ADDED : பிப் 19, 2026 05:46 AM
கோயில்
மாசி மகம் தெப்பத்திருவிழா - விஷ்வக்சேனர் புறப்பாடு: கூடலழகர் கோயில், மதுரை, அங்குரார்ப்பணம், இரவு 7:00 மணி.
மாசி பெருந்திருவிழா - திருக்கல்யாணம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, காலை 10:30 முதல் 11:30 மணிக்குள், பிரசாதம் வழங்குதல், மதியம் 12:00 மணி, முளைப்பாரி, மஞ்சள் நீராட்டு, இரவு 11:50 மணி.
குருவாரத்தை முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவர் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு புஷ்பாஞ்சலி: மஹா பெரியவர் கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.
பக்தி சொற்பொழிவு
தமிழர்களின் தாய்மதம் - சங்க காலத்தின் சமயம் எது (பகுதி 2): நிகழ்த்துபவர் - ரெங்கன் ஜி, விஸ்வாஸ் கருத்தரங்கு கூடம், வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: ராம சமாஜம், மாலை 6:30 மணி.
திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
சொல் வணக்கம், வில் வணக்கம் - சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - எழுத்தாளர் சுபா, மதுரை திருவள்ளுவர் மன்றம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி.
தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
ராமகிருஷ்ணர் ஜெயந்தி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 11:15 மணி, ஆரத்தி, சிறப்பு பஜனை, மாலை 6:30 மணி.
அகண்ட ஹரே ராமா மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி.
பிரஷ்ண உபநிஷத்: நிகழ்த்துபவர் - ஸ்ரீகாந்த், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
சிவநாம வேள்வி, தலைப்பு: குருவே சிவம், இசையரங்கம், களக்காடு சகோதரர்கள் ஆர்.தியாகராஜன், ஆர். சீனிவாசன், மாலை 5:00 மணி, அருளுரை: நெரூர் சாஸ்தா விதயாசங்கர சரஸ்வதி சுவாமிகள், இரவு 6:50 மணி. அபிநவ வித்யாதீர்த்த சபா மண்டபம், சாரதாம்பாள் கோயில் வளாகம், சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை.
பள்ளி, கல்லுாரி
கல்லுாரிகளுக்கு இடையேயான பல்திறன் போட்டி: விவேகானந்த கல்லுாரி, திருவேடகம், தலைமை: முதல்வர் கார்த்திகேயன், ஏற்பாடு: இயற்பியல் துறை, காலை 9:30 மணி.
வணிகவியல் மன்றம் தொடக்க விழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரி துணை முதல்வர் சந்திரசேகரன், ஏற்பாடு: வணிகவியல் முதுகலை ஆராய்ச்சி துறை, காலை 10:30 மணி.
பட்ஜெட் பகுப்பாய்வு, பொருளாதார சீர்திருத்தம் - கருத்தரங்கம்: யாதவா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்பு விருந்தினர்: ஓட்டல் பார்க் பிளாசா நிறுவனர் கே.பி.எஸ்.கண்ணன், கருத்துரை: ஆடிட்டர் பார்த்தசாரதி, ஏற்பாடு: வணிகவியல் துறை, காலை 11:00 மணி, தாய்மொழி நாள் விழா - சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - கவிஞர் கோவிந்தராசு, காலை 10:00 மணி.
பொது
எண்மர் போற்றும் எண் குணத்தான் - குருவே சிவம்: அபிநவ வித்யா தீர்த்த சபா மண்டபம், சிருங்கேரி சாரதா அம்பாள் கோயில், பைபாஸ் ரோடு, மதுரை, இசையரங்கம் - நிகழ்த்துபவர்: தியாகராஜன், சீனிவாசன், மாலை 5:00 மணி, உரையரங்கம் - நிகழ்த்துபவர்: நெரூர் வித்யாசங்கர சரஸ்வதி சுவாமிகள், ஏற்பாடு: சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சார்ய மஹாசமஸ்தானம் தட்சிணாம்னாய சாரதா பீடம், மாலை 6:50 மணி.
ம.தி.மு.க., சார்பில் நிதியளிப்பு விழா: ஓட்டல் தமிழ்நாடு, அழகர்கோவில் ரோடு, மதுரை, தலைமை: பூமிநாதன் எம்.எல்.ஏ., சிறப்புரை: பொதுச்செயலாளர் வைகோ, காலை 10:00 மணி.
அலுவலக உதவியாளர்களுக்கு கிராம உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு உடை அணிந்து வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் சாக்ரடீஸ், ஏற்பாடு: வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம், காலை 10:00 மணி.
பள்ளி மாணவர்களுக்கான புத்தக வாசிப்பு திருவிழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: கல்லுாரி நுாலகம், கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி, காலை 10:30 மணி.
மின்குறை தீர் கூட்டம்: தெற்கு கோட்ட மின் செயற்பொறியாளர் அலுவலகம், பவர்ஹவுஸ் ரோடு, சுப்பிரமணியபுரம், மதுரை, காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

