sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : பிப் 26, 2026 06:09 AM

Google News

ADDED : பிப் 26, 2026 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

மாசி மகம் தெப்பத்திருவிழா - 7ம் நாள்: கூடலழகர் கோயில், மதுரை, எடுப்புச் சப்பரத்தில் உபய நாச்சியாருடன் வேணுகோபாலன் திருக்கோலத்தில் மாடவீதி புறப்பாடு, இரவு 7:00 மணி.

மாசிப் பெருந்திருவிழா - 6ம் நாள்: இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை, திருஞானசம்பந்தருக்கு பாலுாட்டியது, காலை 10:00 மணி, சைவ சமய வரலாற்று கழுவேற்ற லீலை, இரவு 8:30 முதல் 9:30 மணிக்குள்.

குரு வார சிறப்பு பூஜை: மஹா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மகா பெரியவர் விக்ரகம் சிறப்பு பூஜை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - வாசிநாதம் அடியார்கள், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.

சாரதாதேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

அகண்ட ஹரே ராமா மஹா மந்திர கீர்த்தனை: நாமத்வார் பிரார்த்தனை மையம், திருப்பாலை, காலை 8;00 மணி முதல்.

பள்ளி, கல்லுாரி

'தமிழர் பண்பாடு, சைவ சித்தாந்தம்' கருத்தரங்கம்: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தொடக்க விழா, காலை 9:30 மணி, 'சைவ கோயில்களின் வழிபாட்டு முறைகள்' சிறப்புரை: மதுசூதனன், காலை 11:15 மணி, 'சைவ சித்தாந்தம் கழுகுப் பார்வை' சிறப்புரை: பேராசிரியர் அருணகிரி, மதியம் 1:30 மணி, 'அனுதின வாழ்வில் சைவ சித்தாந்தம்' சிறப்புரை: பேராசிரியர் செந்தில்குமார், மதியம் 2:45 மணி, கலை நிகழ்ச்சிகள், மாலை 4:30 மணி முதல்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வெற்றிக்கனி எட்டிப் பிடி நிகழ்ச்சி: சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மதுரை, தலைமை: தலைமை ஆசிரியர் நாராயணன், சிறப்புரை: பெரிய நாச்சி கல்வி அறக்கட்டளை நிறுவனர் உச்சி மகாலிங்கம், முன்னிலை: நேதாஜி சுவாமிநாதன், மாலை 4:00 மணி.

'செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் மூலம் இயற்பியல் கற்றலும் சிக்கல்களைத் தீர்க்கும் திறனை வளர்த்தலும்' சொற்பொழிவு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலைப் புதுக்கோட்டை, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: சேது பொறியியல் கல்லுாரி உதவிப்பேராசிரியர்கள் பபிதா, ரேணுகா தேவி, ஏற்பாடு: முதுநிலை மற்றும் ஆராய்ச்சி இயற்பியல் துறை, காலை 10:00 மணி.

பரிவர்த்தனை பகுப்பாய்வு கருத்தரங்கு: சமூக அறிவியல் கல்லுாரி, அழகர்கோவில் ரோடு, மதுரை, பங்கேற்பு: ஆஸ்திரியாவின் மனவியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிக்மண்ட் பிராய்டு பல்கலை இயக்குனர் அருள், ஏற்பாடு: முதுகலை சமூகப்பணித்துறை, காலை 9:30 மணி.

கிராமப்புற மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு - ஓர் அறிமுகம் கருத்தரங்கம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருப்பாலை, மதுரை, தலைமை: யாதவர் கல்லுாரி முதல்வர் ராஜூ, சிறப்பு விருந்தினர்: பார்க் பிளாசா ஓட்டல் குழுமத் தலைவர் கே.பி.எஸ்.கண்ணன், ஏற்பாடு: யாதவர் கல்லுாரி கணினி பயன்பாட்டியல் துறை, காலை 11:00 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம்: உச்சப்பட்டி, திருமங்கலம் ஒன்றியம், களப்பணி, காலை 9:00 மணி, நாளிதழ் வாசித்தல், மதியம் 2:00 மணி, 'நாட்டுப்பணித் திட்டங்களில் மாணவர்களின் பங்கு' சிறப்புரை: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சமூகவியல் துறைத் தலைவர் சிலம்பரசன், ஏற்பாடு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மாலை 4:00 மணி, கலை நிகழ்ச்சிகள், இரவு 8:00 மணி முதல்.

தேர்வுப் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கான கூட்டம்: முதன்மை கல்வி அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, அரசு பொதுத் தேர்வு குறித்து ஆலோசனை, காலை 9:30 மணி.






      Dinamalar
      Follow us