UPDATED : மே 16, 2026 11:18 PM
ADDED : மே 16, 2026 11:12 PM
மே 17
கோயில் * பொங்கல் உற்ஸவம்: சப்த கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில், தென்பரங்குன்றம், மதுரை, காப்புகட்டி விரதம் மேற்கொள்ளுதல், மாலை 6:00 மணி.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.
* ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி, சுவாமி சமானந்தரின் தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள் விளக்கவுரை, இரவு 7:00 மணி.
* ஊழையும் உப்பக்கம் காண்பர்: நிகழ்த்துபவர் - சுகுமாரி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* ராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்: நிகழ்த்துபவர் - சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
* நாம சங்கீர்த்தனம்: சத்குரு ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி, சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி.
* உலக அமைதிக்காக ஹரிநாம சங்க உற்ஸவம் - மஹா சங்கீர்த்தனம்: இஸ்கான் மையம், திருப்பாலை, பங்கேற்பு: கீர்த்தன கலைஞர்கள், பக்தர்கள், ஆன்மிக அமைப்புகள், காலை 9:00 மணி முதல்.
பொது * ஹிந்து மதத்தை அழிக்க நினைக்கும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பழங்காநத்தம் ரவுண்டானா, மதுரை, ஏற்பாடு: ஹிந்து முன்னணி, மாலை 4:00 மணி.
* ஹிந்து சமய கலாசாரம், பண்பாடு குறித்த கோடை கால இலவச பயிற்சி வகுப்பு நிறைவு விழா: ஸ்ரீமந் நாயகி சுவாமிகளின் வேதபாடசாலை, சி.எம்.ஆர்., ரோடு, முனிச்சாலை, மதுரை, தலைமை: கீதா நடனகோபால நாயகி மந்திர் தலைவர் ஞானப்பிரபாகரன், சிறப்பு விருந்தினர்: கோபிசன் எம்.எல்.ஏ., ஆசியுரை: பாடசாலை ஆசிரியர் கே.ஆர். ராமச்சாரி, காலை 10:00 மணி.
* யாதவ வரன்கள் - பெற்றோர் சந்திப்பு கூட்டம்: யாதவர் பண்பாட்டுக் கழக திருமண மண்டபம், சர்வேயர் காலனி, மதுரை, ஏற்பாடு: யாதவர் சேவை மையம், காலை 9:00 மணி.
* 'வண்ணங்களும் எண்ணங்களும்' - பேச்சுப் பயிற்சி பட்டறை: மதுரை திருவள்ளுவர் மன்றம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, பயிற்றுநர்: சிவக்குமார், சண்முகத்திருக்குமரன் எழுதிய சிரிப்பு இனிப்பு நுால் அறிமுகம், ஏற்பாடு: மதுரை இலக்கியப் பேரவை, காலை 10:30 மணி.
* மலை அறிதல் பயணம்: அக்னீஸ்வரன் கோயில், தேவங்குறிச்சி, தே.கல்லுப்பட்டி, ஏற்பாடு: மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை, காலை 7:00 மணி.
* மீள்பயன்பாட்டுக் கலை, சதுரங்கம், ஜும்பா நடனம் உள்ளிட்ட பயிற்சிகள் - குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, ஏற்பாடு: பொது நுாலக இயக்ககம், காலை 11:00 மணி முதல், பெண்களுக்கான ஆரி தையல் பயிற்சி, மதியம் 3:00 மணி.
* இலவச மிருதங்கம், ஹார்மோனியம் வகுப்பு: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை.
விளையாட்டு * மாநில அளவிலான கூடைப்பந்து, ஹாக்கி, கபடி போட்டிகளுக்கு 6 முதல் 9ம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களுக்கான தேர்வு: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 7:00 மணி முதல்.
கண்காட்சி * கோடை மேளா - பாதி விலையில் பர்னிச்சர்கள் விற்பனை: மடீட்சியா ஹால், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.
* ஸ்டைல் பஜார் - ஆடைகள், ஜூவல்லரி, காலணிகள் கண்காட்சி, விற்பனை: ஓட்டல் கோர்ட் யார்ட் மேரியட், அழகர்கோவில் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.
