குடி, மதுரை, பேசுபவர்கள்: டாக்டர்கள் நித்யா, தீபிகா, பாவஹரன், மாலதி, ஏற்பாடு: மகப்பேறியல், குழந்தை மருத்துவ துறைகள், காலை 9:00 மணி.
கண்காட்சி கிரடாய் பேர்புரோ மதுரை 2026 -கட்டுமான நிறுவனங்களின் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

