UPDATED : ஜூன் 28, 2026 09:39 PM
ADDED : ஜூன் 28, 2026 08:33 PM
கோயில்
* ஆனி ஊஞ்சல் உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, முப்பழ பூஜை, மதியம் 12:30 மணி, நுாறு கால் மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஊஞ்சலில் எழுந்தருளி பொன்னுாஞ்சல் பாடுதல், மாலை 6:00 மணி, வெள்ளிக்குதிரை, சிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் சித்திரை வீதி புறப்பாடு, இரவு 7:15 மணி.
* ஆனி பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்புவீதி, பாண்டியராஜபுரம் மேட்டுத் தெரு, பெத்தானியாபுரம், மதுரை, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம், பவுர்ணமி பூஜை, இரவு 7:15 மணி.
* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.
பக்தி சொற்பொழிவு
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* பகவத்கீதை - விபூதி யோகம்: நிகழ்த்துபவர் - சுவாமி சிவயோகானந்தா, பிராமண கல்யாண மஹால், பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: சின்மயா மிஷன், பிராமண கல்யாண மஹால் டிரஸ்ட், மாலை 6:30 முதல் இரவு 7:45 மணி வரை.
* சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி
* இயற்கை விவசாயம், உரங்களின் சமச்சீர் பயன்பாடு குறித்து ஒருநாள் பயிற்சி பட்டறை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை, மதுரை, ஏற்பாடு: விளைநிலம் காப்போம் இயக்கம், காலை 10:00 மணி.
* தமிழ் மன்ற தொடக்கவிழா: அரசு உயர்நிலைப் பள்ளி, சொக்கம்பட்டி, தலைமை: தலைமையாசிரியர் சுப்பிரமணியன், சிறப்பு விருந்தினர்: இளமனுார் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் மகேந்திர பாபு, மதியம் 3:00 மணி.
* தொல் பழங்குடிகள் - ஒருநாள் கருத்தரங்கம்: செந்தமிழ் கலை மற்றும் கீழ்த்திசைக் கல்லுாரி, மதுரை, தலைமை: நான்காம் தமிழ்ச் சங்கம் செயலாளர் மாரியப்பமுரளி, தொடங்கி வைப்பவர்: வெங்கடேசன் எம்.பி., பங்கேற்பு: தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் காந்திதுரை, செந்தமிழ்க் கல்லுாரி செயலாளர் தசரதராமன், இலக்கிய விமர்சகர் முருகேச பாண்டியன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீரசா, மாவட்ட செயலாளர் பாண்டிய முத்துக்குமரன், காலை 10:00 மணி.
* எல்.கே.ஜி., முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு 'செல்வமகள் சேமிப்பு திட்டம்' ஆரம்பிக்கப்பட்டு பாஸ் புக் வழங்கும் விழா, ஜூன் மாதம் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் விழா: மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, சாத்தமங்கலம், தலைமை: தலைமையாசிரியர் ஜோசப் ஜெயசீலன், சிறப்பு விருந்தினர்கள்: மாநகராட்சி கல்வி அலுவலர் மோகன், மதுரை கிழக்கு வட்டார கல்வி அலுவலர் சாந்தி, எஸ்.எம்.சி., தலைவர் பரமேஸ்வரி, இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சாமிதுரை, முன்னாள் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா, காலை 9:15 மணி.
பொது
* மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: டி.ஆர்.ஓ., அன்பழகன், காலை 10:00 மணி.
மருத்துவம்
* உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, அழகர்கோவில் ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை, இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
கண்காட்சி
* அரசு சித்திரைப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
* கோ-ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா, தள்ளுபடி விற்பனை: அங்கயர்கண்ணி கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, வெண்கலக்கடை தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.
* மான்சரோவர் - ஆடவர் ஆடைகள் தள்ளுபடி விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர் மெயின் ரோடு, மிலன் மால் அருகில், மதுரை, காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.
