ADDED : செப் 04, 2024 06:52 AM
கோயில்
திரிவேணி விழா: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, பகவத் கீதை பாராயணம், காலை 6:00 மணி, பெரியபுராணம் சிறப்புத் தொடர் விரிவுரை, நிகழ்த்துபவர்: பொள்ளாச்சி தத்துவ ஞான சபை ஆச்சாரியார் சுவாமி வேதாந்த ஆனந்த சரஸ்வதி, காலை 7:00 மணி, தலைமை: தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி, தொடக்கவுரை: ைஹ டெக் அராய் நிறுவன பி.ஆர்.ஓ., சண்முகசுந்தரம், சுவாமி சிவானந்தரின் வாழ்வும், வாக்கும் சொற்பொழிவு - நிகழ்த்துபவர்: ஓய்வுபெற்ற வானொலி நிலைய அறிவிப்பாளர் ஞானசம்பந்தன், மாலை 6:00 மணி.
கும்பாபிஷேகம்: முத்தாலம்மன் கோயில், 66.மேட்டுப்பட்டி, பாலமேடு, காலை 7:00 முதல் 10:25 மணிக்குள், அன்னதானம், காலை 10:30 மணி, வள்ளி திருமண நாடகம், இரவு 10:00 மணி.
சர்ச் பெருவிழா: வேளாங்கண்ணி அன்னை சர்ச், அண்ணா நகர், மதுரை, திருப்பலி -- பாதிரியார் ஜார்ஜ் ஆரோக்கியம், காலை 11:30 மணி, செயின்ட் மேரீஸ் சர்ச் அதிபர் ஹென்றி ஜெரோம், மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவருட்பா: நிகழ்த்துபவர் -- விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
அஷ்டா வக்கிர கீதை: நிகழ்த்துபவர் - ஜனார்த்தனன் பாபு ஜீ, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம்,4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.
ராதா கல்யாணம்: நிகழ்த்துபவர் -- பிரகாஷ் பாகவதர் குழு, நாமத்வார், அய்யர்பங்களா, காலை 8:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.
பொது
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம்: அரசு இயந்திர கலப்பை பணிமனை, நெல்லியேந்தல்பட்டி, ஏற்பாடு: வேளாண்மை பொறியியல் துறை, காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை.
முதலாம் ஆண்டு தொடக்க விழா: சேது பொறியியல் கல்லுாரி, காரியாபட்டி, சிறப்பு விருந்தினர்: பேச்சாளர் ராமகிருஷ்ணன், பங்கேற்பு: கட்டி குருப்ஸ் தலைமை மனிதவள மேலாளர் சஸ்வதி ரே, ஐ ஸ்கொயர் பிசினஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனர் ஜாபர் அலி, கல்லுாரி நிறுவனர் முகமது ஜலீல், காலை 10:00 மணி.
இன்டெர்னல் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்: வைகை பொறியியல் கல்லுாரி, தெற்குத்தெரு, மேலுார், சிறப்பு விருந்தினர்கள்: ஜோஹோ கார்ப்பரேஷன் அலுவலர் ராஜ்குமார், லக்னோ மெட்ரோ மற்றும் தொழில் முனைவோர் நிர்வாகி சுபாஷ், காலை 10:00 உயிர்காக்கும் மருத்துவ செயல் விளக்க கருத்தரங்கம்: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: சிவகங்கை அரசு மருத்துவமனை டாக்டர் பிரதீப், ஏற்பாடு: கல்லுாரி என்.எஸ்.எஸ்., குழு, அப்போலோ ஹாஸ்பிடல் பில்லியன் ஹார்ட்ஸ் பீட்டிங் பவுண்டேஷன், மதியம் 2:30 மணி.
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்குதல்: அம்பிகா தியேட்டர் அருகில், அண்ணாநகர், மதுரை, பங்கேற்பு: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, மாலை 6:00 மணி.
பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: போலீஸ் கமிஷனர் அலுவலகம், கே.புதுார், மதுரை, பொதுமக்கள் போலீஸ் இடையே தகவல் பரிமாற்றத்திற்காக வாட்ஸ் ஆப் சேவை அறிமுகம், பங்கேற்பு: போலீஸ் கமிஷனர் லோகநாதன், காலை 10:30 மணி.
பள்ளி, கல்லுாரி
பெற்றோர் - ஆசிரியர் கூட்டம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர்: துறைத் தலைவர் சிவகாமசுந்தரி, ஏற்பாடு: நுண்ணுரியியல் மற்றும் உயர்த்தொழில் நுட்பவியல் துறை, காலை 10:30 மணி.
இணைய பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அழகுராஜா, ஏற்பாடு: என்.எஸ்.எஸ்., காலை 11:30 மணி.
தமிழ்ப் பசுமை இலக்கியம் - தியோடர் பாஸ்கரன் வகுத்த பாதை குறித்த கருத்தரங்கு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், பங்கேற்பு: பறவையியலாளர் செழியன், முதுகலை தமிழ்த் துறைத் தலைவர் செங்கோல்மேரி, ஏற்பாடு: தமிழ்த் துறை, காலை 9:30 மணி.
விளையாட்டு
பள்ளிகளுக்கு இடையிலான மாவட்ட தடகளப் போட்டி: ரிசர்வ் லைன், மதுரை, சிறப்பு விருந்தினர்: ரோட்டரி கிளப் ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, பங்கேற்பு: சேர்மன் ஜோசப், ஏற்பாடு: ரோட்டரி கிளப் ஆப் மதுரை நார்த் வெஸ்ட், காலை 7:00 மணி.