UPDATED : ஜூன் 26, 2026 01:32 PM
ADDED : ஜூன் 25, 2026 10:03 PM
கோயில்
* ஆனி ஊஞ்சல் உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, நுாறு கால் மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஊஞ்சலில் எழுந்தருளி பொன்னுாஞ்சல் பாடுதல், மாலை 6:00 மணி.
* ஆனி 2ம் வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு ராஜ அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, இரவு 7:00 மணி.
* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.
* ஆனி மாத புரவி எடுப்பு திருவிழா, செங்குண்ட அய்யனார் கோயில், அ.வல்லாளபட்டி, மதியம் 2 :45 மணி.
பக்தி சொற்பொழிவு
* திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* பகவத்கீதை - விபூதி யோகம்: நிகழ்த்துபவர் - சுவாமி சிவயோகானந்தா, பிராமண கல்யாண மஹால், பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: சின்மயா மிஷன், பிராமண கல்யாண மஹால் டிரஸ்ட், மாலை 6:30 முதல் இரவு 7:45 மணி வரை.
* லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
* பகவத்கீதை - அத்தியாயம் 2: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பொது
* பொதுக்குழுக் கூட்டம்: கே.ஜி.எஸ்., கல்யாண மண்டபம், டி.வி.எஸ்., நகர், மதுரை, தலைமை: கிளைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஜெய்ஹந்த்புரம் கிளை, மாலை 4:00 மணி, பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பவர்: மதுரை கல்லுாரி வாரிய பொருளாளர் ஆனந்த சீனிவாசன், மாலை 4:30 மணி.
* தேர்தல் வெற்றி, முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கிடா விருந்து, அன்னதானம்: பாண்டி கோயில், மதுரை, துவக்கி வைப்பவர்: அமைச்சர் நிர்மல் குமார், ஏற்பாடு: புறநகர் த.வெ.க., காலை 10:00 மணி.
* பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்: ராஜாஜி சிலை, திருமங்கலம், ஏற்பாடு: இந்திய மாதர் தேசிய சம்மேளனம் புறநகர் மாவட்ட குழு, காலை 11:00 மணி.
* சர்வ சமய அமைதிப் பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செயலாளர் மோகன், அருட்செய்தி வழங்குபவர்: ஜமா ஆத்தே இஸ்லாமிக் ஹிந்த் பி.ஆர்.ஓ., ஆவல் பீர், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி.
* சுய வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்பு: காந்தி மியூசியம், மதுரை, பயிற்றுநர்: மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், காலை 10:00 மணி, சர்வ சமய வழிபாடு: தலைமை - மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மாலை 4:00 மணி.
மருத்துவம்
* உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை.
கண்காட்சி
* அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
* கோ-ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா, தள்ளுபடி விற்பனை: அங்கயர்கண்ணி கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, வெங்கலக்கடை தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.
* மான்சரோவர் - ஆடவர் ஆடைகள் தள்ளுபடி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர் மெயின் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.
