ADDED : பிப் 02, 2026 05:18 AM
கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.
பக்தி சொற்பொழிவு வில்லிபாரதம் -அர்ஜூனன் தீர்த்த யாத்திரை: நிகழ்த்துபவர் - திருச்சி கல்யாணராமன், ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.
சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத். சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
பள்ளி, கல்லுாரி தமிழ் நேற்று, இன்று, நாளை சிறப்பு வகுப்பு-விரிவாக்கப்பணி: ஸ்ரீராம் நல்லமணி யாதவா பெண்கள் மேல்நிலை பள்ளி, திருப்பாலை, மதுரை, தலைமை: யாதவர் கல்லுாரி முதல்வர் ராஜூ, சிறப்பு விருந்தினர்: பார்க் பிளாசா குழும நிறுவனர் கண்ணன், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம், பேசுபவர்: தல்லாகுளம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பஞ்சவர்ணம், கல்லுாரி வளாகம், காலை 10:00 மணி.
சுவாமி விவேகானந்தர் மதுரைக்கு வருகை புரிந்ததை நினைவுகூறும் வகையில் அவரது சிலைக்கு மரியாதை: மதுரைக் கல்லுாரி மேல்நிலைப்பள்ளி, ஆர்.எம்.எஸ்., ரோடு, மதுரை, தலைமை: தலைமையாசிரியர் பாலாஜி ராம், முன்னிலை: நேதாஜி சுவாமிநாதன், மரியாதை செய்பவர்: யோகா ஆசிரியர் அர்ஜூன் சிங், காலை 10:00 மணி.

