UPDATED : மே 30, 2026 08:37 PM
ADDED : மே 30, 2026 08:33 PM
மே 31
வைகாசி விழா
* கள்ளழகர் கோயில், அழகர்கோவில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாளுக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை, மாலை 5:00 மணி.
* தேரோட்டம் - கூடலழகர் கோயில், மதுரை, பெருமாள் உபய நாச்சியார்களுடன் தேரில் எழுந்தருளல், அதிகாலை 5:30 மணிக்கு மேல் காலை 6:00 மணிக்குள், திருத்தேர் வடம் பிடித்தல், காலை 6:20 மணி, தங்கச் சிவிகையில் எழுந்தருளல், இரவு 7:00 மணி.
* ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், அன்ன வாகனத்தில் அம்மன் வீதியுலா, இரவு 7:00 மணி.
* திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை, அம்மனும், சுவாமியும் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளல், காலை 6:00 மணி, தருமராஜர் பட்டாபிஷேகம், காலை 11:00 மணிக்கு மேல் மதியம் 12:00 மணிக்குள், யானை வாகனத்தில் தருமராஜர் எழுந்தருளல், இரவு 7:00 மணி.
* பாலதண்டாயுதபாணி கோயில், தர்மராஜன் கோட்டை, வாடிப்பட்டி, விசாக விழாவை முன்னிட்டு முளைப்பாரி சீர்வரிசை, மாலை 6:00 மணி.
* சக்திவேல் முருகன் கோயில், சிம்மக்கல், மதுரை, முருகனுக்கு அபிஷேக, ஆராதனை, காலை 8:00 மணி.
* ராஜகாளியம்மன் கோயில், மேட்டுப்புஞ்சை, சிந்தாமணி, மதுரை, அன்னதானம், காலை 10:00 மணி.
கோயில்
* பொங்கல் விழா: சப்தகன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில், தென்பரங்குன்றம், மதுரை, அம்மனுக்கு பொங்கல் வைத்தல், பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தல், காலை 8:00 மணி முதல்.
* பரிவார தெய்வங்களுக்கு சிலை எடுத்து பெரிய கும்பிடு திருவிழா: புனுகு கருப்பசாமி கோயில், பேரையூர், சக்தி கிடா வெட்டுதல், அதிகாலை 5:00 மணி, அன்னதானம், காலை 10:00 மணி முதல்.
* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 4:30 மணி.
* அர்ச்சிப்பு பெருவிழா: புனித லுார்து அன்னை சர்ச், புதுார், மதுரை, முன்னிலை: திருச்சி சலேசிய மறை மாநில தலைவர் தாஸ் கென்னடி, அர்ச்சித்து புனிதப்படுத்துபவர்: மதுரை பிஷப் அந்தோணிசாமி சவரிமுத்து, மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி, சுவாமி சமானந்தரின் தாயுமானவர் சுவாமி பாடல்கள், இரவு 7:00 மணி.
* நன்மை தரும் நவ கோள்கள்: நிகழ்த்துபவர் - பிரேம குமாரி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* அன்னை சாரதா தேவி: நிகழ்த்துபவர் - சுவாமி தயாசாகரானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
* 133வது மஹா பெரியவர் ஜெயந்தி விழா: விஸ்வாஸ் கருத்தரங்கு கூடம், வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, பெரியவர் விக்ரகம், வெள்ளி பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி, பல்துறை சாதனையாளர்களுக்கு மஹா பெரியவர் விருது வழங்கி எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பாராட்டுரை, காலை 10:00 மணி, பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டனின் சொற்பொழிவு, மதியம் 12:00 மணி, சூர்ய நாராயணன் இசை நிகழ்ச்சி, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 6:00 மணி.
பொது
* உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இலவச ஆரோக்கிய கண்காட்சி, விழிப்புணர்வு முகாம்: ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பாரம், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: போலீஸ் துணை கமிஷனர் திவ்யா, பிரம்மா குமாரிகள் தியான நிலைய பொறுப்பாளர் செந்தாமரை, டாக்டர் சாந்தி, துணை நகர சுகாதார அதிகாரி அபிஷேக், போதைப்பொருள் ஒழிப்பு மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கர்ணன், ஏற்பாடு: சிம்மக்கல் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை 9:30 மணி.
* சிந்தனைக் கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: பேராசிரியர் சக்திவேல், முன்னிலை: புரட்சிக் கவிஞர் மன்றம் தலைவர் வரதராஜன், ஆதிசிவம், ஏற்பாடு: மாமதுரை கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.
* சவுராஷ்டிர மொழி பயின்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா: மே ப்ளவர் ஹால், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் துணை பதிவாளர் சத்தியமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., கோபிசன், ஏற்பாடு: சவுராஷ்டிரா ஹெரிடேஜ் சேர், ராஜ்கோட் சவுராஷ்டிரா பல்கலை, மதுரை சவுராஷ்டிரா சாஹித்ய சதஸ், காலை 10:00 மணி.
* குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம் நிறைவு விழா: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, ஏற்பாடு: பொது நுாலக இயக்ககம், காலை 11:00 மணி முதல்.
* யாதவ வரன்கள் - பெற்றோர்கள் சந்திப்பு கூட்டம்: யாதவர் திருமண தகவல் மையம், 308ஏ, வடக்குமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: யாதவ வாலிபர் சங்கம் ராஜசேகர், காலை 10:00 மணி.
மருத்துவம்
* தோல் லேசர் நவீன மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.
* ரெட் கிராஸ் நிறுவனர் ஜீன் ஹென்றி டுணான்ட் நினைவை போற்றும் வகையில் அரசு மருத்துவமனைக்கு குருதி கொடை விழா: மணியம்மை மழலையர் தொடக்கப்பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட கிளை, பள்ளி, காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை.
விளையாட்டு
* திருநகர் கைப்பந்து போட்டி - 2026: கைப்பந்து மைதானம், அண்ணா பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: பேன்யன் பவுண்டேஷன், எம்.ஜி.ஆர்., கைப்பந்து அகாடமி, திருநகர் யூத் கிளப், காலை 6:00 மணி.
