ADDED : பிப் 06, 2026 06:20 AM
கோயில் கும்பாபிஷேகம்: சங்கையா மாரியம்மன் கோயில், பழைய குயவர்பாளையம் ரோடு, மதுரை, காலை 9:15 மணி முதல் 10:00 மணிக்குள்.
தை கடைசி வெள்ளி சிறப்பு பூஜை: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, விளாங்குடி, இரவு 7:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.
மாசி புரவி எடுப்புத் திருவிழா: இளங்காமுடி அய்யனார் கோயில், கம்பூர், மேலுார், மாலை 5:00 மணி.
தை வெள்ளி விளக்கு பூஜை: காஞ்சி சங்கர மடம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 5:30 மணி.
108 விளக்கு பூஜை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மாலை 6:30 மணி.
106 ஆம் ஆண்டு பெருவிழா-கொடியேற்றம்: புனித லுார்து அன்னை கோயில், கே.புதுார், மதுரை, மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு வில்லிபாரதம் -கிருஷ்ணன் துாது: நிகழ்த்துபவர் -திருச்சி கல்யாணராமன், ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.
விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
திருக்குறள்: நிகழ்த்துபவர் -- பகவதி சந்தானம், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் -- டாக்டர் கோகுல்நாத். சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
2270 வது வார அமைதி பிரார்த்தனை: நிகழ்த்துபவர்- சமூக சிந்தனையாளர் ராமமூர்த்தி, சேவாலயம் மாணவர் இல்லம், செனாய்நகர், மதுரை, ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், சேவாலயம் மாணவர் இல்லம், மாலை 6:00 மணி.
பொது நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வலியுறுத்தி பிப். 12ல் நடக்கவுள்ள பொது வேலை நிறுத்தம், மறியல் குறித்து விளக்கப் பிரசார கூட்டம்: அரசு போக்குவரத்து அலுவலக தலைமையகம், பைபாஸ் ரோடு, மதுரை, ஏற்பாடு: சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., உள்ளிட்ட தொழிற் சங்கங்கள், மாலை 6:00 மணி.
சர்வசமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமிராஜா தெரு, ஷெனாய்நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை, நட்புறவு வளர்ச்சி மையம் (செப்சிரா), மாலை 6:00 மணி முதல்.
பள்ளி, கல்லுாரி தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் விழா: அரசு ஆதிதிராவிடர் நலமேனிலைப் பள்ளி, இளமனுார், தலைமை: தலைமையாசிரியர் கனகலட்சுமி, முன்னிலை: ஆசிரியர் தேவி, சிறப்புரை: பாவாணரின் கொள்ளுப் பேரன் சிவாப்பாவாணர், பேசுபவர் : தமிழாசிரியர் நாகேந்திரன், காலை 9:30 மணி.
பட்டமளிப்பு விழா: அரசு கலை, அறிவியல் கல்லுாரி, திருமங்கலம், தலைமை: முதல்வர் சிங்காரவேலன், சிறப்பு விருந்தினர் மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன், காலை 11:00 மணி.
பெண்களுக்கான கொண்டாட்டம்- 2026: பாத்திமா கல்லுாரி, மதுரை, காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.
நிலையான வணிக நடைமுறைகள், உலகளாவிய போட்டித்திறனில் இந்திய அறிவு அமைப்புகளின் பங்கு என்ற தலைப்பில் தேசிய மாநாடு: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் ஹரி தியாகராஜன், முன்னிலை: முதல்வர் பாண்டி ராஜா, பேசுபவர்கள்: மைசூரு கல்வி, நலச்சங்க டீன் பாரதீஷ் ராவ், பெங்களூரு மேவா வான்கார்ட் வணிகப் பள்ளி இணை பேராசிரியர் பத்மா, ஏற்பாடு: வணிகவியல் முதுகலை, ஆராய்ச்சித் துறை, வணிக நிர்வாகத் துறை, காலை 9:30 மணி.
விளையாட்டு விழா: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், சிறப்பு விருந்தினர்: முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் சவுந்தரராஜன், காலை 8:30 மணி முதல் மாலை 6:15 மணி வரை.
கண்காட்சி வீட்டு உபயோக பர்னிச்சர் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.
தாய்லாந்து சர்வதேச ஷாப்பிங் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

