UPDATED : ஜூலை 30, 2026 06:34 PM
ADDED : ஜூலை 30, 2026 05:51 PM
ஜூலை 31
கோயில்
* ஆடி பிரம்மோற்ஸவம் - 11ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், உற்ஸவசாந்தி, காலை 8:00 மணி.
* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.
* ஆடி உற்ஸவம் - கொடியேற்றம்: சமயபுரம் மாரியம்மன் கோயில், மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு, மதுரை, அம்மனுக்கு காப்பு கட்டுதல், முளைப்பாரி முத்து பரப்புதல், மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணிக்குள்.
* ஆடி உற்ஸவம்: சந்தனமாரியம்மன் கோயில், சந்தனம் நகர், கண்ணனேந்தல், மதுரை, பொங்கல் வைத்தல், காலை 6:00 மணி, பால்குடம், காலை 7:00 மணி, சக்தி கரகம், அக்னிச்சட்டி எடுத்தல், மாலை 5:00 மணி, பூச்சொரிதல் விழா, இரவு 8:00 மணி.
* கோயில் உற்ஸவம் - கொடியேற்றம்: வனபத்திர காளியம்மன் கோயில், முரட்டன்பத்திரி, மதுரை, காப்பு கட்டுதல், இரவு 7:00 மணி.
* கோயில் உற்ஸவம் - விளக்கு பூஜை: காளியம்மன் கோயில், பொன்னகரம் 2வது தெரு, சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.
* ஆண்டு திருவிழா: செல்வ விநாயகர், முத்துமாரியம்மன் கோயில், 60 அடி ரோடு, செல்லுார், மதுரை, அம்மனுக்கு காப்பு கட்டுதல், காலை 8:00 மணி.
ஆடி வெள்ளி
* மீனாட்சி, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்: மீனாட்சி சொக்கநாதர் கோயில், கோச்சடை, மதுரை, காலை 9:00 மணி.
* அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்: சக்தி விநாயகர் கோயில், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, காலை 10:00 மணி.
* துர்க்கை, தேவி கருமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, காலை 11:30 மணி.
* பெரியநாயகி அம்மன், துர்க்கை அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, காலை 10:30 மணி.
* சந்தான லட்சுமிக்கு திருமஞ்சன அபிஷேகம், புடவை சாற்றுதல், யோக விநாயகர், தங்கமய முருகன் கோயில், சிவகங்கை ரோடு, விளத்துார், மதுரை, காலை 8:30 மணி.
* சுவாமிக்கு ராஜ அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி
* ஆண்டு விளையாட்டு விழா: மகாத்மா மாண்டிசோரி பள்ளிகள், அழகர்கோவில், சிறப்பு விருந்தினர்: மாவட்ட எஸ்.பி., தேவநாதன், ஓ.ஆர்.ஓ.ஆர்., பிளேவர்ஸ், கெமிக்கல்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர், காலை 9:30 மணி.
* 'மரபை மீட்டெடுப்போம்' - இயற்கை சார் நிகழ்ச்சி: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: ரோட்டராக்ட் கிளப், நேச்சர்ஸ் கிளப், சிட்டிசன் கன்ஸ்யூமர் கிளப், மதியம் 12:30 மணி.
* பாரதியார் மன்றம் சார்பில் 'தமிழால் வெல்வோம்' கருத்துரை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்புரை: திருச்சி பள்ளி ஆசிரியர் கமலி, ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 11:30 மணி, எதிர்கால தொழில் வாய்ப்புகள், தொழில் திட்டமிடல் குறித்து கருத்துரை வழங்குபவர்: உதவிப் பேராசிரியர் ஜெகநாதன், ஏற்பாடு: வணிகவியல், கணினி பயன்பாட்டியல் துறை, மதியம் 12:00 மணி.
* மேரி கியூரி தினம் - வேதியியல், அறிவியல் துறையில் சாதித்த முன்னோடி அறிவியலாளர்கள் பங்களிப்பை கொண்டாடுதல்: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்பு விருந்தினர்: ஓட்டல் பார்க் பிளாசா நிறுவனர் கே.பி.எஸ்.கண்ணன், கருத்துரை: தியாகராஜர் கல்லுாரி வேதியியல் துறைத் தலைவர் சாய் கண்ணன், காலை 10:00 மணி, முதலாமாண்டு மாணவர்களுக்கு புத்தாக்க நிகழ்ச்சி, சிறப்பு விருந்தினர்: யாதவா மகளிர் கல்லுாரி பேராசிரியர் சுகப்பிரியா, காலை 11:00 மணி.
பொது
* பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்கள், சிறுபான்மையினருக்கான கடன் மேளா: கலெக்டர் அலுவலகம், மதுரை, பங்கேற்பு: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணன், ஏற்பாடு: பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், காலை 10:30 மணி.
* தி இன்டர்நேஷனல் ஒலிம்பியன் சர்க்கஸ்: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 11:00 மணி, மதியம் 2:00 மணி, மாலை 4:30 மணி, இரவு 7:30 மணி.
* காளியம்மாவின் பார்வையில் - நாட்டிய நிகழ்ச்சி: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, சிறப்பு விருந்தினர்: எம்.எல்.ஏ., ஜெகனாத் மிஸ்ரா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாநில செயலாளர் களப்பிரான், ஏற்பாடு: அசோசியேஷன் நாட்டிய கலாமணி, மாலை 5:30 மணி.
* புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ராஜாஜி சிலை ரவுண்டானா, திருமங்கலம், தலைமை: கிளை தலைவர் மஹபூப்பாஷா, ஏற்பாடு: திருமங்கலம் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம், காலை 10:00 மணி.
* உலக நாட்டிய தினத்தை முன்னிட்டு செவ்வியல், நாட்டுப்புற கலைவிழா: மாரியம்மன் கோயில் கலையரங்கம், ரிசர்வ் லைன், மதுரை, துவக்கி வைப்பவர்: மதுரை ஆகாஷ்வாணி உதவி இயக்குநர் தாராதேவி, சிறப்புரை: காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ், மாலை 5:00 மணி, சிட்டி போலீசாரின் விழிப்புணர்வு, மாலை 5:15 மணி, பரதநாட்டிய கலைஞர் சஹானாவின் நாட்டியம், மாலை 6:00 மணி, மிருதங்கம்: கண்ணன், வாய்ப்பாட்டு: ரங்கநாயகி, வயலின்: துர்கா, ராணி லேடி மெய்யம்மை ஆச்சி தமிழிசைக் கல்லுாரி மாணவியர் பரதநாட்டியம், இரவு 7:20 மணி, ஆனையூர் தங்கபாண்டி குழுவின் தப்பாட்டம், ஏற்பாடு: கலை பண்பாட்டு துறை, மதுரை மண்டல கலை பண்பாட்டு மையம், இரவு 8:00 மணி.
* சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செயலாளர் மோகன், அருட்செய்தி: முன்னாள் போலீஸ் துணை கமிஷனர் மோகன் துரைசாமி, ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி.
மருத்துவம்
* முதுகு தண்டுவட மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் அஸ்வின் தீபக் ராஜன், மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை, விளையாட்டு காயங்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
கண்காட்சி
* அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
