sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி/ பிப்.,23க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சி/ பிப்.,23க்குரியது

இன்றைய நிகழ்ச்சி/ பிப்.,23க்குரியது

இன்றைய நிகழ்ச்சி/ பிப்.,23க்குரியது


ADDED : பிப் 23, 2024 06:15 AM

Google News

ADDED : பிப் 23, 2024 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

மாசித் திருவிழா - 9ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சட்டத்தேர் - காலை 11:00 மணி, சப்தாவர்ண சப்பரம் - மாலை 6:00 மணி.

மாசி மகம் திருவிழா - கஜேந்திர மோட்சம்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மாலை 4:32 மணி முதல் 5:20 மணி வரை.

மாசி மகம் தெப்பத்திருவிழா - 10ம் நாள்: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, கள்ளழகர் திருக்கோலம் பல்லக்கு புறப்பாடு: மாலை 4:30 மணி, ஏகாந்த சேவை, பல்லக்கில் தெப்பம், முட்டுத்தள்ளுதல், இரவு 7:00 மணி.

மாசிப்பெருந்திருவிழா - தேரோட்டம்: இம்மையில் நன்மைதருவார் கோயில், மதுரை, காலை 8:29 மணி.

மாசி மகம் திருவிழா: சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, சுவாமி, அம்பாள் தபசுக்காட்சி, வீதிஉலா, இரவு 7:00 மணி.

பவுர்ணமி வழிபாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 6:15 மணி.

குருபூஜை, ராமத்தேவர் சித்தர் கோயில், அரிட்டாபட்டி, காலை 7:00 மணி.

சிறப்பு அபிேஷகம் அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் பேங்க் காலனி, விளாங்குடி, இரவு 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

மகாபாரதம்: நிகழ்த்துபவர் - முரளிஜீ பாகவதர், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, மின்வாரிய காலனி, அய்யர்பங்களா, மதுரை, மாலை 6:00 மணி.

திருக்குறள்: நிகழ்த்துபவர் - ராமச்சந்திரன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

பொது

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு, அடையாள அட்டை பெறாதவர்களுக்கான முகாம்: மாநகராட்சி வார்டு 81 - 100 வரை, அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் அலுவலகம், மதுரை, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், காலை 10:00 மணி.

இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவன நியமன விழா: ஐ.சி.ஏ.ஐ., பவன், பழைய நத்தம் ரோடு, மதுரை, தலைமை: சேர்மன் ஜெயகார்த்திகா அரவிந்த், பங்கேற்பு: வடமலையான் மருத்துவமனை சேர்மன் டாக்டர் புகழகிரி, மாலை 4:45 மணி.

தியாகி வைத்தியநாதய்யர் 69வது நினைவு நாள் விழா: என்.எம்.ஆர்.சுப்பராமன் நினைவு உறைவிட ஆரம்பப்பள்ளி, சட்டக்கல்லுாரி அருகில், மதுரை, தலைமை: நீதிபதி ரஜினி, முன்னிலை: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிதுரை, பங்கேற்பு: மதுரை கிழக்கு சரக டி.இ.ஓ., ஜான்சி, எஸ்தர் இந்திராணி, வழக்கறிஞர் மகேந்திரன், 'சீடு' இயக்குநர் கார்த்திக்பாரதி, மாலை 6:00 மணி.

கஸ்துாரிபாய் காந்தி நினைவு நாள், தில்லையாடி வள்ளியம்மை பிறந்தநாள் விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: பொருளாளர் செந்தில்குமார், பங்கேற்பு: காந்திய சிந்தனைக் கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி, அமைதி சங்கத்தலைவர் சரவணன், ஏற்பாடு: காந்தி மியூசியம் மற்றும் செசி அமைதிச் சங்கம், காலை 10:30 மணி.

கோடைகால வர்த்தக சுயதொழில் பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, பங்கேற்பு: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், காலை 10:30 மணி.

தொழில் உறவு மேம்பாடு மற்றும் தொழில் நிறுவன சட்டம் குறித்த இலவச கருத்தரங்கு: மடீட்சியா, மதுரை, பங்கேற்பு: மண்டல தொழிலாளர் ஆணையர் பிரவீன் பாண்டி மோகன் தாஸ், ஏற்பாடு: மடீட்சியா வர்த்தக தகவல் மையம், மாலை 4:30 மணி.

பள்ளி, கல்லுாரி

மாநில பேரிடர் மற்றும் முதலுதவி விழிப்புணர்வு பயிற்சி: அன்னை பாத்திமா கலை அறிவியல் கல்லுாரி, திருமங்கலம், ஏற்பாடு: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, என்.எஸ்.எஸ்., சென்னை, மதுரை காமராஜ் பல்கலை, காலை 10:00 மணி.

திறன் மேம்பாடு தொடர்பாக சர்வதேச கருத்தரங்கு துவக்கம்: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, பேசுபவர்: கலசலிங்கம் பல்கலை துணைத் தலைவர் ஷாசி ஆனந்த், ஏற்பாடு: ஆங்கிலத்துறை, காலை 9:45 மணி.

71 வது விளையாட்டு விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: எம்.பி., வெங்கடேசன், செயலாளர் பிரான்சிஸ்கா புளோரா, முதல்வர் செலின் சகாயமேரி, காலை 8:00 மணி.

இணைய பாதுகாப்பு உங்கள் டிஜிட்டல் தடயங்கள் - கருத்தரங்கு: யாதவர் கல்லுாரி, மதுரை, பேசுபவர்: முன்னாள் செயலாளர் நவநீதகிருஷ்ணன், தமிழ்நாடு மென்பொருள் தொழில்கள் மேம்பாட்டு சங்கம் துணைத் தலைவர் பிரபுராம், ஏற்பாடு: கணினி பயன்பாட்டியல் துறை, மதியம் 2:30 மணி; ஆங்கிலத்துறை கருத்தரங்கு, பேசுபவர்: பேச்சாளர் ஜெகன், காலை 10:20 மணி; மரக்கன்றுகள் வினியோகம், வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு, பேசுபவர்: வீரபாண்டி ஊராட்சி மன்ற தலைவர் சுகப்பிரியா, மதியம் 1:15 மணி.

பட்டமளிப்பு விழா: சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், பட்டம் வழங்குபவர்: மதுரை சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் டாக்டர் குப்புசாமி, காலை 10:00 மணி.

விளையாட்டு

மாநில ஹாக்கி காலிறுதி போட்டிகள்: அண்ணா பூங்கா, திருநகர், ஏற்பாடு: திருநகர் ஹாக்கி கிளப். காலை 6:30 முதல் காலை 9:00 மணி வரை, மாலை 4:30 முதல் மாலை 6:30 மணி வரை.

என்.எஸ்.எஸ்., முகாம்

சுகாதாரம் குறித்த பயிற்சி: மறவபட்டி, ஏற்பாடு: சமூக அறிவியல் கல்லுாரி, மதுரை, தலைமை: மீனாட்சி, நேருயுவ கேந்திரா, மாலை 5:00 மணி.

கண்காட்சி

கட்டுமானம், வீட்டு அலங்கார பொருட்கள் கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை.






      Dinamalar
      Follow us