sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி

/

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


UPDATED : ஜன 09, 2026 10:17 AM

ADDED : ஜன 09, 2026 06:18 AM

Google News

UPDATED : ஜன 09, 2026 10:17 AM ADDED : ஜன 09, 2026 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் மார்கழி கடைசி வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு கவசம், ஆயுததாரி அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.

உத்திரம் நட்சத்திரத்திற்கான மார்கழி விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி.

108 விளக்கு பூஜை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மாலை 6:30 மணி.

பக்தி சொற்பொழிவு மார்கழி சத்சங்கம், திருப்பள்ளி எழுச்சி, கீதை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் - முகுந்தராஜன் சுவாமிகள், கூடலழகர் கோயில், மதுரை, காலை 7:30 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் - சுஜாதா, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி.

திருப்பாவை: நிகழ்த்துபவர் - ஜகந்நாத ராமாநுஜ தாசர், வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, மாலை 6:30 மணி,

விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.

மார்கழி பாவை விழா: பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவை பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.

பள்ளி, கல்லுாரி நிலையான வணிக நடைமுறை இலக்குகள் குறித்து சர்வதேச கருத்தரங்கம்: ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, முன்னிலை: கல்லுாரி இயக்குநர் சுப்பிரமணியன், சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜ் பல்கலை தொழில் வணிகவியற்புலம் துறைத் தலைவர் சிவக்குமார், காலை 10:00 மணி.

விளையாட்டு விழா: அரபிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளி, மதுரை, தலைமை: தலைவர் சந்திரன், முன்னிலை: நிர்வாக இயக்குநர் அபிலாஷ், தொடங்கி வைப்பவர்: ஆர்.டி.ஓ., கருணாகரன், மதியம் 2:30 மணி.

லட்சுமி பள்ளியின் வெள்ளி விழாவை முன்னிட்டு மாணவர்களின் நடமாடும் கலை கண்காட்சி: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை, கோல்டன் லோட்டஸ் வளாகம், புதுார், மதுரை, மதியம் 3:00 முதல் இரவு 8:00 மணி வரை.

செயற்கை நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சி குறித்து கருத்தரங்கம்: மதுரைக் கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி செயலாளர் நடனகோபால், முதல்வர் சுரேஷ், முன்னிலை: பேராசிரியர் தீனதயாளன், ஏற்பாடு: பொருளாதார துறை, காலை 10:00 மணி.

மேல்நிலை, இருபாலர், தொடக்கப் பள்ளிகளின் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள்: சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: கவுன்சில் தலைவர் ராம்நாத், சிறப்பு விருந்தினர்: டாக்டர் ரவிசங்கர், அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் விஜயலட்சுமி, ஏற்பாடு: சவுராஷ்டிரா ஹைஸ்கூல் கவுன்சில், மாலை 4:30 மணி.

சங்கமம் 2026 - நிறைவு விழா: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் ஹரி தியாகராஜன், முன்னிலை: முதல்வர் பாண்டியராஜா, சிறப்பு விருந்தினர்: சினிமா இயக்குநர் தமிழ், மாலை 5:30 மணி.

பொறுப்பு மிகுந்த வாலிபர்கள் - கருத்தரங்கு: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ஸ்ரீனிவாசன், சிறப்பு விருந்தினர்: உளவியலாளர் ருக்மணி தேவி, காலை 10:00 மணி.

முத்தமிழ் மாநாடு: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: சென்னை நிகழ்நாடக மைய நிறுவனர் சண்முகராஜா, முன்னிலை: பேராசிரியர் பூங்கோதை, கருத்தரங்க சிறப்பு அமர்வுகள், நிறைவு விழா - பரிசு வழங்குபவர்: நான்காம் தமிழ்ச்சங்கம் செயலாளர் மாரியப்பமுரளி, காலை 10:00 மணி முதல்.

நாட்டு நலப்பணி திட்டம் - பொது மருத்துவ முகாம்: சீகுப்பட்டி, மதுரை, தொடங்கி வைப்பவர்: கல்லுாரி செயலாளர் ஜெயராமன், ஆலோசனை வழங்குவோர்: மேக்ஸ் ஐ விஷன் டாக்டர்கள், காலை 10:30 மணி, சுய வேலைவாய்ப்பு குறித்து சிறப்புரை வழங்குபவர்: முதல்வர் சரவணன், மாலை 6:30 மணி, மாணவர்கள் கலை நிகழ்ச்சி, ஏற்பாடு: எஸ்.எல்.எஸ்., எம்.ஏ.வி.எம்.எம்., ஆயிர வைசியர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., பிரிவு, இரவு 8:30 மணி.

ஆண்டு விழா கொண்டாட்டம்: மெப்கோ ஷ்லெங்க் மெ ட்ரிக் பள்ளி, திருமங்கலம், தலைமை: தாளாளர் சிங்காரவேல், சிறப்பு விருந்தினர்: டெஸ்ஸால்வ் செமிகன்டக்டர் மூத்த துணை தலைவர் ராஜ குமார், மாலை 4:30 மணி.

பொது 74வது ஆண்டு கொண்டாட்டம், இசை, கலை விழா: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, பாட்டு - ராமகிருஷ்ணன் மூர்த்தி, வயலின் - ஷ்ருதி சாரதி, மிருதங்கம் - சாய்ராம், கஞ்சிரா - ராஜகணேஷ், ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், மாலை 6:00 மணி.

மாதங்கி மந்த்ர சஹித சண்டீ ஹோமம்: விஸ்வாஸ் கருத்தரங்கு கூடம், வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: புதுக்கோட்டை ஸ்வயம் பிரகாச அவதுாத சதாசிவ அறக்கட்டளை, மாலை 5:30 முதல் இரவு 8:30 மணி வரை.

பாரதிதாசன் அறக்கட்டளை விழா: திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, தலைமை: பேராசிரியர் சொக்கலிங்கம், சிறப்பு விருந்தினர்: திருவள்ளுவர் பல்கலை முன்னாள் பேராசிரியர் ஜெகதீசன், காலை 10:30 மணி.

ஓய்வூதியர்களுக்கு எதிரான நிதிச் சட்டப் பிரிவுகளை வாபஸ் பெறக்கோரி தர்ணா போராட்டம்: பி.எஸ்.என்.எல்., அலுவலகம், தல்லாகுளம், மதுரை, தலைமை: ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சங்கரநாராயணன், காலை 10:30 மணி.

நிர்வாக குழுக் கூட்டம்: மதுரை உற்பத்தி திறன் குழு அலுவலகம், மஹபூப்பாளையம், மதுரை, தலைமை: தலைவர் ஜெகன் மோகன், இரவு 7:00 மணி.

தமிழ்க்கூடல்: உலகத் தமிழ்சங்கம், மதுரை, தலைமை: சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, சிறப்பு விருந்தினர்கள்: நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் சங்கர் அழகு, சங்கரன்கோவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் ஹரிஹரன், காலை 10:30 மணி.

தி ரைஸ் அமைப்பு நடத்தும் உலகத் தொழிலதிபர்கள் மாநாடு - உலக தமிழ் ஊடக, தமிழ் தாக்கம் விருது வழங்குதல்: ஐடா ஸ்கட்டர், மதுரை, தலைமை: சினிமா இயக்குநர் பாக்கியராஜ், சிறப்பு விருந்தினர்கள்: அமைச்சர் நேரு, வேல்ஸ் பல்கலை நிறுவனர் ஐசரி கணேஷ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர்கள் பொன்வண்ணன், வேலராமமூர்த்தி, கணேஷ் வெங்கட்ராமன், பேச்சாளர் கோபிநாத், மாலை 6:00 மணி.

குமரப்பா பிறந்தநாள் சிறப்பு சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், சிறப்புரை: குமரப்பா தன்னிறைவு பண்ணையம் பாலச்சந்திரன், மாலை 6:00 மணி.

குடிமக்கள் நுகர்வோர் மன்ற பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் புத்தாக்கப் பயிற்சி: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன் குமார், ஏற்பாடு: உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை, காலை 10:00 மணி.

குடியிருப்போர் நலச்சங்கம் தொடக்க விழா: ஏ.ஆர்.சிட்டி பூங்கா மைதானம், கோவில்பாப்பாக்குடி, மதுரை, தலைமை: பொறியாளர் ஹரிசங்கர், சிறப்பு விருந்தினர்: ஊராட்சி முன்னாள் துணை தலைவர் சோனை, காலை 7:00 மணி.

கட்டுமான தொழிற்சாலைக்கான மனச்சம்பத் விழிப்புணர்வு நிகழ்ச்சி: பாப்பிஸ் ஓட்டல், மாட்டுத்தாவணி ஏர்போர்ட் ரிங் ரோடு, மதுரை, ஏற்பாடு: இந்திய தர நிர்ணய அமைவனம், காலை 9:00 மணி.

நகை வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி: நகைக்கடைக்காரர்கள் சங்க கட்டடம், மதுரை, ஏற்பாடு: இந்திய தர நிர்ணய அமைவனம், மாலை 5:00 மணி.

மருத்துவம் இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, மதுரை, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை.

கண்காட்சி கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை.

பர்னிச்சர் திருவிழா, தள்ளுபடி விற்பனை: பூங்கா முருகன் கோயில் மண்டபம், தமுக்கம் அருகே, மதுரை, ஏற்பாடு: தென்காசி பரணி பர்னிச்சர், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us